---Advertisement---

ஐ.நா மாநாடு 2024: இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கை, சீன எதிர்ப்பு

ஐ.நா பாதுகாப்பு சபை
---Advertisement---

வணக்கம்
2024 ஐ.நா மாநாடு, ‘Summit of the Future 2024’ என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு விசயம் பெருமளவில் விவாதிக்கப்படுகிறது.

ஐ.நாவில் மாற்றம் தேவை, மறு சீரமைப்பு தேவை என்று உலகின் பெரும்பாலான நாடுகள் கோரி வருகின்றன.

பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள ஐந்து நாடுகளும் அதை ஆதரிக்கின்றன.

ஆனால் அந்த விசயத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் உள்ளது.

ஐ.நா மறுசீரமைப்பு அல்லது விரிவாக்கத்தைக் கோரும் இந்தியாவின் நிலைப்பாடு

ஐ.நாவில் மறுசீரமைப்பு தேவை என்ற கோரிக்கையை முன்வைப்பதில் முன்னணியில் உள்ள நாடாகும் இந்தியா.

சாதாரணமாக கோரிக்கை வைக்கவில்லை, மாறாக கிடைத்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது இந்தியா.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், உலகின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடாகவும் உள்ள இந்தியாவை எவ்வாறு நீங்கள் ஐ.நா பாதுகாப்பு சபையில் புறக்கனிக்க முடியும் என்று கடுமையாக கேட்கிறது இந்தியா.

அவ்வாறு பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்புரிமை கிடைத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக கோருகிறது இந்தியா.

அதே நேரம் ஜி4 கூட்டமைப்பு என்ற வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளுடனும் இந்த விசயத்தில் ஒத்துழைக்கிறது இந்தியா.

இந்தியா மட்டுமே ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை இந்தியா.

ஐ.நாவில் மாற்றம் ஏற்பட வேண்டும், இந்தியா நிச்சயம் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும்.

சீனாவின் மறுப்பும், காரணமும்

சீன ஊடகமான சவுத் சைனா மார்னிங்க் போஸ்ட், எதனால் சீனா இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை எதிர்க்கிறது என்பது குறித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்காக இந்தியா எதுவரை வேண்டுமானாலும் பாயும்.

அந்த விசயத்தில் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நாடு இந்தியாதான் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

அதோடு இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை சீனா எதனால் எதிர்க்கிறது என்பதைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது அதில்.

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஒரே ஆசிய நாடு சீனாதான்.

அதனால் மற்றொரு ஆசிய நாடு ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதை விரும்பவில்லை,

தற்போது ஆசியாவில் சீனாவிற்கு சிறிது மேற்கை உள்ளதற்கு காரணம் அது ஐ.நாவில் நிரந்தர உறுப்பினராக இருப்பதுதான்.

அந்த நிலையை இந்தியாவும் பகிர்ந்து
கொண்டால் சீனாவின் செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்று அஞ்சுகிறது அன்நாடு.

அதனால்தான் சீனா இந்தியாவை எதிர்க்கிறது என்று கூறப்படுகிறது.

அதே நேரம் சமீபத்திய கட்டுரை ஒன்று அதிலிருந்து சற்று மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

சீனாவின் மனமாற்றம்

அதாவது சீனாவைப் பொறுத்தவரை இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆனாலும் பரவாயில்லை,
ஆனால் எக்காரணம் கொண்டும் ஜப்பான் நிரந்தர உறுப்பினர் ஆகக்கூடாது. இந்தியா அதற்காக ஜப்பானை ஆதரிக்கவும் கூடாது என்ற ஒரு நிலைப்பாட்டை சீனா எடுப்பது போன்ற அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

பிரிக்ஸை வலுப்படுத்துவதற்காகவும், அதோடு ரஷ்யாவின் அழுத்தம் காரணமாகவும் சீனா அதன் நிலைப்பாட்டை மாற்றத் தொடங்கியுள்ளது என்று தெரிகிறது.

அதுமட்டுமல்ல இந்தியாவுடன் பகைமையைத் தொடர்வது சீனாவிற்கு நல்லதல்ல என்று அன்நாடு உணர்கிறது.

காரணம் இந்தியா அமெரிக்காவுடன் அதிகம் நெருங்குவதை பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.

சீனாவைப் பொறுத்தவரை அனைத்திற்கும் மேலாக வர்த்தகம் மிகவும் முக்கியமாகும். அதனால் இந்தியாவுடன் ஒரு சுமுகமான உறவைத் தொடர விரும்புகிறது சீனா.

தற்போது நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகள் ஆதரிக்கும் பட்சத்தில், சீனா முட்டுக்கட்டை போடுவதாக இருக்க வேண்டாம்,

அதனால் அதை ஆதரிப்பதே நல்லதாக இருக்கும் என்ற ஒரு கருதலில் உள்ளது சீனா இப்போது.

அதனால் ஒருவேளை சீனா இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை ஆதரிக்கக் கூடிய வாய்ப்புள்ளது.

இந்தியாவும் இந்த விசயத்தில் மிக வலுவான வாதங்களை முன்வைத்து வருகிறது.

இரண்டு ஆஃப்ரிக்க நாடுகளையும், ஒரு தீவு நாட்டையும் உட்படுத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சமீபத்தில் கூறியிருந்தார்கள்.

அதே நேரம் இந்தியா,ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தமது வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளது அமெரிக்கா.

சீனாவைத் தவிர மற்ற நிரந்தர உறுப்பு நாடுகள் அனைத்துமே இந்தியாவை ஆதரித்து பல நேரங்களில் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் யோசனை

அமெரிக்கா ஏற்கனவே ஒரு விசயத்தைக் கூறியிருந்தது.

அதாவது ஐ.நா பாதுகப்பு சபையில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கலாம், ஆனால் இனி வரும் நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளது.

வீட்டோ அதிகாரம் அதிக நாடுகளுக்கு இல்லாமல் இருப்பதுதான் நல்லது, இப்போது வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளுக்கு மட்டும் இருந்தால் போதும் என்று 2008ல் அமெரிக்கா கூறியிருந்தது.

அன்று அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அமெரிக்கா,
பின்னர் பல நாடுகளின் அழுத்தங்கள், மற்றும் சர்வதேச சூழல் காரணமாக மேலும் நிரந்தர உறுப்பினர்களை சேர்க்கலாம் என்ற அளவிற்கு மாறியுள்ளது.

ஆனால் அந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கொடுப்பதில் விருப்பமில்லை.

வீட்டோ அதிகாரத்தின் பங்கு

வீட்டோ அதிகாரம் அவர்களிடம் மட்டும் இருந்தால், அவர்களின் நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்த முடியும்.

இப்போது இஸ்ரேலுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் ஐ.நா வினால் எடுக்க முடியாது.

காரணம் அவ்வாறு ஏதேனும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முனைந்தால், அமெரிக்கா அப்போது தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்கும்.

ரஷ்யாவை எதுவும் செய்ய முடியாது, காரணம் ரஷ்யாவிற்கு வீட்டோ அதிகாரம் இருப்பதால் ரஷ்யாவே வீட்டோ செய்து தடுக்கும்.

அவ்வாறு அந்த ஐந்து நாடுகள், மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது.

ஒரு சர்வதேச அமைப்பாக இருந்து கொண்டு, இந்த நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வரம்பில்லாத அதிகாரங்களைக் கொடுக்கிறது இந்த வீட்டோ அதிகாரம்.

அதை கூடுதலான நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

ஃபின்லாந்து அதிபர் கருத்து

இதற்கிடையில் இப்போது ஃபின்லந்தின் அதிபர், ஐ.நா பாதுகாப்பு சபையில் உள்ள வீட்டோ அதிகாரத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏதேனும் ஒரு நாடு, அந்த நாட்டின் நோக்கங்களுக்கேற்ப, அதன் நலனுக்காக, அதன் விருப்பத்திற்கேற்ப இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

அது உலக அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளதென்று கூறுகிறார் அவர்.

இந்த வீட்டோ அதிகாரத்தை, அந்த அதிகாரமுள்ள நாடுகள் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்துகின்றன, அதனால் அதை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

இந்த வீட்டோ அதிகாரமுள்ள நாடுகள், ஏதேனும் தவறுகள் செய்யும்போது, சர்வதேச சட்டதிட்டங்களை எல்லாம் மதிக்காமல் கொடிய குற்றங்களைச் செய்யும்போது, அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா?

அவ்வாறு செய்யும்போது அவர்களை சபையில் இருந்து வெளியேற்றும் விதத்திலான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இங்கு ஃபின்லாந்தின் அதிபர் ரஷ்யாவை குறிப்பிட்டுத்தான் அவ்வாறு பேசியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்த விசயம்தான்.

ஆனால் அவர் சொன்ன விசயம் மிகச்சரியானதாகும்.

காரணம் இப்போது பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள ஐந்து நாடுகளும் யாராலும் கேள்வி கேட்க முடியாத சக்திகள் என்பது போல் உள்ளன.

அந்த தகுதியை யார் கொடுத்தது என்றால், அந்த ஐந்து நாடுகளுமே முடிவு செய்து அத்தகைய ஒரு தகுதியை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டுள்ளார்கள்.

அவர்கள்தான் இரண்டாம் உலகப்போரின் வெற்றியாளர்கள், அவர்கள்தான் வலிமையானவர்கள், எனவே அவர்களே பாதுகாப்பு சபையில் இருக்கலாம் என்று அவர்களுக்குள்ளாகவே முடிவெடுத்துக் கொண்டார்கள்.

ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முந்தையதல்ல, இன்றைய நிலை.

இன்று உலகில் புதிய சக்திகள் உள்ளன, பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஜனநாயகத்தின் புரிதல்

அவ்வாறு ஜனநாயகத்தைப் பற்றி வார்த்தைக்கு வார்த்தை பேசக்கூடிய நாடுகள், மிகவும் பெரிய ஒரு சர்வதேச அமைப்பில், மிகப்பெரிய ஜனநாயக விரோத செயலைச் செய்து கொண்டுள்ளன.

இப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால், அங்கு பெரும்பான்மையின் அடிப்படையில்தான் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும் என்பது நமக்குத் தெரியும்.

அமெரிக்கா மட்டுமல்ல எந்த நாட்டிலும் ஒரு புதிய முடிவை எடுக்க வேண்டுமானாலும், புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமானாலும் அது பெரும்பான்மையின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்படும்.

கம்யூனிஸ்டு சீனாவில் கூட அதிபர் ஒரு முடிவை எடுத்தால் மற்றவர்களின் ஆதரவு அவசியமாகும்.

அப்படி இருக்க ஜனநாயகத்தைப் பற்றி வாய் அடைக்காமல் எப்போதும் பேசக்கூடிய அமெரிக்கா உட்படவுள்ள நாடுகள்,

ஐ.நாவில் ஜனநாயகத்திற்கு எதிரான நடைமுறை உள்ளதைப் பற்றிப் பேசுவதில்லை,

காரணம் ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள ஐந்து நாடுகளும், ஜனநாயகத்தைப் பற்றிய எந்த புரிதலோ, அல்லது பொறுப்புணர்வோ இல்லாமல், சர்வாதிகார நாடுகளைப் போலத்தான் செயல்படுகின்றன.

உலக அமைதிக்காக ஐ.நா சபையில் கொண்டுவரப்படும் எந்த ஒரு விசயத்தையும் இந்த வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க முடியும்.

இந்த நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில், வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் பெயர் பெற்றவையுமாகும்.

அப்படி ஆகும்போது அந்த நாடுகள் செய்வதுதான் முதலில் ஜனநாயகத்திற்கு எதிரான விசயமாகும்.

காரணம் எந்த ஒரு தீர்மானமும் பெரும்பான்மையின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆனால் இங்கு வீட்டோ அதிகாரமுள்ள ஒரே ஒரு நாடு நினைத்தால் அதைத் தடுக்க முடியும்.

மற்ற நாடுகள் எல்லாம் ஏற்றுக் கொண்ட ஒரு விசயத்தை வீட்டோ அதிகாரமுள்ள ஒரே ஒரு நாடு அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க முடியும் என்னும்போது அதில் என்ன ஜனநாயகம் உள்ளது?

அதனால் ஃபின்லேண்ட் அதிபர் கூறியுள்ளதைப் போல், ஜனநாயக நாடுகளால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் இந்த வீட்டோ அதிகாரம்.

அதை இல்லாமல் செய்வது நல்லதாகும்.

இதையும் பாருங்கள்: விமானங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கின்றன?

மறுசீரமைப்பின் அவசியம்

அதேபோல் தற்போது ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், அதைப் பத்து நாடுகளாக அதிகரிக்க வேண்டும்.

ஆசியாவில் இருந்து மேலும் ஒரு நாடு, ஆஃப்ரிக்காவில் இருந்து ஒரு நாடு, லத்தீன் அமெரிக்க நாடு ஒன்று, பின்னர் ஏதேனும் ஒரு தீவு நாடு என்று குறைந்த பட்சம் பத்தாக நிரந்தர உறுபினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு எண்ணிக்கையை அதிகரித்து உலகின் எல்லா பகுதிகளிலும் உள்ள ஏதேனும் ஒரு நாட்டை இடம்பெறச் செய்ய வேண்டும்.

வீட்டோ அதிகாரத்தை இல்லாமல் செய்து விட்டு, எந்த ஒரு தீர்மானத்தையும் பெரும்பான்மையின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல தற்போதுள்ள தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.

அவ்வாறு பல மாற்றங்களைக் கொண்டுவந்தால் ஐ.நா அர்த்தமுள்ள ஒரு அமைப்பாக பார்க்கப்படும்.

காரணம் ஒரு ஐந்து நாடுகள் உலகம் முழுவதற்குமான விசயங்களில் முடிவெடுக்க முடியும்.

அதுவும் மற்ற நான்கு நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒன்றை ஒரே ஒரு நாடு ஏற்காத பட்சத்தில் அது நிறைவேறாமல் போகும்.

இதில் என்ன அர்த்தம் உள்ளதோ தெரியவில்லை.

முன்பு உலகில் நடந்த போர்களை விட, இப்போது உலகில் நடக்கும் போர்களை விட, இனி நடக்கவுள்ள போர்களைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

மனித இனம் வேற்றுக்கொள்களில் குடியேறுவது குறித்தும் ஆலோசிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஒரு வலுவான அமைப்பு அவசியமாகும்.

ஐ.நா என்பது பெயரளவில் ஒரு பெரிய அமைப்பாக பார்க்கபப்ட்டாலும், அதன் செயல்பாடுகள் அப்படி அல்ல என்பதுதான் உண்மை.

இந்த ஐ.நா அமைப்பு உண்மையில் செயல் திறனுள்ள ஒரு அமைப்பாக இருந்தால் இப்போது நடக்கும் ரஷ்யா உக்ரைன் போர் நடந்திருக்காது.

இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினை இவ்வளவு காலம் நீண்டிருக்காது.

உலகில் அமைதியை நிலை நாட்டுவதற்காக, போர்களைத் தடுப்பதற்காக என்று கூறி உருவாக்கப்பட்ட ஐ.நா, இப்போது போர்களை வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கிறது.

வன் சக்திகள் நினைப்பதை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஐ.நா அதை விமர்சிப்பதில் கூட கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க முடியவில்லை.

உண்மையில் ஐ.நா செயல்திறன் மிக்க ஒரு அமைப்பாக இருந்தால், அதன் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலையீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு நேரடிப் போர்கள் நடந்து கொண்டிருக்காது இப்போது.

எனவே ஐ.நாவின் தரம் உயர்த்தப்பட வேண்டுமானால், அந்த அமைப்பை செயல்திறன் மிக்கதாக, வலுவான ஒரு அமைப்பாக மாற்ற வேண்டுமானால்,

அங்கு அதிக உறுப்பினர்களை உருவாக்க வேண்டும்.

உலகம் முழுவதற்குமான விசயங்களை இந்த ஐந்து நாடுகளின் மடியில் கட்டிக்கொண்டு இருக்கும் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும்.

வீட்டோ அதிகாரத்தை அகற்றி விட்டு புதிய நாடுகளுக்கு இடமளிக்க வேண்டும்.

அல்லது புதிதாக வரும் நாடுகளுக்கும் வீட்டோ அதிகாரம் கொடுக்க வேண்டும்.

அப்படி அல்லாமல் அமெரிக்கா சொல்வதுபோல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தும்,அவர்களுக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்று மீண்டும் ஒரு பாகுபாடு இருக்கக் கூடாது.

ஏற்கனவே அங்கு தற்காலிக உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்கள் என்ற பாகுபாடு உள்ளது .

அதிலும் நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டுமே வீட்டோ அதிகாரம் உள்ளது, தற்காலிக உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இல்லை.

அதிலும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தொடர முடியும்.

அப்படி ஏற்கனவே ஏராளமான முரன்பாடுகளும், பாகுபாடுகளும் உள்ள நிலையில், இப்போது மேலும் ஒரு பிரிவை உருவாக்கி, நீங்கள் நிரந்தர உறுப்பினர்கள்தான், ஆனால்,

உலக அமைதிக்காக என்று உருவாக்கப்பட்ட ஐ.நா எவ்வாறு வேடிக்கை பார்க்கிறதோ,

அதேபோல் நீங்கள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கலாம், ஆனால் வேடிக்கைதான் பார்க்க முடியும் என்றால், அதனால் என்ன பயன் உள்ளது?

எனவே நிரந்தர உறுப்பினராக இருந்தாலும், எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவர்கள் தவறு செய்தாலும், அதையும் தட்டிக் கேட்கவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடிந்த விதத்திலும் ஐ.நாவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

சீனாவைப் பொறுத்தவரை இப்போது அந்த நாட்டிற்கு அவசியம் என்பதால், ஒருவேளை இந்தியாவிற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது.

ஆனால் சீனா அதை விரும்பவில்லை, குறிப்பாக பாகிஸ்தான் சீனாவைக் கெஞ்சும் நிலையில்.

தாம் அனுபவிக்கும் ஒரு பதவி இந்தியாவிற்கும் கிடைத்தால், பல நாடுகளில் தமக்குள்ள செல்வாக்கு இல்லாமல் போகும் என்று நினைக்கிறது சீனா.

அதனால்தான் அன்நாடு இந்தியா ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதை சிறிதும் விரும்பவில்லை.

ஆனால் இந்தியா விடப்போவதில்லை.
இந்தியா அதை இந்தியாவின் உரிமையாக அதைக் கோருகிறதே தவிர யாரிடமும் அன்பளிப்பாகக் கேட்கவில்லை.

ஐ.நாவில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ள, இப்போது நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளை விட அதிக தகுதிகள் உள்ள நாடு இந்தியா என்று உலகின் பல நாடுகளும் இப்போது கூறத் தொடங்கியுள்ளன.

எனவே விரைவில் இந்தியா ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக மாறும்….

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment