கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பதையும், எப்படி அதை முறையாக படிக்க வேண்டும் என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவா முருகப்பெருமானுடைய பல்வேறு வகையான வழிபாடு தோத்திரங்களில் மிக உயர்வானதாக கந்த சஷ்டி கவசம் கருதப்படுகிறது.
கந்த சஷ்டி கவசத்தை பத்தி தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது அப்படின்னு தான் சொல்லணும்.
முருகனை தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்று இந்த கந்த சஷ்டி கவசம்.
இந்த கந்த சஷ்டி கவசத்தை நமக்கு தந்தவர் பாலன் தேவராய சுவாமிகள் அப்படிங்கிறத அவரே அதில் முத்திரையாக பதிவு செய்திருக்கின்றார்.
இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.
ஆனா பலரும் அறியாத ஒரு தகவல் இதுல இருக்கு. அவர் மொத்தம் ஆறு படை வீட்டிற்கும் 6 கவசங்களை எழுதியுள்ளார்.
அதாவது முருகனின் ஒவ்வொரு படைவீடுகளுக்கும் ஒவ்வொரு கவசப் பாடலை எழுதியுள்ளார்.
ஆனா திருச்செந்தூர் படை வீட்டினுடைய கவசம் மட்டும் தான் இப்ப நம்ம எல்லாருக்கும் தெரியுது.
சஷ்டியை நோக்க சரவண பவனார் அப்படின்னு நாம படிக்கிறோம் இல்லைங்களா அது திருச்செந்தூரை குறிக்கக்கூடிய கந்த சஷ்டி கவசம்.
இது மாதிரி மற்ற ஐந்து படை வீடுகளுக்கும் அவர் கவசப் பாடல்களை எழுதியிருக்கின்றார்.
ஒவ்வொரு படைவீட்டு முருகனுடைய நலனையும் பெறுவதற்காக, ஆறு படை வீட்டிற்கும் ஆறு கவசங்களை தந்திருக்கிறார்.
இப்போ நம்ம எல்லாருக்கும் தெரிந்த இந்த திருச்செந்தூரை பற்றிய கந்த சஷ்டி கவசத்தை பத்திதான் இந்தப் பதிவில் நாம் பார்க்கவுள்ளோம்.
கந்த சஷ்டி கவசம் படிக்கும் முறை
இந்த ஒரு கந்த சஷ்டி கவசத்தையே, அதாவது இப்ப நம்ம படிக்கிற திருச்செந்தூர் முருகனை நினைத்து பாலதேவராயன் எழுதிய சஷ்டியை நோக்க என்ற கவசத்தையே பலரும் சரியாக படிக்கிறது கிடையாது.
அதை எப்படி முறையாக படிக்கணும் என்பதைப் பார்க்கலாம்.
பொதுவா கந்த சஷ்டி கவசம் படிக்கணும் அப்படினாலே நிறைய பேருக்கு ரொம்ப ஆர்வம் இருக்கும்.
சிலர் கந்த சஷ்டி கவசத்தை முழுமையாக படிக்க முடிவதில்லை என்று சொல்கிறார்கள்.
நான் ஒரு வாரம் தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்த படிச்சேன், இரண்டு வாரம் படிச்சேன், ஆனா ஏதோ பிரச்சன வருது, படிக்கவே முடியல.
தொடர்ந்து படிக்கணும்னு நினைக்கிறோம், ஆனால் படிக்க முடியல அப்படின்னு பலர் சொல்வதுண்டு.
இதைப் படிக்கும் உங்களில் சில பேருக்கு கூட அந்த அனுபவம் இருக்கலாம்.
முதல்ல இந்த கந்த சஷ்டி கவசத்தை எல்லோராலும் அவ்வளவு சுலபமாக தொடர்ந்து படித்து விட முடியுமா? அப்படின்னா!
பலர் நினைக்கிற மாதிரி கொஞ்சம் கஷ்டம் தான், ஆனால் அதை மீறி இதை தொடர்ந்து வைராக்கியமாக நாம் படித்து விட்டோம் அப்படின்னு சொன்னா எவ்வளவு பலன்களை நம்மால் பெற முடியும்! அப்படிங்குறத பத்தி தான் இன்னைக்கு நாம முழுசா தெரிஞ்சுக்க போறோம்.
இதை படிக்கின்ற போது முருகப்பெருமானுடைய திரு உருவப்படத்துக்கு முன்னாடி ஒரு விளக்கு ஒன்று ஏற்றி வைத்து படிப்பது நல்லது.
அது நெய் தீபமாக இருந்தால் ரொம்ப நல்லது. இல்லன்னா சாதாரண நல்லெண்ண தீபமா இருந்தாலும் சரிதான்.
அப்படி விளக்கு ஏற்றி வைத்து முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியம் வச்சிட்டு உட்கார்ந்து படிப்பது நல்லது.
இதை படிக்கும் போது மனப்பாடம் ஆகின்ற வரைக்கும் நன்றாக புத்தகத்தைப் பார்த்தே நீங்க தாராளமா படிக்கலாம்.
ஒரு சிலர் பார்க்காம பாராயணம் பண்ணனும் என்பதற்காக மூடி திறந்து, தப்பு தப்பா சொல்லி அப்படி எல்லாம் படிக்கக் கூடாது.
நல்ல தெளிவா நிறுத்தி நிதானமா பொறுமையா படிக்கணும்.
அவசர அவசரமா எதையுமே படிக்கக்கூடாது.
நிறையப்பேர் விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக கட கட கட கடன்னு வேகமா ஒப்பிச்சுட்டு போயிருவாங்க.
அந்த மாதிரி படிக்கிறதுல எந்தவிதமான பலனும் கிடையாது.
அதுக்கு கந்த சஷ்டி கவசத்திற்குன்னு இல்லை, எல்லாத்துக்குமே அப்படித்தான்.
நிறுத்தி அர்த்தம் தெரிந்து அதை நாம் வாழ்க்கையில் அனுபவிக்கும் வண்ணமாக உணர்ந்து, உள்ளம் உருகி படித்தால் மட்டும்தான் எதை படித்தாலும் அதனுடைய பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
நம்ம எந்த விஷயத்தை பாராயணம் பண்ணாலும் இந்த பொறுமை அப்படிங்கிறத கண்டிப்பா கடைபிடிக்கணும்.
கந்த சஷ்டி கவசம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள்
இப்படி நாம பொறுமையா, உள்ளார உணர்ந்து படிச்சால், என்னென்ன பலன்கள் நமக்கு இந்த கந்த சஷ்டி கவசத்தில் கிடைக்குது அப்படிங்கறது பார்ப்போமா…
முருகனை நம்மிடம் வரச்செய்யும் கந்த சஷ்டி கவசம்
முதல்ல முருகப்பெருமானை எங்கு நினைத்தாலும் அந்த இடத்திலே முருகப்பெருமானை எழுந்தருளச் செய்கின்ற ஆற்றல் இந்த கந்த சஷ்டி கவசத்திற்கு உண்டு.
நீங்க எங்க கூப்பிட்டாலும் முருகன் வருவார் என்பதற்கு அருணகிரிநாதரின் வாக்கே சாட்சியாகும்.
செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே.
என்று முருகப்பெருமானை பற்றி அருணகிரியார் சொல்லியிருக்கிறார்.
எனவே எங்கு வேண்டுமானாலும், முருகா எனக்கு இந்த இடத்தில், இந்த பிரச்சினை உள்ளது, நீதான் வந்து காக்க வேண்டும் என்று அழைத்தால், அங்கு முருகப்பெருமானை வரவழைக்கும் தாரக மந்திரமாக பயன்படுகிறது இந்த கந்த சஷ்டி கவசம்.
இதைக் கந்த சஷ்டி கவசத்திலேயே காண முடியும்.
மைய நடஞ்செயும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக்காக்கவென்று வந்து
வரவர வேலாயுதனார் வருகவருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திரவடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக …ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக …
இவ்வாறு முருகனை எங்கு எப்படி வரவேண்டும், எப்படி காக்க வேண்டும், எதையெல்லாம் காக்க வேண்டும் என்று வர்ணித்து அழைக்கும் பாடலாக இந்த கந்த சஷ்டி கவசம் அமைந்துள்ளது.
எனவே முருகனை நம்மிடத்தில் வரவைக்கக்கூடிய கவசம் இந்த கந்த சஷ்டி கவசம் என்பதைப் புரிந்து கொள்வோம்.
இதையும் பாருங்கள்: திருக்கோஷ்டியூர் சௌமியப் பெருமாள் கோவில் சிறப்புக்கள்
நம்மை பாதுகாக்கும் கவசமாக கந்த சஷ்டி கவசம்
முருகன் நம்மிடத்தில் வந்தால் வேறு என்ன வேண்டும்?!
அதைவிட வேறு என்ன வேண்டும் நமக்கு? முருகன் வந்துவிட்டால்தான் எல்லாமே வந்து விட்டதே! காரணம் நமக்கு முருகனை விட வேறு எதுரும் பெரிதில்லையே.
அதனால் முருகன் நம்மிடத்தில் வரும்போது அனைத்தும் வந்துவிடும், அவ்வாறு முருகன் வந்துவிட்டால், தேவையற்றது, கெடுதலானது அனைத்தும் பறந்து விடும் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன?.
எனவே முருகனின் இந்த கந்த சஷ்டி கவசம் உச்சம் தலையில் இருந்து உள்ளங்கால் வரை நமக்கு கவசமாக அமைகின்றது.
பாதுகாப்பு கவசம், அரன் என்றெல்லாம் சொல்வதுண்டு.
அதாவது என்னதான் பிரச்சினை என்றாலும் அந்தக் கவசம் நம்மைக் காக்கும்.
அப்படி முழுமையான ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இந்த கந்த சஷ்டி கவசம் அமைகிறது.
அதையும் இந்த பாடலிலேயே நாம பார்க்கலாம்.
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க … .
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக்காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க …
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவை செவ்வேல் காக்க
அப்படின்னு ஒரு காப்பாக, ஒரு அரணாக நமக்கு அமையக்கூடியது இந்தக் கந்த சஷ்டி கவசம்.
இதையும் பாருங்கள்: திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதியின் சிறப்பு
தீய சக்திகளை அனுகவிடாமல் தடுக்கும் கந்தசஷ்டி கவசம்
பில்லி, சூனியம், ஏவல், செய்வினை இந்த மாதிரி எந்த வகையான பிரச்சனைகளாக இருந்தாலும் இந்த கந்த சஷ்டி கவசம் எதையும் நம்மிடத்தில் அணுக விடாது.
எவ்வளவு அழகாக முருகனிடம் கேட்கப்படுகிறது பாருங்கள்…
காக்க காக்க கனகவேல் காக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப்பேய்கள் … …
அல்லல்படுத்தும் அடங்காமுனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடைமுனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராக் கருதரும் … …
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
பில்லி சூனியம் பெரும்பகை ஆகல.கந்த சஷ்டி கவசம்
நாம் எதற்கெல்லாம் பயப்படுறோம் பூதம், பேய், பிசாசு அனைத்தும் நம்மள விட்டு ஓடி போய்விடும் அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லியுள்ளார்.
நான்காவதா பாத்தீங்க அப்படின்னா எம தூதர்களை நம்மிடத்தில் நெருங்க விடாத கவசம் இந்த கந்த சஷ்டி கவசம்.
நம்மகிட்ட வர்றதுக்கே பயப்படுவாங்க அப்படின்னா இதுல எவ்வளவு விஷயங்கள் இருக்கு அப்படின்னு பாருங்க.
அதிலேயே அவர் சொல்றார் பாருங்க
யாரு மதிக்கெட்டு ஓட வேண்டும் என்று பாடுகிறார்?
நம்ம பக்கத்துல அவங்க வந்தாங்கன்னா, அரண்டு அடிச்சு அவங்க ஓடுவாங்களாம்…
அவர்களை பார்த்து தான் நம்ம எல்லாம் ஓடணும் அப்படின்னு சொல்லுவாங்க, ஆனா கந்த சஷ்டி கவசம் படிச்சா நிலைமையே மாறிப் போகிறது, எமதூதர்களை விரட்டும் ஒரு அற்புத கவசம் என்று பாடியுள்ளார்.
பயங்களைப் போக்கும் கந்த சஷ்டி கவசம்
விலங்குகளின் மீது இருக்கிற பயம், அதுக்கு அப்புறமா விஷ ஜந்துக்கள் மீது இருக்கின்ற பயங்களையும் நமக்கு போக்கும் இந்த கந்த சஷ்டி கவசம்.
எவ்வளவு கொடூரமான விலங்குகள், விஷ ஜந்துக்களாகவே இருந்தாலும் பயப்படவே வேண்டாம்.
அவற்றிலிருந்து காக்கும் சக்திபடைந்தவர் முருகன், அவரிடம் அதைக் கேட்கிறது இந்த கவசப்பாடல்.
உடம்புல விஷமே ஏறினாலும் பரவாயில்லை, இந்த கவசத்தை உறுதியோடு படிக்கும்போது நிச்சயமாக அது இறங்கிப் போக வேண்டும் என்று கேட்டுப்பாடியுள்ளார்.
எனவே விஷ ஜந்துக்களின் ஏற்படக்கூடிய துன்பங்களையும் போக்க வல்ல கவசம் இந்த கந்த சஷ்டி கவசம்.
நோய்களை ஓடச்செய்யும் கந்த சஷ்டி கவசம்
ஆறாவதாக நோய்களை நீக்க வல்லது
எந்த நோயாக இருந்தாலும் அது எனை விட்டு ஓடி விட வேண்டும் என்று வேண்டிப் பாடும்படி எழுதியுள்ளார் பால தேவராயர்.
அந்த நோய்களை பற்றி ஒரு பெரிய பட்டியலே சொல்லி, அவையும், அல்லாத எந்த நொயாக இருந்தாலும், என்னைக் கண்டால் நில்லாமல் ஓடிவிட வேண்டும் என்று பாடியுள்ளார்.
எனவே எந்த நோயையும் அனுக விடாமல் காக்கவும், வந்த நோயை ஓடச்செய்யும் சக்தியும் படைத்ததாகும் கந்த சஷ்டி கவசம்.
எனவே இந்த கவசத்தை உறுதியோடு 48 நாட்கள் யார் ஒருத்தர் இந்த நோய் தீர வேண்டும் என்ற பாராயணம் செய்கிறார்களோ அது எந்த நோயாக இருந்தாலும் அவர்களுக்கு தீர்ந்து போகும் என்பது பலரின் வாழ்க்கையில் அனுபவமாக கண்ட உண்மையாகும்.
அப்படி நோய்களை நம்மிடத்தில் அண்ட விடாத ஒரு அற்புத அரனாக இந்த கந்த சஷ்டி கவசம் நமக்கு அமைந்திருக்கிறது.
ஞானத்தை அடையச் செய்யும் கந்த சஷ்டி கவசம்
இந்த உலகப் பற்றுகள்ள தான் நாம மாட்டிக்கொண்டிருக்கிறோம். இப்ப நாம உலகத்துல இருக்குற காரணம் என்ன பந்தம் பாசம் இதுதான் நமக்கு திரும்பத் திரும்ப பிறவிகளை ஏற்படுத்திட்டே இருக்கு.
கொஞ்சம் ஒருத்தர் ஞானத்தை அடைந்து இந்த உலக பற்றுகள் வேண்டாம் அப்படின்னு நினைக்கிறாரா அவருக்கும் கந்த சஷ்டி கவசம் தான் கை கொடுக்கப் போகுது, ஏன் தெரியுமா?
அதிலே அவர் ரொம்ப தெளிவா சொல்கிறார்,
என்னை நீ காப்பாத்து அன்போடு என்னை நீ ஏத்துக்கோ எனக்கு இந்த உலக பற்றுகள் வேண்டாம் என்று வேண்டுகிறார்.
உன் திருவடியை உறுதி என்று எண்ணும் என் தலை வைத்து இணையடிக்காக என்று முடித்துவிட்டார்.
அப்போ ரொம்ப தெளிவா சொல்லி இருக்கிறார்.
நீ உலகப்பற்ற நீக்கணுமா முருகன் திருவடியை புடிச்சுகிட்டு இத சொல்லு, உலக பற்றுகளில் இருந்து வெளியே வரலாம் என்று.
இதையும் பாருங்கள்: திருச்செந்தூர் கோவில் பற்றிய முக்கியமான தகவல்கள்
வறுமையைப் போக்கும் கந்த சஷ்டி கவசம்
அப்படின்னா அடுத்து எட்டாவது
இங்கு அனைவருமே பயப்படக்கூடிய ஒரு விசயம் என்றால் அது வருமைதான்.
கொடியது என்ன என்பதற்கு ஔவையார் மிக அழகாகச் சொல்லியுள்ளார்.
இதுபோல் வறுமையைப் பற்றி சொல்லியுள்ளார்கள் பலர்.
அப்படி இருக்க அதற்கு தீர்வு தராமல் விடுமா கந்த சஷ்டி கவசம்?
ரொம்ப அழகா சொல்றாரு பாருங்க! என்ன வறுமையாக இருந்தாலும் ஒரு விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிக்க முடியாத நிலையில் வறுமையில் இருப்பவர்களை கூட,
இந்த கந்த சஷ்டி கவசத்தை நம்பிக்கையோடு அவன் படிக்கின்ற பட்சத்தில் வெள்ளி விளக்கு ஏற்றி வைத்து முருகப்பெருமானை வணங்குகின்ற நிலைக்கு அவனை ஆளாக்க கூடிய உயர்ந்த செல்வ வளம் கிடைக்கும் என்று பாடியுள்ளார்.
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க இந்த வறுமை ஏன் வருது எந்த ஜென்மவிலும் நான் தப்பு பண்ணியிருப்பேன்.
அதன் பலனாக இப்போது வறுமை அனுபவிக்கிறேன் என்றால்,
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயிணும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்.
என்று என்னதான் தவறுகள் செய்திருந்தாலும் அதையெல்லாம் பொறுத்து என் வறுமையை போக்க வேண்டும் என்று கேட்கும் பாடலாக அமைந்துள்ளது.
அதில் மிக அழகாக எமைப் பெற்றன் நீயேதான்.
அப்படி இருக்க உன் பிள்ளையாகிய நான் என்ன தவறு செய்தாலும் அதைப் பொறுத்துக்கொள்வது உனது கடமையல்லவா? நீயல்லவா எனக்காக மனமிறங்கி அருள்புரிய வேண்டும்? என்று சொல்லி எனது வறுமையை போக்கு என்று கேட்கும்படியாக அமைந்துள்ளது கந்த சஷ்டி கவசம்.
நவகிரகங்கள் நன்மையளிக்கச் செய்யும் கந்த சஷ்டி கவசம்
நவகிரகங்களால் ஏற்படும் நன்மை தீமைகளை நினைத்து அனைவருமே பயப்படுவதுண்டு.
அந்த நவகிரகங்கள் கூட நம்மை ஒன்றும் செய்ய முடியாது, கந்த சஷடி கவசம் படிக்கும்போது.
முருகன் நினைத்தால் எந்த கிரகமும் நம் பக்கத்தில் எந்த தீமையுடனும் நெருங்க முடியாது.
முருகனின் அருள்தான் நமக்கு துணையாக வரும்.
அதை
நவகோல் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று மிக அழகாகக் கூறியுள்ளார்.
சும்மா அல்ல, மாறாக மகிழ்ச்சியடைந்து நமக்கு நன்மையளித்திடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆக, என்ன ராசி என்ன நட்சத்திரம், என்ன ராசி என்ன பலனைத் தரும் என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லை.
கந்த சஷ்டி கவசம் படித்தால் அந்த கிரகங்கள் அனைத்துமே மகிழ்ச்சியடைந்து நன்மையளித்திடும் என்று கூறியுள்ளார் தேவராய சுவாமி.
அடுத்து நாமெல்லாம் பயப்படுவது பகையாகும்.
பகையைப் போக்கக்கூடிய ஆற்றலும் கந்த சஷ்டி கவசத்திற்க்கு உண்டு.
எப்பேர்ப்பட்ட பகைவனாக இருந்தாலும் சரி அவன் முருகனின் பக்தர், முன் கைகட்டி நின்றே தீரவேண்டும் என்ற நிலையை இந்த கந்த சஷ்டி கவசம் ஏற்படுத்தும்.
நீங்கள் பகைவரிடம் சண்டை போட வேண்டிய அவசியம் இல்லை, பகைவர்களே வந்து உங்களிடம் சரணடையும் விதத்தில் உங்கள் வாழ்க்கைத்தரத்தை மாற்றும் ஆற்றல் இந்த கந்த சஷ்டி கவசத்திற்கு உண்டு.
எனவே நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பகைமையை போக்கும் சக்தி இந்த கந்த சஷ்டி கவசத்திற்கு உண்டு.
இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால், முருகப்பெருமானை போற்றி அர்ச்சித்து வணங்கும்போது கிடைகும் அனைத்து பலங்களும் கிடைத்துவிடும்.
கந்த சஷ்டி கவசம் பாடும்போது அதன் நிறைவாக,
முக்கியமான நான் சொல்றது ஒன்னே ஒன்னு தாங்க இது கந்த சஷ்டி கவசத்தை உள்ளம் உருகி கண்ணீர் பெருகி, நாம் என்ன தவறு செய்திருந்தாலும் அவருடைய திருவடியில் சரணாகதி அடைந்து,
நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்து விடு முருகா, நீதான் என்னை காத்தருள வேண்டும்.
உன்னை தவிர எனக்கு வேறு கதை இல்லை என்று யார் சரணாகதி அடைந்து இதை படிக்கிறார்களோ அவர்களுக்கு இது நிச்சயம் கைகூடும்.
நம்பிக்கையாக படித்த பல பேரின் வாழ்க்கையில் மாற்றம் கண்ட அனுபவம் இந்த கந்த சஷ்டி கவசம்.
தனியா நடந்து போறீங்களா? மனசுல ஒரு சின்ன பயம் இருக்கா? கந்த சஷ்டி கவசம் சொல்லுங்க.
நீ சில பேருக்கு வந்து பாத்தீங்கன்னா ஏதோ ஒரு விஷயத்தில், ஒரு ஒரு நடுக்கம் இருக்கிற மாதிரி இருக்குன்னு நினைக்கிறீங்களா?
கந்த சஷ்டி கவசம் சொல்லுங்க எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.
எனவே எல்லா நன்மைகளும் அளிக்கும் கந்த சஷ்டி கவசத்தை நீங்கள் பாடுவதோடு மட்டும் நில்லாமல், குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்து அவர்களும் கந்த சஷ்டி கவசம் பாடும்படி செய்து எல்லா நன்மைகளும் அடையச் செய்ய வேண்டும்…..
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!