---Advertisement---

இந்தியாவின் ஏ.எம்.சி.ஏ AMCA திட்டம்! | A Powerful 5th Gen Aircraft

இந்தியாவின் ஏ.எம்.சி.ஏ AMCA
---Advertisement---

இந்தியாவின் ஏ.எம்.சி.ஏ AMCA போர் விமானத் தயாரிப்பு தொடர்பான திட்டப்பணியின் முக்கியத்துவத்தையும், அதன் நிலையையும் பற்றி அறிய முயற்சிப்போம்.

2020 இந்தியா சீனா அசல் எல்லைக் கோட்டுப் பகுதி (LAC)யில் இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தை நிலை நிறுத்தி பலத்தை வெளிப்படுத்திய நேரம்.

இந்திய ராணுவத்திற்கு சப்போர்ட்டாகவும், எல்லையில் வான் கண்காணிப்பை வலுப்படுத்தவும் வேண்டி நான்கு ரஃபேல் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.

ஆனால் நான்கு ரஃபேல் விமானங்களை இந்தியா நிறுத்தியதற்கு பதிலாக பதினைந்து  ஜே ட்வெண்டி ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை நிறுத்தியது சீனா.

ரஃபேல் (RAFALE) ஒரு மிகச்சிறந்த போர் விமானமாகும். ஆனால் ஐந்தாம் தலைமுறை விமானங்களின், டிட்டரன்ஸ், அதாவது எதிரியை தாக்குதலில் இருந்து பின் வாங்கவ்  வைக்கும் திறன் அவற்றிற்கு இருக்காது.

இந்தியாவிடம் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டுதான் அந்த நகர்வை மேற்கொண்டது சீனா.

இந்தியாவின் ஏ.எம்.சி.ஏ AMCA திட்டம் தாமதமாவது ஏன்?

போர் விமானத தயாரிப்பில் புதிதாக ஈடுபட்டுள்ள துருக்கியும், தென் கொரியாவும் கூட ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் சோதனை ஓட்டத்தை நடத்தி விட்டன.

இந்தியாவின் ஏ.எம்.சி.ஏ AMCA

அப்படி இருக்க இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக ஏ.எம்.சி.ஏ எதனால் தாமதமாகிறது? ஏ.எம்.சி.ஏ போர் விமானத்தின் தனிச்சிறப்புக்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

இந்தியா சொந்தமாக உருவாக்கி வரும் ஸ்டெல்த் போர் விமானமாகும் ஹெச்.ஏ.எல் ஏ.எம்.சி.ஏ..

இது ஒரு ஐந்தாம் தலை முறை போர் விமானமாக சொல்லப்பட்டாலும், இந்த போர் விமானம் பறக்கத் தொடங்கும்போது உலகின் முதலாவது ஐம்து புள்ளி ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் கௌரவத்திற்குரிய இந்த திட்டப் பணிகளை, பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட், Hindustan Aeronautics Limited டி.ஆர்.டி.ஓவின் துணை நிறுவனமான ஏ.டி.ஏ அதாவது ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சியும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

உள்நாட்டுத் தயாரிப்பு விமானங்களின் வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆயிரத்து தொல்லாயிரத்து என்பத்து நான்கில் உருவான அமைப்பாகும் ஏ.டி.ஏ. ஏ.எம்.சி.ஏ உட்பட இந்தியத் தயாரிப்பு போர் விமானங்களை வடிவமைப்பது ஏ.டி.ஏதான்.

ஆனால் Prototype உருவாக்கத்தின் மூலம் வடிவமைப்பில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி, போர் விமானங்களை உருவாக்குவதும், பெரியளவில் உற்பத்தியை நடத்துவதும் ஹெச்.ஏ.எல் (HAL) ஆகும். அதற்காக ஹெச்.ஏ.எல்லில் விரிவான வடிவமைப்பு, ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் உற்பத்தி மையங்களும் உள்ளன.

இங்குதான் தேஜஸ் போர் விமானங்களும் உற்பத்தி ஆகின்றன என்றாலும், ஏ.எம்.சி.ஏ போர் விமானம் தயாரிப்பு முறையில் மாற்றங்கள் இருக்கும். ஹெச்.ஏ.எல் மட்டுமல்லாது விமானத்துறையிலுள்ள தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையும் உட்கொண்டு உருவாக்கப்படுகிறது ஏ.எம்.சி.ஏ.

ஏ.எம்.சி.ஏ ஸ்பெஷல் பர்ப்பஸ் வெஹிகிள் (Special Purpose Vehicle ) மாடல் அல்லது எஸ்.பி.வி மாடல் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த மாடலில் ஏ.டி.ஏ வடிவமைத்துள்ள இந்த விமானம் ஹெச்.ஏ.எல்லும், நாட்டின் தனியார் நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கப்படும். அதாவது ஹெச்.ஏ.எல் விமானத்தின் முக்கிய தயாரிப்பாளராக இருக்கும். விமானத்தின் மற்ற பாகங்களை தயாரிப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்.

போயிங்க் ஏ.ஹெச் – 64 இ அப்பாச்சி ஹெலிகாப்டர் மற்றும் எஃப்-16 போர் விமானங்களின் பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்திய நிறுவனமான டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் பெற்றுள்ளதைப் போன்று இங்கும் செய்யப்படும்.

அவ்வாறு உள் ஒப்பந்தத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள் தயாரித்த பாகங்களை, ஹெச்.ஏ.எல் அதன் மையத்தில் உருவாக்கிய முக்கிய பாகத்துடன் இணைத்து உருவாக்கப்படும். உருவாக்கம் மற்றும் பறத்தல் சோதனைகளின் பொறுப்பு ஹெச்.ஏ.எல்லுக்கு உள்ளது.

போர் விமானம் தயாரிப்பதற்கு ஆகும் செலவு, மற்றும் கால அளவைக் குறைப்பது, உள்நாட்டு விமானத்துறையை வலுப்படுத்துதல் போன்றவை இதன் மூலமான முக்கியமான நோக்கங்களாகும். இந்திய விமானப்படைக்காக உருவாக்கப்பட்டு வரும் ஏ.எம்.சி.ஏ ஒரு ஒற்றை இருக்கை இரட்டை எஞ்ஜின் போர் விமானமாக்கும்.

தற்போது இந்திய விமானப்படையின் முதுகெலும்பு எனப்படும் சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானங்களுக்கு மாற்றாக இடம்பெறவும், பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதிபடுத்துவதும் ஏ.எம்.சி.ஏன் முக்கியமான நோக்கமாகும்.

முதற்கட்டத்தில் ஏ.எம்.சி.ஏ விமானப்படைக்காக மட்டும்தான் உருவாக்கப்படுகிறது என்றாலும், எதிர் காலத்தில் இந்த திட்டத்தில் கடறப்டைக்கான விமானங்களும் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து பறக்க முடிந்த கடற்படைப் பதிப்பு உருவாக்கப்படும் அப்போது.

அதுபோலத்தான் முதலில் விமானப்படைக்கான விமானமாக உருவாக்கப்பட்டது தேஜஸ் போர் விமானம். ஆனால் இப்போது தேஜஸ் போர் விமானத்தின் கடற்படைப் பதிப்பும் தயாராகி விட்டது. ஏ.எம்.சி.ஏ  போர் விமானத்தின் திட்டப்பணிகளை 2010 ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருந்தது இந்தியா. அதே ஆண்டில் அந்த திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வுகள் (Feasibility studies) நடத்தப்பட்டது.

அதாவது இந்த திட்டத்தை சொந்தமாக நிறைவேற்றத் தேவையான தொழில்நுட்ப வலிமை நாட்டில் உள்ளதா? அவ்வாறு செய்தாலும் நீண்ட கால அடிப்படையில் இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்குமா? என்பன உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதைத்தான் சாத்தியக்கூறு ஆய்வுகள் (Feasibility studies) என்று சொல்கிறோம்.

தொடக்கத்தில் இருபது டன் பிரிவைச் சேர்ந்த எம்.சி.ஏ அதாவது (medium combat aircraft) ஆகத்தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பின்னர் அது 25 டன்னுக்கு உயர்த்தி எம்.சி.ஏ என்று இருந்ததை ஏ.எம்.சி.ஏ  அதாவது (Advanced medium combat aircraft) ஆக மாறியது.

தேஜஸ் திட்டத்தின் எதிர்காலமே எப்படி இருக்கும் என்று தெரியாத காலக்கட்டத்தில், இண்டோ ரஷ்யன் எஃப்.ஜி.எஃப்.ஏ (FGFA) திட்டத்திற்கு நிகராக ஏ.எம்.சி.ஏ திட்டம் தொடங்கப்பட்டது.

அதுபோன்ற ஒரு திட்டம் என்பதால் வருடக்கணகில் இந்த திட்டம் அலட்சியப்படுத்தப்பட்டது, அதன் காரணமாக திட்டப்பணிகள் மிகவும் மந்தமாக தொடர்ந்தன. காரணம் அன்று இண்டோ ரஷ்யன் எஃப்.ஜி.எஃப்.ஏ (FGFA) தான் இந்தியாவின் முதலாவது ஐந்தாம் தலைமுறை விமானமாகக் கருதப்பட்டது.

ரஷ்யாவின் எஸ்.யு-57 ஃபெலோனை அடிப்படையாகக் கொண்டு இந்திய விமானப்படைக்காக உருவாக்க திட்டமிட்டப்பட்டிருந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக இருந்தது எஃப்.ஜி.எஃப்.ஏ அதாவது Fifth Generation Fighter Aircraft. SU-57 ல் நாற்பதுக்கும் மேற்பட்ட மாற்றங்களை செய்து உருவாகவிருந்தது FGFA.

இந்தியாவின் HALம், ரஷ்யாவின் SUKOIம் இணைந்து தயாரிக்கவிரும்த FGFA திட்டம் 2016ல் காலவரை குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தொழில்நுட்பத்தை வழங்குவதில் தயக்கம், அதிக பணச்செலவு, இந்திய விமானப்படை வலியுறுத்திய மாற்றங்களை ஏற்படுத்துவதில் விருப்பமின்மை, 

அதோடு 13 சதவிகித வேலைப் பங்களிப்பிற்காக 50 சதவிகித பணச்செலவை இந்தியாதான் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, போன்றவை FGFA திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான சில காரணங்களாகும்.

அந்த திட்டம் நிறுத்தப்பட்ட நடவடிக்கை இந்தியாவின் ஏ.எம்.சி.ஏ திட்டத்திற்கு புத்துயிர் நல்கியது. அந்த நேரத்தில் மெதுவாக என்றாலும் ஏ.எம்.சி.ஏ திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. 2013 நவம்பர் முதல் 2014 டிசம்பர் வரையிலான கால அளவில், ஏ.டி.ஏ கம்ப்யூட்டர் எய்டட்  டிசைன் தொழில்நுட்பத்தின் உதவியால் 9 வடிவமைப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின் முடிவில் 3B-09 மாடல் தேர்வு செய்யப்பட்டது. அமெரிக்காவின் எஃப்-22 ராப்டர் விமானத்தைப் போன்ற அந்த டிசைனை மேம்படுத்தித்தான் இப்போதுள்ள டிசைன் உருவாகியுள்ளது.

இந்தியாவின் ஏ.எம்.சி.ஏ திட்டம் தொடங்கிய காலத்தில்தான் தென் கொரியாவின் கே.எஃப் – 21 பொரோனா,  மற்றும் துருக்கியின் டி.எஃப் கான் விமானங்களின் திட்டங்களும் தொடங்கியிருந்தன.

அந்த இரண்டு போர் விமானங்களும் இப்போது அவற்றின் முதல் பறத்தலை நிறைவு செய்துள்ளன. ஆனால் இந்தியாவின் ஏ.எம்.சி.ஏ விமானத்தின் சோதனைப் பறத்தலுக்கு இன்னும் இரண்டோ மூன்றோ ஆண்டுகள் ஆகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாமதத்திற்கான காரணம் என்ன? முதல் காரணம் பணம்தான். மாதரி வடிவமைப்பின் உருவாக்கத்திற்காக துருக்கியும், தென் கொரியாவும், 2015 – 16லேயே நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், ஏ.எம்.சி.ஏ திட்டத்திற்கு 2024ல்தன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ப்ரோட்டோ டைப் உருவாக்கத்திற்காக 2024 மார்ச் மாதத்தில் 15000 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏ.எம்.சி.ஏ யின் முதல் பறத்தல் 2028 முதல் 2030 காலக்கட்டத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கிக்கு பிரிட்டனின் பி.ஏ.இ சிஸ்டம்ஸும், தென் கொரியாவிற்கு அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டினும் தொழில்நுட்ப உதவிகளைச் செய்திருந்தன. அதுதான் அந்த விமானங்களின் திட்டங்கள் வேகமாக நடைபெறக் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நாம்.

இதையும் பாருங்கள்: தௌலத் பேக் ஓல்டி: சீனாவிற்கு இந்திய ராணுவத்தின் Big அச்சுறுத்தல்

ரெடார் குறுக்கு வெட்டு Radar Cross Section (RCS)

எந்த ஒரு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களையும் விட மிகச்சிறந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஏ.எம்.சி.ஏ. ஏ.எம்.சி.ஏயின் ரெடார் க்ரோஸ் செக்சனைக் குறைக்கும் விதத்தில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவ விமானம் ரெடாரில் சிக்குவதற்கான சாத்தியம் எந்தளவு உள்ளதோ அதுதான் அதன் ரெடார் க்ரோஸ் செக்சனாகும். சுருக்கமாக ஆர்.சி.எஸ் என்று குறிப்பிடுவதுண்டு.

ஆர்.சி.எஸ் அதிகரிக்கும்போது அதிக தொலைவில் இருந்தே கண்டு பிடிக்க முடியும். ஆர்.சி.எஸ் குறையும்போது ரெடாரில் சிக்குவதற்கான சாத்தியம் குறவாகும். சீனாவின் ஜே-11, ஜே – 16 போன்ற விமானங்களில் ஆர்.சி.எஸ் 15 முதல் 25 வரையாக்கும்.

உலகின் மிகவும் ஸ்டெல்தியான அமெரிக்காவின் எஃப்-22 விமானத்தின் ஆர்.சி.எஸ் 0.0001M2 ஆகும். ஏ.எம்.சி.ஏ விமானத்தில் குறிப்பிட்ட கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இறகுகளும் வால் பகுதியும், எதிரி ரெடாரில் இருந்து வரும் ரெடார் அலைகளை பிரதிபலிப்பதற்கு பதிலாக, பல்வேறு திசைகளில் சிதறடித்து விடும்.

அதனால் எதிரி ரெடாருக்கு திரும்பச் சென்று சேரும் கதிர்களின் அளவு வெகுவாகக் குறையும். அதனால் இந்த விமானத்தைக் கண்டுபிடிப்பதும், பின் தொடர்வதும் அசாத்தியமாகும்.

ஏ.எம்.சி.ஏ விமானத்தைத் தயாரிக்கப்பயன்படும் கார்பன் ஃபைபர் கலவை உலோகம், ரெடார் அப்சர்பிங்க் பெயிண்ட் ஆகியவையும் அதன் ரெடார் க்ரோஸ் செக்சனைக் குறைக்க உதவும்.

ஏ.எம்.சி.ஏ விமானத்திற்காக சி.எஸ்.ஐ.ஆர் நேஷனல் ஏரோஸ்பேஸ் லெபோரேட்டரி உருவாக்கியுள்ள பெயிண்டிற்கு அதிருஷ்யா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதிருஷ்யா என்றால் கண்ணுக்குத் தெரியாதது என்று பொருளாகும்.

ஏ.எம்.சி.ஏ விமானத்தில் ஆயுதங்கள்

ஏழாயிரம் கிலோகிராம் ஆயுதங்களை வகிக்க முடிந்த திறனைக் கொண்டிருக்கும் ஏ.எம்.சி.ஏ. அதில் 1500 கிலோகிராம் ஆயுதங்கள் இண்டர்னல் வெப்பன் பே எனப்படும் அறைகளில் பாதுகாக்கப்படும்.

இந்தியத் தயாரிப்பு அஸ்திரா, பிரம்மோஸ் என்.ஜி, ஸ்மார்ட் ஆண்டி ஏர் ஃபீல்ட் வெப்பன், எதிரி ரெடார்களை அழிக்கும் திறனுள்ள ருத்ரம் ஏவுகணை போன்ற அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளும் ஏ.எம்.சி.ஏவின் ஆயுத சேகரத்தில் இருக்கும்.

இந்தியத் தயாரிப்பு அதி நவீன ஏ.இ.எஸ்.ஏ ரெடார் இந்த விமானத்தின் முக்கியமான சென்சாராக பயன்படுத்தாடும். ரெடார்களில் மிகவும் நவீன பதிப்பாகும் இந்த ஏ.இ.எஸ்.ஏ எனப்படும் ஆக்டிவ் எலக்ட்ரானிக்கலி ஸ்கேண்ட் அர்ரே ரெடார்.

இந்த வகை ரெடாரின் செயல்முறை  நொடிப்பொழுதின் வேறுபாட்டில் மாறிக் கொண்டே இருப்பதால், இவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. அதேபோல எலக்ட்ரானிக்ஸ் வார்ஃபேர் உபகரணங்களைப் பயன்படுத்தி ஜாம் செய்யவும் முடியாது.

ஏ.எம்.சி.ஏயின் ரெடார் குறித்த அதிக தகவல்கள் எதையும் வெளிப்படுத்தவில்லை இதுவரை. ஆனால் இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள உத்தம் ஏ.இ.எஸ்.ஏ ரெடாரின் ஒரு மேம்பட்ட பதிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏ.எம்.சி.ஏ மார்க் 1, மற்றும் ஏ.எம்.சி.ஏ மார்க் 2 என்று இரண்டு வேறுபாடு ஏ.எம்.சி.ஏ போர் விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது இந்தியா. ஏ.எம்.சி.ஏ மார்க் ஒன் விமானம் பறக்கத் தொடங்கும்போது, அது உலகின் முதலாவது ஐந்து புள்ளி ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக இருக்கும்.

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் இல்லாத பல தொழில்நுட்பங்கள் ஏ.எம்.சி.ஏ மார்க் ஒன்றில் உட்படுத்தப்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து வரும் ஏ.எம்.சி.ஏ மார்க் 2 ஒரு ஆறாம் தலைமுறை விமானமாக இருக்கும் என்று இந்திய விமானப்படை தளபதிகள் உட்படவுள்ளவர்கள் கூறுகிறார்கள்.

ஏ.எம்.சி.ஏ மார்க் 2வில் லேசர் கன் உட்படவுள்ள அதி நவீன ஆயுதங்கள் உட்படுத்தப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏ.எம்.சி.ஏ மார்க் -1 மற்றும் மார்க் – 2 வேறுபாடு

ஏ.எம்.சி.ஏ மார்க் 1, மற்றும் மார்க் 2 இடையே உள்ள மற்றொரு வேறுபாடு அவற்றின் எஞ்ஜிங்களாகும். ஏ.எம்.சி.ஏ மார்க் ஒன் விமானத்தில் அமெரிக்கத் தயாரிப்பு GEF414 – INS6 எஞ்ஜின் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே எஞ்ஜின்தான் தேஜஸ் மார்க் 2 TEDBF போர் விமானங்களுக்கும் பயன்படுத்தப்படும். 80 சதவிகித தொழில்நுட்பப் பரிமாற்றத்துடன் 2027 முதல் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கபடும்.

அதிகபட்சமாக 97 கிலோ நியூட்டன் திரஸ்டை உற்பத்தி செய்யும் இந்த எஞ்ஜின் ஏ.எம்.சி.ஏ போர் விமானங்கள் மேக் 2.15 வேகத்தில் பறக்க சக்தியளிக்கும். அது மட்டுமல்லாது ஏ.எம்.சி.ஏ விமானத்திற்கு ஒலியை விட அதிக வேகத்தில் சூப்பர் க்ர்யூஸ் செய்யும் திறன் கிடைக்கும்.

சாதாரண போர் விமானங்கள் ஒலியை விட வேகத்தில் பறக்க வேண்டுமானால், எஞ்ஜினின் இறுதி செக்சன் ஆன ஆஃப்டர் பர்னரின் எக்ஸாஸ்ட் கேசில் கூடுதலான எரிபொருளைச் செலுத்தி எரியச் செய்ய வேண்டும்.

அது எஞ்ஜினின் திரஸ்ட் அளவைக் கூட்டும். அவ்வாறு பெறப்படும் சக்தி வெட் திரஸ்ட் என்று அறியப்படுகிறது. அது விமானத்தின் எரிபொருள் சிக்கனத்தைக் குறைக்கும் செயலாக அமையும்.

ஆனால் ஹெ.ஏ.எல்,  ஏ.எம்.சி.ஏயில் ஆஃப்டர் பர்னர் நடக்காமலேயே ஒலியை விட திக வேகத்தை அடைய முடியும். அது இந்த விமானத்தின் வடிவமைப்பின் சிறப்பாகும். அதனால் எரிபொருள் சேமிப்பு அதிகரித்து, ரேஞ்சை அதிகரிக்கும்.

ரஃபேல், டைஃபூன், எஃப் 22 ராப்டர் ஆகிய விமானங்கள் சூப்பர் க்ர்யூஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ள மற்ற விமானங்களாகும். ஏ.எம்.சி.ஏ மார்க் 2 போர் விமானத்தில் அமெரிக்க எஞ்ஜினுக்குப் பதிலாக இந்தியாவின் சொந்த தயாரிப்பு எஞ்ஜினோ, அல்லது ஃபிரான்சுடன் இணைந்து தயாரிக்கும் எஞ்ஜினோ பயன்படுத்தப்படும்.

அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது இந்தியா இப்போது. சீனாவும் பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்து கொண்டு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சிக்கும் நிலையில், இந்தியாவின் வான் பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

சீனாவின் ஜே 20, பாகிஸ்தான் சீனாவிடமிருந்து வாங்கவுள்ள ஜே 31 போன்ற விமானங்களை எதிர்கொள்வதற்காக இந்தியாவிடம் மிக வலுவான விமானங்கள் இருக்க வேண்டியது அவசியமாகும்.

ரஃபேல் விமானம் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை எதிர்கொள்ள முடிந்த விமானம் என்றாலும், எண்ணிக்கை குறைவாகவே  உள்ளது. அதனால் ஏ.எம்.சி.ஏ போன்ற போர் விமானங்களை விரைவில் உருவாக்கி படையில் சேர்க்க வேண்டியது அவசியமாகும்.

ஏ.எம்.சி.ஏ மார்க் 1 மற்றும் மார்க் 2 எல்லாம் வந்த பிறகு, இப்போது ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் எவ்வாறு முன்னேறிய நாடாக இந்தியா உள்ளதோ, அதே போன்று விமானத் துறையிலும் உலகின் இணையற்ற சக்தியாக மாறும் இந்தியா…..

ஜெய்ஹிந்த்

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment