---Advertisement---

விமானங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கின்றன? | Amazing facts

விமானங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கின்றன?
---Advertisement---

பயணிகள் விமானங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கின்றன?, அல்லது பெரும்பாலும் 35000 அடி முதல் 42 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறது என்ற சந்தேகம் உங்களில் பலருக்கும் எழக்கூடும்.

விமானம் புறப்படும் நேரத்தில் செய்யும் அறிவிப்பின் போதுகூட எவ்வளவு உயரத்தில் விமானம் பறக்கவிருக்கிறது என்று கூறுவதுண்டு.

அதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன. அதேபோல சில நன்மைகளும் உள்ளன.

என்ன காரணம்? யாருக்கு நன்மை என்பதையெல்லாம் இந்தப்பதிவில் பார்க்கலாம்.

விமானங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கின்றன? (Why Do Airplanes Fly So High?)

 எதனால் விமானங்கள் 35000 அடி உயரத்திற்கு மேல் பறக்கின்றன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பதிவை முழுவதும் பார்த்துவிட்டு உங்களதுகருத்துக்களை தெரியப்படுத்துங்கள்……

விமானங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கின்றன?

விமானம் பறக்கும் நேரத்தில் ஒவ்வொரு அடி மேலே செல்லும்தோறும் காற்றின் கணம் குறைந்து மெல்லியதாக இருக்கும். 

அதாவது மேலே செல்லச் செல்ல காற்றின் மூலக்கூறுகள் மிகக் குறைவாக இருக்கும்.

எனவே விமானங்கள் பறப்பதற்கு குறைவான உயரத்தில் உள்ள அளவு காற்றின் எதிர்வினை அதிக உயரத்தில் பறக்கும்போது இருக்காது.

அதன் காரணமாக விமானங்கள் அதிக உயரத்தில் மிக எளிதாக பயணிக்க முடியும்.

எனவே வேகமாக நகர முடிவதோடு குறைவான எரிபொருள் செலவே ஏற்படும்.

அதனால் விமான நிறுவனத்திற்கு செலவு குறைகிறது.

இதுதான் விமானம் அதிக உயரத்தில் பறபதற்கான முதன்மையான காரணம்.

விமானம் பறப்பதற்கு உகந்த உயரம்

விமானம் பறப்பதற்கு ஏற்ற உயரம் என்று 35,000 முதல் 42,000 அடி வரை கருதப்படுகிறது.

அதை விட அதிக உயரத்தில் பறக்கும்போது எந்திரங்களின் எரிபொருள் எரிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் மிக குறைந்த அளவே கிடைக்கும்.

குறைந்த உயரத்தில் பறக்கும்போது காற்றின் எதிர் விசை மிக அதிகமாக இருக்கும்.

 இந்த உகந்த உயரம் வணிக ஜெட் விமானத்தின் வழக்கமான எடையுடன் இணைக்கப்பட்டுள்ளது – அதாவது, எடை அதிகமுள்ள விமானங்கள் தாழ்வாகவும், எடை குறைவாக உள்ள விமானங்கள் உயரத்திலும் பறக்கும்.

எரிபொருள் பயன்பாடு மற்றும் காற்றின் அடர்த்தி குறைவு காரணமாக விமானத்தின் எடை குறைவதால், 35,000 அடி, பயண உயரத்தை அடையும்போது விமானத்தின் பறக்கும் திறன் அதிகரிக்கிறது.

குறைந்த பட்ச எரிபொருள் செலவு அதன்மூலம் குறைந்த பணச் செலவை உறுதி படுத்தும் விதத்தில் “ஒவ்வொரு தனிப்பட்ட விமானத்திற்கும், அதன் தனிப்பட்ட எடையை அடிப்படையாகக் கொண்டு.

அதற்கென  உகந்த பறக்கும் உயரத்தில் பறக்கத் தீர்மானிக்கப்படும்.

50000 முதல் 60000 அடி உயரத்தில் வேறு விமானங்கள் பறப்பதில்லை என்பதால் சூப்பர்சோனிக் விமானமான கோன்கார்ட் அந்த உயரத்தில் பறந்திருந்தது.

பொதுவாக அதிக உயரம் மிக நல்லது என்று கூறப் படுகிறது.

காரணம் மெல்லிய காற்று மிகக் குறைவான எதிர் விசையை ஏற்படுத்தும் என்பதுதான்.

வானிலை நிகழ்வுகளின் அளவு குறைவு

தரையில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறப்பதன் காரணமாக,  தரையில்  மக்கள் காணக்கூடிய மோசமான வானிலையில் இருந்து விமானம் வெளியே கொண்டு செல்கிறது,

வெப்பமண்டலம் – அதாவது நிலத்திற்கு மிக நெருக்கமான வளிமண்டல அடுக்கு 

– இது உலகின் பெரும்பாலான வானிலை நிகழ்வுகளின் தாயகமாகும். 

இது பொதுவாக 36,000 அடி வரை அளவிடப்படுகிறது, 

மேகங்கள் அதிகமாக இருப்பதும் அத்துடன் பலத்த மழை மற்றும் அதிக காற்று வீசுவதும் எல்லாம் இந்த பகுதியில்தான்,

எனவே விமானம் பறக்க உகந்த பகுதியாக இத்தகைய கொந்தளிப்புகள் மிகவும் குறைவான அடுக்கு மண்டலப் பகுதி கருதப் படுகிறது, 

அதோடு  அதிக உயரத்தில் பறக்கும்போது  குறைவான உயரத்தில் பறக்கும் மற்ற சிறிய ரக விமானங்கள்  ஹெலிகாப்டர்கள் போன்ற குறைந்த 

உயர வான்வழி போக்குவரத்தையும், மற்றும் பறவைகளையும் தவிர்க்க முடியும்.

இலகு ரக விமானங்களில் அழுத்தப்பட்ட அறைகள் அதாவது ப்ரெச்சரைஸ்டு கேபின் இல்லை, 

அதனால் அவை 10,000 அடி உயரத்திற்கு கீழ்தான் பறக்கும்,

அதை விட உயரத்தில் சென்றுவிட்டால் பைலட் நினைவிழந்து விடாமல் விழிப்புடன் இருக்க ஆக்ஸிஜன் முகமூடியை அணிய வேண்டும்

35,000 அடி உயரத்தில் ஒரு விமானத்திற்கு எந்திர செயல் இழப்பு போன்ற ஏதேனும் நடந்தால் கூட

அந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு விமானிக்கு போதிய கால அவகாசம் இருக்கும்,  ஆனால் பத்தாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் ஒப்பீட்டளவில் அது குறைவாக இருக்கும், 

இது வேடிக்கையானதாகத் தோன்றலாம், ஆனால் இரண்டு என்ஜின்களும் தோல்வியடைந்தாலும் விமானங்கள் இன்னும் பாதுகாப்பாக தரையிறங்கக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்,

அதிக உயரத்தில் செல்லச் செல்ல  குளிர் அதிகரிக்கும்,  நிலத்தில் வெப்பநிலை 20 சென்டி கிரேட் ஆக இருந்தால், அதுவே 35,000 -54 செண்டி கிரேடாகவும்,  40,000 அடி உயரத்தில் -57 செண்டி கிரேட் ஆக இருக்கும். 

விமானங்கள் ஏன் மிகக் குறைவான உயரத்தில் பறப்பதில்லை?

காரணம் அதனை நிர்வகிக்கும் சட்டதிட்டங்கள் உள்ளன,

ஆஸ்திரேலியாவின் சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு ஆணையம் (காசா). பிரிட்டிஷ் சிவில் ஏவியேஷன் ஆணையம் (சிஏஏ). மற்றும்  அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள விமான அமைப்புகளால் இந்த மதிப்பு மிகக் குறைந்த பாதுகாப்பான உயரம் (எல்.எஸ்.ஏ.எல்.டி) என அழைக்கப்படுகிறது.

“இது வனிக ரீதியான விமானங்களை விட இலகுவான விமானங்களுக்கு மிகவும் பொருந்தும், 

ஆனால் கட்டுமானங்கள் உள்ள பகுதிக்கு மேல் 1,000 அடிக்கு கீழே பறப்பது, அல்லது எந்தவொரு நபர், வாகனம் அல்லது கட்டமைப்புக்கு மேல்  500 அடி உயரத்தில் பறப்பது போன்றவை சட்டவிரோதமானது”  என்று கூறப்படுகிறது.

சத்தம் போன்ற சுற்றுச்சூழல் காரணங்களுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் இது கடைபிடிக்கப் படுவதாக கூறப்படுகிறது.

Watch video: பயணிகள் விமானம் எவ்வளவு வேகத்தில் பறக்கும்?

விமானம் அவற்றின் அடியில் உள்ள “மிக உயர்ந்த நிலையான பொருளை” விட 1000 அடிக்கும் குறைவான உயரத்தில் பறக்கக் கூடாது

மேலும் எந்திரங்கள் செயழிலப்பு போன்ற சூலல்கல் ஏற்பட்டால்,  கீழே உள்ள நெரிசலான பகுதியை கடக்கப் போதுமான உயரம் இருப்பதை விமானிகள் உறுதி செய்ய வேண்டும். 

விமானம் கட்டுப்படுத்தப்பட்ட பாதைகளில் இருக்கும்போது புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் இவை பொருந்தாது.

பறப்பதற்கு அதிகபட்ச உயரம் இல்லை என்றாலும் அளவுக்கு மீறிய உயரத்தில் பறக்கும்போது, ஆக்ஸிஜன் அளவு வீழ்ச்சியடைவதால் இயந்திரங்கள் இயக்கத்தில் சிக்கல்கள் நேரிடும். 

மேலும் தரையுடனான தகவல் தொடர்பும் ஒரு பெரிய சவாலாக மாறும்.

ஒரு ஜெட் விமானத்தின் சாதனைப் பறத்தல் உயரமாக 1997 இல் அலெக்ஸாண்டர் ஃபெடோடோவ் ஒரு இராணுவ சோவியத் மிக் -25 எம் விமானத்தில் 123,520 அடி உயரத்தில் பறந்த செயல் உள்ளது.

இங்க்கு கூறியுள்ளவை மிகவும் அடிப்படையான விசயங்கள் மட்டும்தான். தொழில்நுட்ப ரீதியான இன்னும் ஏராளமான விசயங்கள் உள்ளன.

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோவில் வரலாறு

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment