---Advertisement---

சர்தார் வல்லபாய் படேல் | Highest ஒற்றுமையின் சிலை எதற்காக?

சர்தார் வல்லபாய் படேல்
---Advertisement---

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமாக இருந்தவர்.

சர்தார் வல்லபாய் படேல் அவரது காலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படி இருக்க எதிர் கட்சியை சார்ந்திருந்த ஒரு தலைவரான  சர்தார் வல்லபாய் படேலுக்கு எதனால் பாஜக உலகிலேயே உயரமான சிலை அமைத்தது?

அதற்கும் மேலாக சர்தார் வல்லபாய் படேல்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை  தடை செய்தவர்.

அப்படி இருந்தும் தீவிரமான ஆர்.எஸ்.எஸ்  பின்புலத்தில் இருந்து வந்தவரான பிரதமர் நரேந்திர மோடி எதனால் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலையை நிறுவினார்?

எதனால் காந்திக்கோ, நேருவிற்கோ அத்தகைய சிலை அமைக்கப்படவில்லை?

சர்தார் வல்லபாய் படேல் என்ன செய்தார்?

இந்தியாவில் மிகப்பெரும் தலைவர்கள் என்று கூறக்கூடிய எத்தனையோ தலைவர்கள் இருக்க எதனால் குறிப்பாக சர்தார் வல்லபாய் படேலுக்கு இந்த பெருமை சேர்க்கப்பட்டுள்ளது?

இவ்வளவு பெரிய சிலை அமைத்து பெருமைப்படுத்தும் அளவுக்கு படேல் அப்படி என்னதான் செய்தார்?

காணலாம் இந்தப் பதிவில் மிகச்சுருக்கமாக.

சுதந்திரம் அடைந்தபோது இந்தியா

சர்தார் வல்லபாய் படேல்

1947ல் இருந்த இந்தியா இப்போதுள்ளதைப் போல் இருந்திருக்கவில்லை.

வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது இன்றுள்ள இந்தியாவின் நிலப்பரப்பு 584 Princely States அதாவது சமஸ்தானங்களாக இருந்தது.

எனவே அன்று இந்தியா என்ற நாடு சுதந்திரம் அடைந்திருக்கவில்லை, மாறாக அந்த 584 சமஸ்தானங்களும் சுதந்திரம் அடைந்தன என்றுதான் கூறவேண்டும்.

வெள்ளையர்கள் வெளியேறிய போது அந்த சமஸ்தானங்களுக்கு மூன்று விருப்பங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது.

  1. இந்தியாவோடு இணைந்து கொள்ளலாம்.
  2. பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ளலாம்.
  3. அவர்கள் விரும்பினால சுதந்திரமாக இருக்கலாம் என்று மூன்று வாய்ப்புக்கள் இருந்தன.

அந்த சமஸ்தானங்கள் அனைத்தும் அனைத்து விசயங்களிலும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மற்றுபட்டவையாக இருந்தன. இன்றும் இந்தியாவில் அந்த வேறுபாடுகள் உள்ளன. அதுதான் உலக நாடுகளால் போற்றப்படுகிறது.

இந்த மாநிலங்களில் நாம் பேசும் மொழியிலிருந்து அனைத்துமே வேறுபட்டதாக உள்ளது. 

நாம் வணங்கும் கடவுள், உடுக்கும் துணி, உண்ணும் உணவு என ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அப்போது இந்த மாநிலங்களுக்கு ஒரு மன்னர் இருந்தார்.

நீங்கள் விரும்பினால் இந்தியாவோடு இணைந்து கொள்ளலாம், விரும்பினால் பாகிஸ்தானோடு இணைந்து கொள்ளலாம், அல்லது நீங்கள் விரும்பினால் சுதந்திர நாடாக இருக்கலாம் என்ற வாய்ப்பை நல்கியபோது, அந்த மன்னர் இயல்பாகவே புலிக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருக்கலாம் என்பதுபோல, அவருடைய நாட்டை அவர் ஆண்டு சுதந்திரமாக இருக்கத்தானே விரும்புவார்.

அதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

நீங்களே ஒரு மாநிலத்தின் மன்னர்  என்று கற்பனை செய்து பாருங்கள்.

அப்போது யாரோ ஒருவர் உங்களிடம் வந்து ‘நாளை முதல் நீ உன்னுடைய ராஜ்ஜியத்தைக் கைவிட்டு சாதாரண குடிமகனாக வேண்டும்’ என்று கூறினால் அதை ஒப்புக்கொள்வீர்களா?

அது சாத்தியமற்ற ஒரு விசயமாகும்.

அதை நன்கு அறிந்து வைத்திருந்த காரணத்தால்தான் செல்லும்போது கூட இவர்களை ஒன்றுசேர விடக்கூடாது என்று இத்தகைய மூன்று வாய்ப்புக்களை கொடுத்தார்கள் வெள்ளையர்கள்.

எனவே யாரிடம் இத்தகைய ஒரு விசயம் முன்வைக்கப்பட்டாலும் அவர்கள் சுதந்திரமாக நிற்கவே முடிவு செய்வார்கள். அதனால் அவர்களை எல்லாம் ஒன்று சேர்ப்பது சாத்தியமற்ற விசயம் என்று அனைவரும் கருதினார்கள்.

ஆனால் ஒரு மனிதர் அதை சாத்தியமாக்கினார்.

அந்த ஒரு மனிதர்தான் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல்.

இதையும் பார்க்கவும்: சிவநாடார் சிகரம் தொட்ட வரலாறு

சாதித்துக் காட்டிய சர்தார் வல்லபாய் படேல்

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருக்க வேண்டிய மிகச்சிறந்த மனிதர்.

இந்திய அரசியலமைப்பு 1950 இல் உருவாக்கப்பட்டது. 

அதன் பிறகுதான் முறையான தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.

அதனால் 1947ல் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் அந்த 3 ஆண்டுகள் இந்தியாவை வழிநடத்த வாய்ப்பிருந்தது.

15 காங்கிரஸ் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உள்ளகக் குழு முதல் பிரதமராக யார் வரவேண்டும் என்று தேர்ந்தெடுப்பதற்காக அவர்களுக்குள் ஒரு தேர்தலை நடத்தியது.

அந்த 15 பேரில் 12 பேர் பட்டேலைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அவர்களில் 3 பேர் வாக்களித்திருக்கவில்லை.

அந்த வாக்கெடுப்பில், ஜவஹர்லால் நேரு ஒரு ஓட்டு கூட பெறவில்லை.

ஆனாலும் அவர்தான் பிரதமர்.பதிவான அனைத்து வாக்குகளையும் பெற்றிருந்த சர்தார் வல்லபாய் படேல் துணைப்பிரதமர்.

எப்படி?

காரணம் நேரு இரண்டாம் நிலை பொறுப்பாளராக இருக்க தயாராக இருந்திருக்கவில்லை.

நேரடியாக பிரதமர்தான் நோக்கம் என்று பிடிவாதம் பிடித்துவிட்டார்.

அப்போது காந்தி நேருவிற்காக காட்சிக்குள் வந்து படேலை சமாதானப்படுத்தி, 

படேல் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுமாறு செய்துள்ளார்.

அது அன்று காந்தி செய்த, 

ஆனால் செய்திருக்கக் கூடாத 

ஒரு மிகப்பெரிய தவறாகும்.

அந்த தவறு 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆட்டிப்படைத்தது.

இந்தியாவை வேட்டையாடியது.

ஜனநாயக நாட்டில் பிள்ளையார் சுழியாக முதன் முதலில் நடந்த வாக்கெடுப்பிலேயே,

ஜனநாயக முறைப்படி வாக்குகளைப் பெற்று தேர்வானவரை ஒதுக்கி விட்டு, 

வாக்குகளே பெறாதவர் பிரதமராகியுள்ளார் என்பது வேடிக்கையான விசயம்தான்.

ஆனால் அந்த நேரத்தில் ஜனநாயக முறைப்படி நட்ந்த அந்த வாக்கெடுப்பை  ஏற்க மறுத்த ஒருவர்,  தனக்குத்தான் பதவி வேண்டும் என்று அடம்பிடித்த ஒருவர், அவரிடம் அதிகாரம் இருக்கும் போது எதற்காகவும் அந்தப் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை காந்தி உணர்ந்திருக்க வேண்டும்.

அன்று அவர்கள் செய்த அந்த தவறு காரணமாக, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தலைவிதியை ஒரு குடும்பம் தீர்மானித்தது.

வாக்கு பெறாமலே பதவிக்கு துடிக்கும் நபர் ஒருபுறமிருக்க, படேல் ஜி தனது பதவியை பெரும்தன்மையோடு விட்டுக்கொடுத்தார்.

ஒரு உண்மையான தலைவராக, எந்த வழியிலாயாலும், எந்த பொறுப்பில் இருந்தாலும் இந்த நாட்டிற்கு சேவை செய்வதுதான் நோக்கம் என்று சேவையாற்ற தீர்மானித்தார்.

இந்த தனித்தனியாக உள்ள சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்று, இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் படேல்.

சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்கும்  நடவடிக்கையில் சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிருந்த வேலை அவ்வளவு எளிதான ஒன்றல்ல.

அந்த தனித்தனி சமஸ்தானங்களின் பிரச்சனை மிகவும் கடினமானது, அதை உங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று காந்தியே கூட படேலிடம் கூறியிருந்தார்.

தொடர்ந்து படேலும் அவரது செயலாளர் வி.பி.மேனனும் அந்த சமஸ்தானங்களின் ஒவ்வொரு அரசரையும் சந்தித்துப் பேசினார்கள்.

இந்தியாவுடன் சேர விரும்பும் மாநிலங்கள் இந்திய ராணுவத்தால் பாதுகாப்பு பெறும்.

அனைத்து வெளிநாட்டு விவகாரங்களும் இந்திய அரசால் கையாளப்படும்.

சாலைகள் ரயில்வே தபால் போன்ற அனைத்து தகவல் தொடர்புகளும் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும். என்று கூறினார்கள்.

சமஸ்தானங்களின் மன்னர்கள் இனி மன்னர்களாக தொடர முடியாது, சாதாரண குடிமக்கள்தான் என்றூ இதைவிட சிறந்த வழியில் சொல்லி இருக்க முடியாதுதான்.

ஆனால் தான் ஏற்ற பொறுப்பை நிறைவேற்றுவதற்காக படேல் பல்வேறு கடினமான விசயங்களை செய்தார்.

முதலில் சமஸ்தானங்களின் மன்னர்களுக்கு தேனீர் விரும்துகள் ஏற்பாடு செய்து அவர்களை தமது இடத்திற்கு அழைத்தார்.

பின்னர் படேல்  அவர்களின் இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்தார்.

அவர்களில் சிலரிடம், அவர்களின் தேசபக்தியைத் தூண்டும் வகையில் பேசினார்.

அவர்களில் சிலரிடம், அவர்கள் இந்தியாவுடன் சேராவிட்டால் என்ன நடக்கும் என்று மறைமுகமாக அச்சுறுத்தும் விதத்தில் பேசினார்.

அவர்களில் சிலருக்கு, அவர் மன்னர்களின் சந்ததியினருக்கு பணம் செலுத்துவது போன்ற சலுகைகளை வழங்குவதாக தெரிவித்தார்.

ஆனால் பெரும்பாலும் தேசப்பற்றோடு அவர்களாகவே இந்திய யூனியனுடன் சேரும் விதத்தில் ஊக்குவித்தார்.

பலத்தை பயன்படுத்தி இணைக்க வேண்டும் என்று கருதியிருக்கவில்லை.

அரசர்கள் நல்லெண்ணத்துடன் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்றே அவர் நினைத்தார்.

அதே நேரம் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அவர்கள் சேருவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட அவர் காலக்கெடு விதித்தார்.

அதனைத் தொடர்ந்து 560 சமஸ்தானங்கள் விருப்பத்துடன் இந்திய ஒன்றியத்தில் இணைந்தன.

மூன்று மாநிலங்கள் மட்டும் அவ்வாறு இணைய மறுத்துவிட்டன. ஆனால் அவை அனைத்துமே விட்டுவிட முடியாத மிக முக்கியமான பகுதிகள் என்று கருதினார் படேல்.

ஜுனாகத், ஜம்மு கஷ்மிர், ஹைதராபாத் ஆகியவையாகும், இந்திய யூனியனில் இணைய மறுத்த அந்த மூன்று சமஸ்தானங்கள்.


பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்ட ஜுனாகத்; இந்தியாவுடன் இணைத்த படேல்

சர்தார் வல்லபாய் படேலின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்ததால் ஜூனாகத் அவரைப் பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

அதுமட்டுமல்ல அங்குள்ள கத்தியாவர் மாவட்டத்தில்தான் புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அமைந்துள்ளது என்பதாலும் அது முக்கியத்துவம் பெற்றது.

ஆனால் ஜூனாகத் மாவட்டத்தின் நவாப் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டார்.

ஜுனாகத் பாகிஸதானில் இருந்து வெகு தொலைவில் அமைந்திருந்தது மட்டுமல்ல, அங்கு மக்கள் தொகையில் என்பது சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் இந்துக்களாக இருந்தார்கள்.

படேல் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் மூலம், ஜூனாகத் பாகிஸ்தானுடன் சேருவதைத் திரும்பப் பெறுமாறு பாகிஸ்தானைக் கோரினார்.

ஆனால் 80 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் இந்துக்களாக இருந்த நிலையில் படேல் மற்ற வழிகளைப் பற்றி சிந்தித்தார், 

ஜுனாகத்தில் மக்கள் போடாட்டங்கள் தொடங்கின. 

பல போராட்டங்களுக்குப் பிறகு, நவாப் கராச்சிக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்திய இராணுவம் ஜூனாகத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

அதன் பின்னர் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் 99.5% மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கு வாக்களித்திருந்தார்கள்.

ஹைதராபாத்தை இணைத்த ஆபரெஷன் போலோ

தற்போதைய தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் பகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரும் சமஸ்தானமாக இருந்தது ஹைதராபாத்.

அதன் ஆட்சியாளர் நிஜாம் ஒஸ்மான் அலி கான் ஒரு முஸ்லீமாக இருந்தார்.

ஆனால் ஹைதராபாத்தின் மக்கள் தொகையில் 80% மக்கள் இந்துக்களாவார்கள்.

நிஜாம் சுதந்திரமாக இருக்கவோ அல்லது பாகிஸ்தானுடன் சேரவோ விரும்பினாரே தவிர இந்தியாவுடன் சேர்வதற்கு அவர் தயாராக இருந்திருக்கவில்லை.

சுதந்திரம் அடைந்து ஒரு வருடம் ஆன பிறகும், ஹைதராபாத் இந்தியாவுடன் இணைய தயாராக இருந்திருக்கவில்லை.

அதற்கிடையில்,ஹைதராபாத் வழியாக செல்லும் ரயில்கள்,தொடர்ந்து

ரசாகர்கள் எனப்படும், முஸ்லீம் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகின.

இரயில்கள் சூறையாடப்படுவதோடு, ஏராளமான இந்திய மக்கள் கொல்லப்பட்டார்கள்.

இது 1947 க்குப் பிறகு ஒரு வருட காலம் தொடர்ந்தது.

ஹைதராபாத்தை சுதந்திர நாடாக அனுமதிப்பது புவியியல் ரீதியாக சாத்தியமில்லாத ஒரு விசயமாக இருந்தது.

ஹைதராபாத் நாட்டின் பெரும்பகுதியை உட்கொண்டிருப்பது மட்டுமல்லாமல், 

வடக்கை தெற்கிலிருந்து தனியாக பிரிக்கும் விதத்தில் மையப்பகுதியில் அமைந்திருந்தது.

எனவே ஹைதராபாதை சுதந்திரமாக இருக்க அனுமதித்தாலோ, அல்லது பாகிஸ்தானுடன் சேர அனுமதித்தாலோ, அது இறுதியில் நாட்டின் தெற்குப் பகுதிகளை முழுமையாக இழப்பதற்கு வழிவகுத்துவிடும் என்று படேல் கருதினார்.

எனவே, சுதந்திர ஹைதராபாத் இந்தியாவிற்கு பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று வெளிப்படையாகவே பிரதமர் நேருவிடம் தெரியப்படுத்தினார்.

ஆனால் நேரு அமைதி மற்றும் வன்முறையில்லாமையை நம்பியதால், ஹைதராபாத் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அவர் தயாராக இருந்திருக்கவில்லை.

இறுதியாக 1948 செப்டம்பரில், படேல் நேருவை சமாதானப்படுத்தி, இந்தியா பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்க வேண்டிய சரியான நேரம் இது என்று உணர்த்தினார்.

ஆனாலும் நேரு தானாக உத்தரவுகளை நிறைவேற்ற தயாராக இருந்திருக்கவில்லை.

அதனால் அவர் ஒரு ஐரோப்பிய பயணம் சென்றிருந்த நேரம். பிரதமர் வெளியில் உள்ள நேரத்தில் துணைப்பிரதமர் என்ற வகையில் பிரதமராக இருந்த படேல், ஹைதராபாத் மீது படையெடுக்க இந்திய ராணுவத்திற்கு உத்தர்விட்டார்.

ஆபரேஷன் போலோ என்று பெயரிடப்பட்ட அந்த நடவடிக்கையின் மூலம் வெறும் நான்கு நாட்களில் இந்திய ராணுவம் ஹைதராபாத்தை கைப்பற்றியது.

இறுதியாக, அதிர்ஷ்டவசமாக ஹைதராபாத் பாதுகாக்கப்பட்டு இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது.

ஜம்மு கஷ்மிரை இணைக்கும் பொறுப்பை ஏற்ற நேரு

இந்தியாவோடு இணையாமல் விடுபட்டிருந்த ஒரே மாநிலம் ஜம்மு கஷ்மிர் மட்டும்தான்.

ஜம்மு காஷ்மீரை இணைக்கும் பொறுப்பை நேரு தாமே ஏற்றார்.

அவர் அதை ஒரு நிரந்தரமான கழுத்து வலியாக மாற்றியது மட்டுமல்ல,

அவரது ஆட்சியின் போது, ​​சுமார் 1.25 லட்சம் சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இழ்ந்துள்ளது நாடு.

அதே நேரம் இந்தியாவில் இருந்த 562 சமஸ்தானங்களை அந்த சர்தார் வல்லபாய் படேல் என்ற இரும்பு மனிதர் ஒருங்கிணைத்தார்.

அதனால்தான் சர்தார் வல்லபாய் படேல் the leader of national unity and integrity, என்று சிறப்பிக்கப்படுகிறார்.

அதனால்தான் அவர் இரும்பு மனிதர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

அதனால்தான் அவர் உலகிலேயே உயரமான சிலை வைத்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அதனால்தான் அவர் சார்ந்திருந்த கட்சி மறந்தபோதிலும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் அவருக்கு வானுயர சிலை அமைத்து கௌரவப்படுத்தியுள்ளார்.

இதுவரை கேட்டதில் இருந்து உங்களது மனங்களில் என்ன தோன்றுகிறது?

சர்தார் வல்லபாய் படேல் அந்த மிகப்பெரும் சிலையை அமைத்து கௌரவிக்க தகுதியானவர்தானா?

இனி யாரேனும் கற்பனையில் நோபல் பரிசு பெற்ற கயவர்கள் படேலுக்கு ஏன் இவ்வளவு பெரிய சிலை என்று கேட்டால், இந்த பதிவில் கேட்ட விசயங்களைக் கூறுங்கள்.

காந்தியை விட நேருவை விட படேல்தான் இத்தகைய ஒரு கௌரவத்திற்கு தகுதியானவரா என்று கேட்டால் ஆம், 

காந்தியை விட நேருவை விட அந்த கொரவத்திற்கு படேல்தான் எல்லா விதத்திலும் பொருத்தமானவர் என்று கூறுங்கள்.

சர்தார் வல்லபாய் படேல் இல்லாவிட்டால் இப்போது இருக்கும் இந்தியா அமைந்திருக்காது.

இங்கு மற்றொரு கோமாளித்தனமும் நடத்தப்படுகிறது.

தங்களுடைய தலைவரான படேலை பாஜக திருடுகிறது என்று விமர்சிக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்ததே,

அப்போது ஏன் படேல்ஜியின் முயற்சிகள் போதுமான அளவு அங்கீகாரத்தை பெற்றிருக்கவில்லை.

அப்போது ஏன் பட்டேலின் முயற்சிகளையும் சாதனைகளையும் போற்றிக் கொண்டாடி இருக்கவில்லை?

படேல் மீது நேரு கொண்டிருந்த ஈகோ காரணமாகவா? 

என்னவென்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் கமண்டில் தெரியப்படுத்துங்கள்….,

இங்குதான்  உண்மையான தேச பற்றும், கோமாளித்தனமும் அல்லது வேடமும் வேறுபடுகிறது.

பாரதப்பிரதமர் நரேந்திர மோடி உண்மையான தேசப்பற்று மிக்க தலைவராக இருப்பதால்தான், 

இந்த நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும், யார் நல்லது செய்திருந்தாலும் அவர்களை பாராட்டவும், போற்றவும் செய்கிறார்.

படேலின் சாதனைகளை போற்ற வேண்டும், அந்த சாதனையை அங்கீகரித்து உலகப்புகழ் பெறும் விதத்தில் சிலை அமைத்து அவரை கௌரவித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்ட வேண்டும்……

யார் செய்தாலும் இந்திய திருநாட்டின் நலனுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடுபவர்களை போற்ற வேண்டியது குடிமக்களின் கடமையாகும்,

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்….

ஜெய்ஹிந்த்  

Join WhatsApp

Join Now
---Advertisement---