---Advertisement---

ரத்தினமே ஆன ரத்தன் டாடா .!| Amazing facts about Ratan TATA

ரத்தன் டாடா
---Advertisement---

இந்தியா கண்ட மிகவும் அந்தஸ்துள்ள தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் யார் என்று கேட்டால் இந்தியா  ஒரு உயர்வான மனிதனை சுட்டிக்காட்டும். அது வேறு யாரும் அல்ல, சாட்சாத் ரத்தன் டாடாவேதான். 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு. 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, டிஜிட்டல் மீடியாவும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் விஸ்வரூபம் எடுத்துள்ள  இந்த பதிற்றாண்டிலும் மிகவும் அப்டேட்டடாக இருந்த மனிதர்.. அனைவரிடமும் செல்வாக்கு செலுத்தும் சக்திதான் ரத்தன் டாட்டா என்ற அந்த கடவுளின் பிரதிரூபமான மனிதர்.

இந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்களில், முகத்தை நினைக்கும்போதே இவ்வளவு மரியாதையும் அற்புதமும் தோன்றுவது ரத்தன் டாட்டாவைத் தவிர முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமை நினைக்கும்போது மட்டுமாகத்தான் இருக்கும்.

ரத்தன் டாடா வழிநடத்திய நிறுவனம்

1990களில் டாடா நிறுவனம், நாட்டின் முதல் உள்நாட்டு தயாரிப்பு காரான டாட்டா இண்டிக்காவை சந்தையில் இறக்கியது. ரத்தன் டாட்டா என்ற சாகசிகனாய தொழிலதிபரின் கனவாக இருந்தது அது. ஆனால் நினைத்ததுபோல் தொடக்கத்தில் சந்தையில் வரவேற்பைப் பற்றிருக்கவில்லை அந்தக் கார்.

எட்டு ஒன்பது ஆண்டுகளுக்குள் முன்னோக்கி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. டாடா நிறுவனம் கார் உற்பத்தி பிரிவை விற்க முடிவு செய்தது. ரத்தன் டாடா அமெரிக்காவிலுள்ள டிட்ராய்ட்டில் சென்று, கார் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியான பில் ஃபோர்டைக் கண்டார்.

ஃபோர்ட் நிறுவனத்தின் தலைவரான பில் ஃபோர்டுடன் மூன்று மணி நேரம் நீண்ட விவாதம்.  விவாதத்தின் முடிவில் ஃபோர்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தார் ரத்தன் டாடா. காரணம் ஏழை நாடான இந்தியாவின் கார் உற்பத்தி நிறுவனத்தை அந்த அளவு குறைத்து மதிபிட்டிருக்கும் ஃபோர்ட் நிறுவனம்.

அவமானத்தால் அவர் அங்கிருந்து வெளியேறினார் என்றுதான் அறிய முடிகிறது. இந்தியா திரும்பிய அவர் கார் உற்பத்தி துறையில் ஈடு செய்ய முடியாத வெற்றிகளைக் குவித்தார்.

இந்தியாவின் கார் உற்பத்தித் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்த டாடாவைத் தூண்டியது, ஃபோர்ட் நிறுவனத்தின் முன் ஏற்பட்ட அவமானகரமான அந்த அனுபவம்தான்.

தொடர்ந்து டாடாவின் கார் மாடல்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிராண்டாக மாறியது. ஆனால் காலம் அதோடு நிறுத்தவில்லை.

ஒரு தன்னலமற்ற, கடின உழைப்பாளியான தொழிலதிபரின் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக,  ஒவ்வொரு இந்தியனையும் பரவசப்படுத்தும் விதத்திலான வெற்றிகளைக் கொடுத்தது காலம்.

2008 இல் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, ​​பல அமெரிக்க வணிகங்கள் சரிந்தன.  அதிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரத்தனின் மனதை காயப்படுத்திய ஃபோர்டு நிறுவனம் கடனில் மூழ்கியது.

அவர்களின் பெருமைமிக்க பிராண்ட் ஜாகுவார்-லேண்ட் ரோவரை விற்பதைத் தவிர வேறு வழி இல்லாத நிலை ஏற்படது. ஜாகுவார்-லேண்ட் ரோவரை வாங்குவதற்கு திறனும், வசதியும் உள்ள நிறுவனங்களை உலகம் முழுவதும் ஃபோர்ட் நிறுவனம் தேடிக் கொண்டிருந்தது.

திவாலான பில் ஃபோர்டின் மேசையில் இரண்டரை பில்லியன் டாலர்களுக்கான காசோலையை வைத்தார், பத்தாண்டுகளுக்கு முன்பு டாடா மோட்டார்ஸை விற்பதற்காக ஃபோர்டை அனுகியிருந்த அதே ரத்தன் டாடா.

ஃபோர்டின் எக்காலத்தைய தனிப்பட்ட அகங்காரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, மண்டியிட வைத்திருந்தார் அந்த மாமனிதர். ரத்தன் டாடா என்ற மேதையான தொழிலதிபரை அளவிடுவதற்கு இதை விட  வேறு என்ன வேண்டும். 

வியாபாரத்தில் இதைவிட இனிமையான ஒரு பழிவாங்கல் யாரால் முடியும்?! அதுதான் ரத்தன் டாடா. 

அவ்வாறு உலகின் மிகவும் ப்ரீமியம் கார் பிராண்டான ஜாகுவார் – லேண்ட் ரோவரின் உரிமையாளராக மாறியது இந்தியாவின் பெருமைக்குரிய டாடா நிறுவனம். மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் ரத்தன் டாடா இடம்பிடித்திருக்க மாட்டார்.  முகேஷ் அம்பானி போன்றவர்கள் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் நிலையி, அந்தப் பட்டியலில் அவர் இடம்பெறாமல் இருக்கலாம்.

ஆனால், ஒவ்வொரு இந்தியனும் தன் மனதால் நேசிக்கும் ஒரு தொழிலதிபர் இந்தியாவில் இருக்கிறார் என்றால் அது ரத்தன் டாடாதான்.

தனிப்பட்ட முறையில், நாமும் போற்றும் ஒரு மாமனிதனான தொழிலதிபர்.  மனிதாபிமானத்திற்கு அழகு சேர்த்த ஒரு மனிதர். ஜே.ஆர்.டி.டாடாவால் கட்டமைக்கப்பட்ட டாடா பிராண்டின் மீதான மரியாதையும், ரத்தன் டாடா தனது வாழ்க்கையில் இழைத்திருக்கும் மனித ஒழுக்கமும், மதிப்புகளின் உணர்வும்தான் அவரை ஒவ்வொரு இந்தியரின் பாராட்டுக்குரியவராக மாற்றியுள்ளன.

அவருக்கு 10 வயது இருக்கும் போது, ​​அவரது தந்தையும் தாயும் பிரிந்து விட்டார்கள். தனிமையிலும், அவமானத்திலும் வளர்ந்த சிறுவன் ரத்தன் டாடாவை எத்தனை பேருக்கு தெரியும்?

கசப்பான குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் மிகவும் அற்புதமாக வளர்த்துக் கொண்ட வாழ்க்கையின் மதிப்பு உணர்வுதான், செல்வத்தின் இன்பங்கள் அந்த மனிதனைத் நெருங்காமைக்குக் காரணம்.

தேசம் அவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தபோது, ​​பத்ம விருதுகளும் பெருமைப்பட்டன என்பதுதான் உண்மை.

கல்வி, சுகாதாரத்துறையில் புதுமைகள், கிராமப்புற வளர்ச்சி, போன்றவற்றிற்கு வழங்கும் அளவில்லாத உதவிகள். விலங்குகள் உள்ளிட்ட சக உயிரினங்களின் மீது அக்கறையும் அன்பும், வாழும் இந்த இயற்கையின் மீதான அன்பு..எளிமையான வாழ்க்கை.. இவையனைத்தும் அவரை நூறு மடங்கு நேசிக்க வைக்கும் பண்புகளாகும்.

அவர் எங்கு தலையிட்டாலும் அங்கு ஒரு அசாதாரண தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார். கொரோனா காலத்தில் போராடிக்கொண்டிருந்த முன்னாள் டாடா ஊழியர்களுக்கு ரத்தன் டாடா, புனேயில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உதவியது எத்தனை பேருக்கு நினைவில் உள்ளதென்று தெரியவில்லை.

அதை அவர் எந்த வித  முன்னறிவிப்புமே  இல்லாமல் செய்திருந்தார்.  தொற்றுநோய் பரவல் காலத்தில், ​​அவர் டாடாவின் ஊழியர்களை அரவனைத்து வழிநடத்தினார்.

அதோடு பொது மக்களுக்கு 500 கோடி மதிப்பிலான மருத்துவ உதவி மற்றும் பிற வசதிகளை வழங்கினார். கேமரா பார்வையில் பட வேண்டும் என்பதற்காக எதையும் செய்திருக்கவில்லை அந்த மனிதர். அரசியல் உள்நோக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை.

பல பணக்கார வணிகர்களைப் போல கூட்டத்தைக் கூட்டி பொது சேவையில் பெருமை தேட முயற்சிக்கவில்லை. உயர்வான ஒரு தொழிலதிபர் என்று சொல்லத் தோன்றுகிறது அவரை. எதனால் என்பது தெரியாது, ஆனால் மக்கள் ரத்தன் டாடாவை வானளவு நேசிக்கிறார்கள்

ரத்தன் டாடா 1962ல் டாடா நிறுவனத்தில் சேர்ந்திருந்தார்.  டாடா சன்ஸ் அதன் வருவாயில் 60 சதவீதத்தை சமூக மற்றும் மனிதாபிமான காரணங்களுக்காக ஒதுக்குகிறது.  இந்திய வரலாற்றில் டாடா தான் மிகப்பெரிய அறக்கட்டளையாகும்.

ரத்தன் டாடா 7416 கோடி இந்திய ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட மனிதராவார். மாதக் கணக்கில் பார்த்தால் 90 கோடிக்கும் மேலாக இருந்தது அவரது சம்பளம். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இயங்குகின்றன டாடா குழுமத்தின் கீழ்.

இதையும் பார்க்கவும்: சர்தார் வல்லபாய் படேல்: ஒற்றுமையின் சிலை எதற்காக?

ரத்தன் டாடாவின் இளமைப் பருவம்

தந்தையும் தாயும் பிரிந்தபோது ரத்தனுக்கு 10 வயது என்று கூறப்பட்டது.  பெற்றோரை இழந்த வேதனையில் அந்த குழந்தைக்கு நிழலாக இருந்தவர் அவரது பாட்டிதான். 1940களில் விவாகரத்து ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக இருந்தது. 

பெற்றோரின் விவாகரத்து காரணமாக ரத்தன், சமூகத்தின் அவமானத்தையும் புறக்கனிப்பையும் எல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது. தலை நிமிர்ந்து வாழவும், வாழ்க்கையை நம்பிக்கையுடன் பார்க்கவும் கற்றுக் கொடுத்தது பாட்டிதான் என்று பின்னர் கூறியுள்ளார் அவர்.

அவர் அமெரிக்காவில் உள்ள கார்னெல் கல்லூரியில் சேர்ந்து, பி.ஆர் தேர்ச்சி பெறும் வரை அங்கேயே நேரத்தைச் செலவிட்தும், அதன் பிறகு அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வேலைக்குச் சேர்ந்தும்தான், ரத்தன் டாடா தனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ந்த காலக்கட்டமாகப் பார்க்கப்படுகிறது.

அவர் இங்கிலாந்து சென்று இன்ஜினியரிங்கில் சேர வேண்டும் என்று அவரது தந்தை விரும்பியிருந்தார்.  ஆனால் ரத்தன் கட்டிடக்கலை படிக்க விரும்பினார். லாஸ் ஏஞ்சல்ஸில், கண்ணியமான இந்த இளவரசருக்கு ஒரு காதலும் ஏற்பட்டுள்ளது. காதலி ரத்தனுடன் இந்தியா வரவும் தயாராக இருந்துள்ளார்.

திருமணம் செய்யலாம் என்ற நிலை வரை சென்ற அந்தக் காதல், ரத்தன் இந்தியாவிற்கு தனது பாட்டியைக் காண வந்ததாலும், வேறு சில காரணங்களாலும் நிறைவேறாமல் போனது. அவரே தனது வாழ்க்கையில் நான்கு தீவிர காதல்கள் இருந்ததாக கூறியுள்ளார். 

இளமையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இருந்த ரத்தனுக்குகு, திருமண குறிப்பை அச்சிடுவதற்கு முன்பே அவரது காதல் வாடிப்போனது.  அதன் பின்னர் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளவில்லை.

தொழில்நுட்பத்தின் புதிய பகுதிகளில் வணிகத்தைத் திறந்து, உலக வணிக வரைபடத்தில் டாடாவுக்கு மதிப்புமிக்க இடத்தைப் பெற்றுத் தந்தவர் அவர்.  ஏர் இந்தியாவை டாடா கையகப்படுத்தியதில் பெரும்பாலான இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.  அதற்கு காரணம் ரத்தன் டாடா என்ற உயர்வான மனிதர் அதன் பின்னில் இருக்கிறார் என்பதால்தான்.

வழி நடத்துபவரின் நேர்மையும், அவர் தனது செயல்களால் சமுதாயத்திற்கு அளிக்கும் பிரகாசமும், ஒரு பிராண்டை எந்தளவு உயரத்திற்கு கொண்டு சேர்க்கும் என்று அவரது வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

கிங்பிஷரின் விஜய் மல்லையாவையும், ரிலையன்ஸின் அனில் அம்பானியையும் பார்த்துள்ள இந்திய மக்களுக்கு, ரத்தன் டாடா என்ற மகா மனிதனை படிப்பது சிரமமல்ல.

அதனால் அவரை போற்றுவதற்கான காரணங்களுக்குப் பஞ்சமும் இல்லை.

இதையும் பார்க்கவும்: சிவநாடார் சிகரம் தொட்ட வரலாறு

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment