---Advertisement---

சிவ நாடார் சிகரம் தொட்ட வரலாறு | Shiv Nadar success story

சிவ நாடார்
---Advertisement---

சிவ நாடார் என்னும் தொழிலதிபரைத் தெரியுமா? 

இந்தக் கேள்வி பொருத்தமானதா? அவசியமானதா என்பது தெரியவில்லை.

காரணம் இன்று ஷிவ் நாடாரைத் தெரியாதவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்பதுதான்.

சூரியன் தமக்குக் கொடுக்கும் ஒளியை பூமிக்கும் பகிர்ந்து கொடுக்கிறது நிலவு.

சூரியனைப் போல் இறைவன் தமக்குத் தரும் செல்வத்தை பலருக்கு பகிர்ந்து கொடுக்கும் நிலவு போன்ற குணமுடைய மனிதர்கள் நிறையேப்பேர் இந்த பூமியில் இருக்கிறார்கள்.

மனித இனம் எவ்வளவோ மோசமடைந்தாலும், இன்று என்னதான் நற்பன்புகள் எல்லாம் குறைந்து போயிருந்தாலும், விதிவிலக்கான நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.

இன்றைய காலத்திலும் அவ்வாறு இருக்க முடிகிறது என்பதால் அவர்களை கடவுளின் அவதாரங்கள் என்றே கூடச் சொல்லலாம்.

அத்தகைய சிறந்த பன்பாளரான ஒரு உயர்வான மனிதரைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் மிகவும் கனிவான மனிதர்

இந்தியாவின் மிகப்பெரிய பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மூன்றாவது பெரிய நிறுவனமான,   HCL அதாவது ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (Hindustan computers Limited) இன் நிறுவனர்.

மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவர், பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் என்பதை எல்லாம் தாண்டி, 

அவர் இந்திய மகா தேசத்தின் மிகவும் கனிவான உள்ளம் கொண்டவராக அறியப்படுகிறார்.

அந்தளவுக்கு தான தர்மங்களைச் செய்து வருகிறார் ஷிவ் நாடார்.

கடந்த ஆண்டு மட்டும் 2042 கோடி ரூபாயை தொண்டு நிறுவனங்களுக்காக செலவு செய்துள்ளார் அவர்.

அவரைப் பொறுத்தவரை அதைச் செல்வாகப் பார்க்கவில்லை. 

மாறாக இந்த பூமிக்கு தம்மை அனுப்பிய இயற்கைக்கு திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடனாகப் பார்க்கிறார்.

எளிய குடும்பச் சூழலலில் இருந்து வந்த சிவ நாடார்

உலகப்புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவரோ, அல்லது ஐ.ஐ.டி பட்டதாரியோ அல்ல ஷிவ் நாடார்.

தமிழகத்தில், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள கடலோரக் கிராமமான மூலைபோழி கிராமத்தில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். 

வறுமையான குடும்பம் என்பதால், பசியைப் போக்கும் திறன் இல்லாத நிலையில், வயிறு நிறைய உண்பதுதான் அவரைப் பொறுத்தவரை ஆடம்பரமாக இருந்துள்ளது.

ஆனால் அத்தகைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கல்வியில் மிகுந்த ஆர்வம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

கல்விக்கான செலவுகளைக் கையாளும் அளவுக்கு வசதி இல்லாமல் இருந்ததால், மாறி மாறி பல பள்ளிகளில் படித்துள்ளார் சிவ நாடார்.

படிப்பில் சிறந்து விளங்கிய சிவ நாடார்,  மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து, பின்னர் PSG தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.

1970களில், பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருந்த நிலையில், எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திலும் நல்ல சம்பளத்தில் மிக சுலபமாக வேலை கிடைத்திருக்கும்.

ஒரு கல்லூரியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சிவ நாடார், பின்னர் டெல்லி கிளாத் மற்றும் ஜெனரல் மில்ஸில் வேலைக்க்குச் சேர்ந்தார். 

அங்கு நல்ல சம்பளமும் கௌரவமும் உண்டு. 

ஆனால் சிவ நாடார் வேலையை விட்டுவிட்டு, 7 நண்பர்களுடன் இணைந்து ஒரு கணினி நிறுவனத்தைத் தொடங்கினார்.

கிடைத்த சம்பளத்தில் செலவுகள் போக சேமித்து வைத்திரும்த பணம் மட்டுமே தங்களிடம் இருந்த நிலையில், அது ஒரு சாகச முயற்சியாகவே இருந்தது.

1976 இல் HCL தொடங்கப்பட்டபோது, ​​உலகில் கணினிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது கூடத் தெளிவாக தெரியாத நிலை இருந்தது.

அப்போதுதான் ஆப்பிள் நிறுவனம் அதன் முதலாவது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மெகிண்டோஷை வெளியிட்டு ஓராண்டு ஆகியிருந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன், Basic Language Program ஐ அப்போதுதான் அறிமுகம் செய்திருந்தது.

எனவே கணினிகளுக்கு எதிர்காலம் உள்ளதா? அது சார்ந்து செய்யப்படும் முதலீடுகள் லாபகரமானதாக இருக்குமா என்று யாருக்கும் தெரியாத காலம்.

அந்த நேரத்திலேயே முத்து நகராம் தூத்துக்குடியின் இந்த முத்தான மனிதருக்கு, கம்ப்யூட்டர் தயாரிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.

கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டிய சரியான முறையும், பலன்களும்

வாய்ப்பைப் புரிந்து கொண்ட சிவ நாடார்

அன்று ஒரு புதிய மற்றும் மிகப்பெரிய முயற்சியில் குதிக்கும் அளவுக்கு பொருளாதார வலிமை இருந்திருக்கவில்லை சிவ நாடாருக்கு.

அதனால் பலர் அவரது அந்த முயற்சிகளை  தேவையற்றது என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் மற்றொரு சாதகமான சூழ்நிலையும்  உருவாகிக் கொண்டிருந்தது.

அதாவது, 1970 களின் நடுப்பகுதியில், வெளிநாட்டு  கணினி பிராண்ட் ஆன IBM ஐ நாட்டிலிருந்து வெளியேற்றியது மத்திய அரசு.

அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. அதைப்பற்றி மற்றொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அந்த அரசியல் சூழ்நிலை உள்நாட்டு பிராண்ட்டுகளை வளர்ச்சியடையச் செய்யும் என்பதை அறிந்திருந்தார் சிவ நாடார்.

அதனைத் தொடர்ந்து 8 – Bit Processor உடன் முதலாவது கணினி 1977ல் அறிமுகம் செய்யப்பட்டது. அது இந்தியாவின் சொந்தமான முதலாவது கணினி.

1983 வாக்கில், வன்பொருள் மட்டுமின்றி மென்பொருள் துறையிலும்  இறங்கியது HCL. 

இந்தியாவின் முதல் (Database management system) தரவுத் தள மேலாண்மை அமைப்பை உருவாக்கியது HCL.

1990 கள் ஆனபோது, கணினிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆளப் போகின்றன என்பதை உலகம் உணர்ந்தது.

அப்போதெல்லாம் HCL இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் அதன் இருப்பை வெளிப்படுத்தி இருந்தது.

வருவாய் மற்றும் பிராண்டில் குதித்து உயரும் நிறுவனமாக விளங்கியது HCL!

நடந்த வழியும் அது நல்கிய பாடமும் மறக்காத சிவ நாடார்

சிறியதோ, பெரியதோ, எந்தவொரு வணிகத்தையும் நிர்வகிக்கும் தொழில்முனைவோர் சமூக அந்தஸ்தையும், நிதிப் பெருக்கத்தையும் நோக்கமாக கொண்டிருப்பார்கள்.

ஒரு வணிகத்தை நடத்துவதற்கு பணம் ஒரு அடிப்படைக் காரணியாக இருப்பதால், தொழில்முனைவோர் இயல்பாகவே செல்வத்தைச் சுற்றியேதான் செயல்படுவார்கள்.

அதில் பிறக்கும்போதே செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்து, குடும்பத் தொழிலைக் கவனித்துக் கொண்டு இருப்பவர்கள் செல்வத்தைச் சுற்றியே செயல்படுவார்கள் என்பது ஒரு வகையாகும்.

அவர்களைக் கூட ஒரு வகையில் நியாயப்படுத்தலாம், இரண்டாம் ரகத்தினரோடு ஒப்பிடும்போது.

அதாவது, ஏழ்மையான அல்லது நடுத்தரக் குடும்பச் சூழலில் பிறந்து, வறுமையை அனுபவித்திருப்பார்கள்.

ஆனால் பிற்காலத்தில் பணம் சம்பாதித்தவுடன் அனைத்தையும் மறந்து விட்டு, சாதாரண மக்களிடம் இருந்து அன்னியப்பட்டுப் போகும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

செல்வம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் சிலர் என்றால், செல்வம் நிறையச் சேர்த்துவிட்ட நிலையில் அவ்வாறு மாறிவிடுவார்கள்.

பணம் சேர்ந்தவுடன் அது இல்லாத காலத்தின் பொல்லாத அனுபவங்களை எல்லாம் மறந்து விடுவார்கள் இங்கு பெரும்பாலானவர்கள்.

ஆனால் கடந்து வந்த வறண்ட பாதையையும், பசியில் வதைத்த வயிறையும், அவற்றின் மூலமான அனுபவங்களையும், அவமானங்களையும் எல்லாம், ஆழ் மனதில் கல்வெட்டாகப் பதித்து வைத்திருக்கும் சிலர் இருக்கிறார்கள் இன்றும்.

அத்தகையவர்களில் இன்று இந்தியாவிலேயே மிகவும் முன்னிலையில், கனிவான உள்ளத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர்தான் சிவ நாடார்

நிறுவப்பட்டு அரை நூற்றாண்டை நெருங்கும் HCL நிறுவனத்தின் மதிப்பு நான்கரை லட்சம் கோடிக்கு மேல். 

தனிப்பட்ட சொத்துமதிப்பு, லட்சம் கோடிக்கு அருகில்.

மனித நேயமுள்ளவர்களில் முதன்மையானவர்

அடிப்படையான வாழ்க்கைச் சூழல் இல்லாதவர்களுக்கு அதை ஏற்படுத்திக்  கொடுப்பதற்காக இந்த கோடிகளின் சாம்ராஜ்ஜியத்தைப் பயன்படுத்துகிறார் சிவ நாடார்.

அதற்காக கடந்த ஆண்டு மட்டும் 2042 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 5 கோடிக்கு மேல் அவரது கணக்கில் இருந்து மனிதநேயப் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்படுகிறது. 

அவரை விட அதிக வருமானமும், அதிகமான சந்தை மதிப்பும் உள்ள நபர்களும் இங்கு இருக்கிறார்கள்.

பணக்காரர்கள் பட்டியலில் அவர் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். 

ஆனால் மனித நேயத்திலும், கருணையிலும் சிவ நாடார்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் பாகமாக அரசு நிர்ணயித்த தொகையை செலவு செய்துவிட்டு நழுவும் கோடீஸ்வரர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு மத்தியில் , சட்டப்பூர்வமாகச் செய்ய வேண்டியதை விட நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமாகச் மனிதாபிமான உதவிகளுக்காகச் செலவு செய்கிறார் சிவ நாடார்.

சம்பாதிப்பது மட்டுமே பெருமையல்ல, மகிழ்ச்சியல்ல, மாறாக கொடுப்பதில் அதைவிடப் பெருமையும், மகிழ்ச்சியும் உள்ளதென்று ஒருவேளை உணர்ந்திருப்பார் சிவ நாடார்.

அந்த ஆத்ம பந்தத்தின் காரணமாகவோ என்னவோ, அவரது மகள் தந்தையை விட பெரிய ஆளுமையாகத் திகழ்கிறார்.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த, பணக்கார மற்றும் மரியாதைக்குரிய 100 பெண்களில் ஒருவராகத் திகழ்கிறார் சிவ நாடாரின் மகள் ரோஷினி சிவ நாடார்!

இன்று HCL டெக்னாலஜிஸ் தலைவராகவும், இந்தியாவின் பணக்கார பெண்களில் முதலாம் இடத்திலும் உள்ளார் ரோஷினி நாடார்.

கிடைப்பதை எல்லாம் கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்காமல், உதவிக்காக காத்திருப்போருக்கு கொடுக்க வேண்டும். 

கொடுப்பதை சொல்லிக்காட்டாமல் இருக்க வேண்டும்.

அவ்வாறு ஒருவரால் இருக்க முடிந்தால், அவருக்கு காலம் கணக்கில்லாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

பணமும் செல்வமும் மட்டுமல்ல, மனமும் குணமும் ஆரோக்கியமாக இருக்க இயறை அருள்புரியும்.

அதனால்தான் சிவ நாடார், டாடா, அசிம்பிரேம்ஜி போன்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கொடுக்கிறார்கள்.

ஆம், சிவ நாடாரும், அசிம் பிரேம்ஜியும் செய்யும் மனிதாபிமான உதவிகளைப் பார்க்கும்போது அவர்கள் போட்டி போடுவது போலவே தோன்றும்.

மனித நேய செயல்களுக்கும், தான தர்மங்களுக்கும் செலவு செய்யும் தொகையை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறார்கள்.

மற்றவர்கள் ஆடம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும்போது, ​​இவர்கள் சுயமாக சம்பாதித்த செல்வத்தை ஆன்மீக உயர்வுக்காக மகிழ்ச்சியுடன் செலவிடுகிறார்கள். காரணம் என்ன?

வியாபாரத்தை தாண்டி யோசித்த சிலர் இருந்ததால்தான் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள கடலோர கிராமமான மூலைபோழி கிராமத்தைச் சேர்ந்த அந்த ஏழைப் பையன் பொறியியல் பட்டதாரியாகவும், லட்சக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களுடைய சிவ நாடாராவும் மாறினார்!

உழைப்பால் உயர்ந்தவர்கள், பணக்காரர்களாக மாறியவர்கள் இங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் பணம் சேர்ந்த பிறகு ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்தவர்களைப் போல் நடந்து கொள்பவர்களாக பெரும்பாலானவர்கல் இருப்பதைப் பார்க்கிறோம்.

ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே, பழைய காலத்தை நினைத்து, அந்த பழைய காலத்தில் அவர்கள் இருந்த நிலையில் இறு இருப்பவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு உதவும் மனதைக் கொண்டுள்ளார்கள். 

அத்தகைய மொத்தப் பேரின் ஒரு உருவமாக சிவ நாடாரைப் பார்க்கலாம்.

ஆம், யாரோ ஒருவரின் கருணையோடும், உதவியோடும் பசியைப் போக்கியும், கல்வி பயின்றும் முன்னோக்கிச் சென்ற நேரத்தில்,

தாம் தளிர்த்து வளர்வது தம்மைத் தாங்குவதற்காக மட்டுமல்ல,  ​​தளர்ந்து போனவர்களுக்கு நிழல் கொடுக்கவுமாக இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார்.

நல்கும் நற்பேறு பெற்ற சிவ நாடார்

இன்றும் என்றும் சிவ நாடாராக அறியப்படுவதையே தாம் விரும்புவதாகக் கூறுகிறார் அவர்.

மற்றவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்த அதிர்ஷ்டசாலி சிவ நாடார்!

அவர் HCL நிறுவனர் என்றோ! 1 லட்சம் கோடி நிகர மதிப்புள்ள நபர் என்றோ! இந்தியாவின் முதல் கணினியை உருவாக்கியவர் என்றோ!  4 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள நிறுவனத்தை நிறுவியவர் என்றோ சிறப்பிக்கப்படலாம்.

இந்த சிறப்புக்கள் அல்லது பட்டங்கள் எதையும் கிரீடமாக சுமந்து கொண்டு பெரும்பைப்பட விரும்பவில்லை அவர்.

மாறாக செய்ய வேண்டியதை அமைதியாக செய்து ஆரவாரங்களில் இருந்து விலகி ஒரு பார்வையாளரைப் போல் நிற்கிறார்! அந்த உயர்ந்த மனிதர்…

நல்ல மனிதர்களை உருவாக்க! நல்ல சமூகத்தை உருவாக்க! நல்ல சூழலை உருவாக்க! இவர் போன்றவர்களின் வரலாறுகளைத் தெரிந்து கொள்வதோடு, குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்…..

மனிதனுக்கு உண்மையில் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் எதில் உள்ளதென்பதை புரிந்து கொண்டாலே சமூகம் நல்ல சமூகமாக மாறிவிடும்…

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment