---Advertisement---

இந்தியா 2050ல் உலக சக்தி (Super Power): முன்னாள் UK பிரதமர் டோனி பிளேர்

இந்தியா 2050ல் உலக சக்தி
---Advertisement---

பிரிட்டனில் எத்தனையோ பிரதமர்கள் இருந்திருந்தாலும் அவர்களில் மிகவும் பிரபலமானவர் ஆவார் டோனி பிளைர்.

1997 முதல் 2007 வரை பத்தாண்டுகள் பிரிட்டனின் பிரதமராக இருந்தவர் என்பதால் டோனி ப்லைரை பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அவர் 20250 ல் உலக ஒழுங்க்கு எப்படி இருக்கும், உலக அரசியல் எப்படி இருக்கும் என்பது குறித்து ஒரு விளக்கத்தைக் கூறியுள்ளார்.

2050ல் உலகில் மூன்று நாடுகள் முக்கியமான பெரும் சக்திகளாக விளங்கும்.

அந்த மூன்று உலக சக்திகளில் முக்கியமான சக்தியாக இந்தியா இருக்கும், அடுத்து சீனா அமெரிக்கா ஆகிய சக்திகள் இருக்கும் என்று கூறியுள்ளார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்.

2050ன் உலக சக்திகள் என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

உலக சக்தி நாடுகள் ஒத்துப்போக வேண்டும்

உலகத் தலைவர்கள் முன்னெடுத்துச் செல்லும் சிக்கலான ஒரு உலக ஒழுங்கு உருவாக்கப்படும் என்றும் ஒரு ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் இதைக் கூறியுள்ளார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்.

இந்த மூன்று உலக சக்தி நாடுகளும் உருவாக்கும் அல்லது கட்டமைக்கும் ஒரு பல்முனை உலகத்தோடு உலக நாடுகள் ஒத்துப்போக வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கு அறிவுரை கூறியுமுள்ளார்.

அதாவது 2050 ஆகும்போது இந்தியாவும், சீனாவும், அமெரிக்காவும் கட்டமைக்கும் பல்முனை உலக ஒழுங்கு நிலவும். 

அந்த உலகத்தோடு மற்ற நாடுகள் ஒத்துப்போக வேண்டும் என்று மற்ற நாடுகளிடம் கூறுகிறார் அவர்.

இந்தியாவின் உள்ளூரவுள்ள திறன் என்ன என்பதை உணர்த்துவதாக உள்ளது அவரது இந்த கருத்து.

தமது ஆட்சிக் காலத்தை விட மிகவும் சிக்கலாக உள்ளது தற்போதைய புவிசார் அரசியல்

அன்று அமெரிக்காதான் உலக சக்தியாக கருதப்பட்டது.

ஆனால் சீனா மற்றும் இந்தியாவின் வளர்ச்சி அதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று கூறியுள்ளார் அவர்.

மத்திய ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல்கள், குறிப்பாக ஹிஸ்புல்லா இஸ்ரேல் பிரச்சினைகள் ஒரு பெரியளவிலான போருக்கு வழி வகுக்கக் கூடும் என்றும் கூறியுள்ளார் டோனி பிலைர்.

இதையும் பார்க்கவும்: இந்தியா பூட்டான் உறவு! சீனாவின் ஐந்து விரல் திட்டம்.

இந்தியா மூன்றாவது வலிமையான நாடு

இங்கு இந்தியா 2050 ல் ஒரு உலக சக்தியாக திகழும் என்று ஒரு பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் கூறுகிறார் எனும்போது, அது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

அதே நேரம் அது தற்பெருமையால் அல்ல மாறாக அது ஒரு உண்மை என்பதை நாம் இந்தியர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் மிக வலிமையான நாடுகளின் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது, இரண்டாமிடத்தில் சீனாவும், மூன்றாமிடத்தில் இந்தியாவும் உள்ளன.

முன்பு அந்த இடத்தில் ஜப்பானோ ரஷ்யாவோதான் இடம்பிடித்து வந்திருந்தன முன்பெல்லாம்.

ஆனால் இப்போது இந்தியா மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.

அதாவது உலகிம் மிகவும் வலிமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.

இங்கு சுவாரசியம் என்னவென்றால், இவற்றை எல்லாம் வரிசைப் படுத்துவது மேற்கத்திய நாடுகளாகும்.

சமீபத்தில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரே இதை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவை உயர்த்திப் பார்ப்பதில் இப்போதும் தயக்கம் உள்ளது.

காரணம் இப்போதும் இந்தியாவில் சேரிகள் உள்ளன என்று சொல்வார்கள். 

அவர்களின் பார்வையில் உள்ள ஒரு வளர்ந்த நாடு அல்ல இந்தியா.

இந்தியா வளரும் நாடாகவே இருந்தாலும், அவர்களின் பார்வையில் உள்ளதைப் போன்றதல்ல இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்வார்கள்.

இந்தோனேஷியா, ஃபிலிப்பைன்ஸ், போன்ற நாடுகளைக் கூட இந்தியாவை விட பெட்டர் என்று சொல்வார்கள்.

ஆனால் அதையெல்லாம் சொல்லும்போது இந்தியாவின் பன்முகத்தன்மை என்னவென்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.

இந்தியாவில் சேரிகள் இருக்கின்றன என்பது உண்மைதான்.

அதே நேரம் ஐரோப்பாவை வெல்லும் விதத்திலான பகுதிகளும் இந்தியாவில் உள்ளன.

இங்கு அழகிய கிராமங்கள் உள்ளன, ஆடம்பரமான நகரங்களும் உள்ளன.

இந்தியாவில் எல்லாப்பகுதிகளும் எல்லா விசயங்களும் ஒரே மாதரி இருப்பதில்லை.

இந்தியா முற்றிலும் மாறுபட்ட சூழலைக் கொண்ட ஒரு நாடாகும்.

அதாவது ஒரு நாடு என்ற வகையில் இந்தியாவில் உள்ளதைப் போன்ற பன்முகத்தன்மை உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லை.

அதனால் அவர்களின் பார்வை என்று அவர்கள் சொல்லும் அந்தப் பார்வையில் இந்தியாவைப் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.

ஆஃப்ரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, பல நாடுகள் பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும்.

ஆனால் பல மொழி, பல கலாச்சாரம், என்று எல்லா விசயங்களிலும் பன்முகத் தன்மை இந்தியா என்ற ஒரு நாட்டில் உள்ளது.

அதாவது ஒரு அஃப்ரிக்கக் கண்டம் முழுவதிலும், அல்லது ஐரோப்பியக் கண்டம் முழுவதிலும் எவ்வாறு பல மொழிகள், கலாச்சாரங்கள், பல்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் என்று உள்ளதோ..

அந்த அனைத்து அம்சங்களும் இங்கு ஒரு நாடான இந்தியாவில் உள்ளது.

மொத்தத்தில் ஒரு கண்டத்திற்கு நிகராக உள்ளது இந்தியா.

அதனால் ஒவ்வொரு பகுதியிலும், இந்தியாவைப் பார்க்கும்போது அங்கு வேறுபட்ட ஒவ்வொரு அனுபவங்கள் கிடைக்கும்.

ஐரோப்பாவில் கூட எல்லா நாடுகளையும் பார்த்தால் அதிக வசதியான நாடுகள் உள்ளன, குறைவான நாடுகளும் உள்ளன. 

அதுபோலத்தான் இந்தியாவில் ஒவ்வொரு பகுதியும் அதற்கென்ற தனித்தன்மையைக் கொண்டுள்ளது.

அத்தகைய விசாலமான இந்தியாவில் ஏதோ ஓரிடு இடங்களை பார்த்து இந்தியாவே இப்படித்தான் என்று சொல்வது தவறாகும்.

எனவே உலக சக்தி என்பதற்கான மேற்கத்திய நாடுகளின் பார்வை தவறானதாக உள்ளது.

அதோடு இந்தியாவின் உன்மையான வலிமை என்ன என்று சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விட்டன மேற்கத்திய நாடுகள்.

அவர்கள் தெரிந்து கொள்ளத் தவறி விட்டார்கள் என்பதை விட, நம்மவர்கள் அதை வெளிப்படுத்த, அல்லது அதை மற்றவர்களுக்கு உணர்த்தத் தவறி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி வந்த பிறகுதான், இந்தியாவின் வலிமையை வெளி உலகிற்கு தெரிய வந்தது.

அவர் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கெல்லாம் இந்தியாவின் திறன் என்ன, வளம் என்னா, வலிமை என்ன என்று முழங்கத் தவறுவதில்லை.

அதனால் இப்போது இந்தியாவைப் பற்றி அனைவரும் தெரிந்து கொண்டுள்ளார்கள்.

இங்கு ரஷ்யாவை விட இந்தியா வலிமையான நாடு என்று சொல்லும்போது, பலரது நெற்றியிலும் ஒரு சுருக்கத்தை வரவைக்கலாம்.

ஆனால் அது ஒரு உண்மைதான்.

பொருளாதார வலிமை மட்டுமல்ல, நமது உலகளாவிய செல்வாக்கும் அதன் ஒரு அம்சமாக அமைகிறது.

அதேபோல நமது நாட்டின் மக்கள் தொகை மிக முக்கியமான ஒரு காரணியாகும்.

நாமே ஒருக்காலத்தில் மக்கள் தொகை ஒரு பிரச்சினை என்று கூறிக்கொண்டிருந்தோம்.

ஆனால் இன்று மக்கள் தொகை ஒரு வலிமை என்று உலகம் புரிந்து கொண்டுள்ளது.

சீனா, ஜப்பான், உட்பட பல நாடுகள் அன்நாடுகளின் மக்களிடம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில் அடுத்து வரும் ஆண்டுகள் நமது நாட்டைப் பொறுத்தவரை பொற்காலமாக அமையும் என்று சொல்லலாம்.

என்னதான் உலகில் போர்கள் நடந்தாலும், நெருக்கடிகள் நிலவினாலும் வரும் ஆண்டுகளில் இந்தியாதான் ஒரு பெரும் சக்தியாக மாறவுள்ளது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இந்தியா 2050ல் உலக சக்தி என்ற பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டோனி ப்ளேரின் கருத்தை வைத்து மட்டும் இதைச் சொல்லவில்லை.

இதே போல் பல தலைவர்களும், அமைப்புக்களும், பல ஆராய்ச்சி நிறுவனங்களும் எல்லாம் இதுகுறித்து வெளிப்படுத்தியுள்ளன.

2040 விற்கு பிறாகு உலகின் மிகப்பெரிய சக்திகளில் ஒன்றாக இந்தியா மாறியிருக்கும்.

பூமியில் மட்டுமல்லாது, விண்வெளியிலும், மற்ற கோள்களிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மிகப்பெரும் சக்தியாக மாறியிருக்கும் இந்தியா என்று உலகமே நம்புகிறது.

அதனால்தான் இன்று பெரும் சக்திகளாக உள்ள நாடுகளும், மற்ற நாடுகளும் எல்லாம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவுடன் பிரச்சினைகள் வேண்டாம் என்று சீனா நினைக்கிறது…..

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment