பேராசிரியர் ஜான் மேர்ஷைமர், ஜெஃப்ரிசாக்ஸ் உட்படவுள்ள மூத்த ராஜதந்திரிகள், பேராசிரியர்கள், முன்னாள் டிப்ளமேட் அதிகாரிகள், மூத்த ஊடகவியலாளர்கள், வெளியுவுக் கொள்கைகளைப் பற்றி மிக விரிவாக ஆராயக்கூடியவர்கள் எல்லாம் கூறும் ஒரு முக்கியமான விசயம் உள்ளது.
அதாவது இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவே ஒரு சூப்பர் பவர்தான், அதனால் ஒருபோதும் இந்தியா அமெரிக்காவின் கூட்டணி நாடாக இருக்காது.
இந்தியா அமெரிக்கா நட்பில், இந்தியா அமெரிக்காவின் ஒரு கூட்டணி நாடு அல்ல, அமெரிக்காவின் கூட்டணி நாடு ஆவதற்கு ஒருபோதும் விரும்பவும் இல்லை என்று கூறியுள்ளார் ஜெஃப்ரி சாக்ஸ்.
அமெரிக்கர்களுக்கு அவர்களின் சொந்த நாட்டைப் பற்றித் தெரிந்ததை விட அதிகமாக, இந்தியாவிற்கு அமெரிக்காவைப் பற்றி நன்றாகத் தெரியும்.
ஒரே நேரத்தில், ஒரே அளவில் சவுதி அரேபியா, மற்றும் இரானுடனான உறவை இந்தியா மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது.
இஸ்ரேலுடன் மிக வலுவான உறவைத் தொடரும்போதே, பாலஸ்தீனுக்கு ஆதரவாகவும் இந்தியா நிற்கிறது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் தனித்துவமான மற்றும் தந்திரபரமான நட்பைத் தொடர்கிறது இந்தியா.
எனவே இந்தியா அமெரிக்காவின் ஒரு கூட்டணி நாடாக இருக்காது. மாறாக மற்றொரு தனிப்பெரும் சக்தியாக இருக்கும்.
இந்திய அமெரிக்க உறவு உண்மை நிலை
இந்திய அமெரிக்க உறவு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.
இந்தியா எப்போதேனும் அமெரிக்காவின் கூட்டணி நாடாக மாறும் என்று வாஷிங்டனில் யாரேனும் கனவு கண்டால், அது எக்காலமும் ஒரு கனவாகவே தொடரும்.
இந்தியா அமெரிக்கா இடையேயான சிறந்த நட்பு ஒருபுறம் இருந்தாலும், இந்தியா சுயம் ஒரு சூப்பர் பவராகும், அதனால் ஒருபோதும் அந்த சூப்பர் பவர் அமெரிக்காவின் கூட்டணி நாடாக இருக்கப் போவதில்லை என்று இந்தியாவைப் பற்றி ஜெஃப்ரி சாக்ஸ் கூறியுள்ளார்.
அவ்வாறு அமெரிக்காவில் நடக்கும் பல விவாதங்களிலும், வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றியும், இந்தியாவைப் பற்றியும் நன்றாகத் தெரிந்த பல வல்லுணர்களும் கூறும் பொதுவான விசயமாக உள்ளது அது.
ஒருபோதும் இந்தியா அமெரிக்காவின் ஒரு கூட்டணி நாடாக விரும்பாது, மாறாக பரஸ்பர மரியாதையுடன் கூடிய ஒரு நட்பையே விரும்பும்.
நாளை சீனாவை வீழ்த்துவதற்கோ, அல்லது வேறு ஏதேனும் நாட்டை வீழ்த்துவதற்காகவோ இந்தியா ஒருபோதும் அமெரிக்காவுடன் கூட்டணி சேரப்போவதில்லை.
இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினைகள் நிச்சயம் உள்ளன.
ஆனால் அதைக் கையாள்வதற்காக மூன்றாவது ஒரு நாடு தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தியா ஏற்கனவே கூறியுள்ளது.
இந்திய அமெரிக்க உறவு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும் விதத்தில், அது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான முன் எச்சரிக்கையாகும்.
அமெரிககாவோ, ரஷ்யாவோ எந்த நாடும் தலையிட வேண்டிய அவசியமில்லை, இந்தியாவின் பிரச்சினைகளை கையாள்வது எப்படி என்று நன்றாகத் தெரியும் என்று கூறுகிறது இந்தியா.
இந்தியாவை எப்படி சூப்பர் பவர் என்று சொல்ல முடியும்?
அமெரிக்க ஊடகவியலாளர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.
அதாவது, இந்தியாவை எப்படி ஒரு சூப்பர் பவர் என்று சொல்ல முடியும்?
இந்தியா 2700 அமெரிக்க டாலர் மட்டும் தனி நபர் வருமானமுள்ள ஒரு நாடல்லவா?
இந்தியா அதன் ஆயுத சேகரத்தின் பெரும்பகுதியை ரஷ்யாவில் இருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்துதான் வைத்துள்ளது.
ஜெர்மனியின் அளவுகூட ஆயுதத் தயாரிப்பு விசயத்தில் இந்தியா தற்சார்பு நிலையை அடையவில்லை.
அப்படி இருக்க, இந்தியாவை விட வசதியும், ஆயுத தயாரிப்பு உட்படவுள்ள விசயங்களில் தற்சார்பு நிலை அடைந்துள்ளதுமான ஜெர்மனியை ஒரு சூப்பர் பவர் நாடு என்று சொல்ல வேண்டுமல்லவா?
இந்தியாவை விட வசதியான நாடாகவுள்ள ஜெர்மனியை ஒரு சூப்பர் பவர் என்று சொல்ல முடியாத நிலையில், இந்தியாவை எவ்வாறு ஒரு சூப்பர் பவர் என்று சொல்ல முடியும்?
இவ்வாறெல்லாம் அமெரிக்க தேசியவாதியான அந்த ஊடகவியலாளர்ர் கேட்டுள்ளார்.
மேலும் உலகில் ஒரே சூப்பர் பவர்தான் உள்ளது, அது அமெரிக்காவாகும்.
அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா பின்னில் இருந்தாலும், அந்த நாடுகூட ஒரு சூப்பர் பவர் அல்ல.
இத்தகைய விவாதங்கள் எல்லாம் நீண்ட காலமாகவே அமெரிக்க தேசியவாதிகள் மத்தியில் இருந்து வருவதாகும்.
இங்கு அமெரிக்கா மட்டும்தான் சூப்பர் பவரா? ரஷ்யா சூப்பர் பவரா? இந்தியா சூப்பர் பவரா? சீனா சூப்பர் பவரா?
இது ஒரு பல்முனை உலகமாகும்.
ஏதேனும் ஒரு நாடு இந்த உலகை அடக்கி ஆளலாம் என்ற காலம் மாறி விட்டுள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் ரஷ்யா நிச்சயம் ஒரு சூப்பர் பவர்தான்.
சீனா ஒரு சூப்பர் பவர்தான், இந்தியா ஒரு சூப்பர் பவர்தான்.
இன்நிலையில்தான் நமது பொருளாதாரம் ஒரு சிக்கலாக உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜி.டி.பி விசயத்தில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது பாரதம்.
ஆனால் ஜி.டி.பி பெர் கேப்பிட்டா(GDP per Capita), அதாவது தனி நபர் வருமான விசயத்தில் முதல் நூறு இடங்களில் கூட இடம்பிடிக்கவில்லை இந்தியா.
அது நிச்சயம் நாம் இன்னும் எவ்வளவோ வளர்ச்சியடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் இதே நிலையில்தன் 2005 க்கு முன்பு சீனா இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றுள்ள அளவு இல்லையென்றாலும், அப்போது உலகம் சீனாவை ஒரு சக்தியாக ஏற்கத் தொடங்கியிருந்தது.
இங்கு நாம் சில கணக்குகளைப் பார்ப்போம், அந்தக் கணக்குகள் நம்மவர்களின் கண்களைத் திறந்தால் திறக்கட்டும்.
இந்தியா சீனா பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை
2000 ஆம் ஆண்டில், சீனாவின் ஜி.டி.பி 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
அப்போது சீனாவின் தனி நபர் வருமானம் 959.36 அமெரிக்க டாலராக இருந்துள்ளது.
இதை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவின் பிஹார் மாநிலம் இன்று என்ன நிலையில் உள்ளதோ, அந்த நிலையில் இருந்துள்ளது சீனா 2000 ஆம் ஆண்டில்.
பிஹார் மாநிலத்தின் தற்போதைய தனி நபர் வருமானம் 925 அமெரிக்க டாலராக உள்ளது.
சீனாவின் தனி நபர் வருமானம் 953 அமெரிக்க டாலராக இருந்துள்ளது இரண்டாயிரத்தில்.
இந்தியா சீனா தனி நபர் வருமான அளவு இரண்டாயிரமாம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருந்துள்ளதைக் காண முடிகிறது.
எனவே இன்று நமது பிஹார் மாநிலம் எவ்வளவு வசதியாக உள்ளதோ, அதே நிலையில்தான் இரண்டாயிரத்தில் சீனா இருந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்வோம்.
சீனாவின் உயர் தலைவரான மாவோவிற்கு பிறகு டெங்க் க்சியாஓ பிங்க் அங்கு அதிகாரத்திற்கு வந்தார்.
நமது முன்னாள் பிரதமர் திரு நரசிம்ம ராவிற்கு நிகராகப் பார்க்க முடிந்தவராவார் டெங்க் சியாஓ பிங்க்.
காரணம் இந்தியாவில் நரசிம்ம ராவ் எவ்வாறு இந்திய பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டாரோ, அதேபோல் சீன பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை செய்தவர் இந்த டெங்க் சியாஓதான்.
சீனாவில் பொருளாதார சீர்திருத்தத்தை மேற்கொண்ட டெங்க் சியாஓ அம்மக்களால் கடவுளைப் போல் போற்றப்படுகிறார்.
ஆனால் இந்தியாவில் திரு நரசிம்ம ராவை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளார்கள் என்பது கூட கேள்விக்குறியாகவே உள்ளது.
மிகவும் வேதனைக்குரிய விசயம் என்னவென்றால், அவர் சார்ந்திருந்த கட்சி அவரது புகழை மறைத்துள்ளது என்பதுதான்.
அவரது சாதனைகளையும், அவரது திறமையையும், வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமே அந்த கட்சிக்கு இல்லாமல் போனது உண்மையில் நன்றிகெட்ட தனமாகும்.
அவர்களே மறைக்கும் நிலையில் எப்படி சாதாரண மக்களுக்குத் தெரியும்.
பாஜக நரசிம்மராவை பெருமைப்படுத்தினாலும், காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எங்கள் தலைவரின் புகழை பாஜக அபகரிக்கிறது என்பார்கள்.
எதனால் நரசிம்ம ராவின் சிறப்பை வெளிப்படுத்தவில்லை, ஏன் அவரைப் புறக்கனிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ஒரு வேளை அவரது புகழைப் பாடினால், அந்தக் கட்சியைக் குத்தகையாக வைத்துள்ள குடும்பத்தை முன்நிறுத்த முடியாது என்று கருதுகிறார்களோ என்னவோ?
அவர்தான் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார் எனும்போது, அதுவரை தவறான பொருளாதாரக் கொள்கை இருந்து வந்தது என்று மக்கள் சிந்திப்பார்களே!
அப்படியாகும்போது கட்சிக்கு சொந்தக்காரக் குடும்பத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்படுமே என்று நினைக்கிறார்களா?
அல்லது அவர் சார்ந்த சமூகத்தின் மீதான வன்மம் திராவிடத்தில் மட்டுமல்லாது அங்கும் உள்ளதா என்று தெரியவில்லை.
அதைப்பற்றிப் பேசினால் நீண்டு கொண்டே செல்லும், தற்போதைய விசயத்திற்கு வருவோம்.
இந்தியா சீனா பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்
The chinese economic reform or chinese economic miracle, என்றும், உள்நாட்டில் reform and opening-up என்றும் அறியப்படும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்கு தொடக்கம் குறித்தது டெங்க் சியாஓதான்.
அதாவது சோஷியலிஸ்ட் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி வந்த சீனா, அதில் மாற்றங்களைக் கொண்டுவந்து, அமெரிக்க மாதிரியை உட்படுத்தி, சந்தையைத் திறந்து கொடுத்து, வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்த்த ஒரு மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையாகும் அது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா பெருமளவில் முதலீடுகளைச் செய்தது, அது மட்டுமல்லாது சீனாவை வளர்த்தெடுக்க தேவையான உதவிகளையும் செய்தது.
காரணம் ரஷ்யாவிற்கு எதிராக சீனாவைப் பயன்படுத்தலாம் என்ற நோக்கமாகும்.
அவ்வாறு உலகின் பல நாடுகளின் முதலீடுகள் காரணமாகத்தான் சீனா இன்றுள்ள நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது.
பல நாடுகள் அங்கு அவர்களின் ஆலைகளை நிறுவி உற்பத்திகளைத் தொடரவும், பல்வேறு துறைகளிலும் முதலீடுகளைச் செய்ததும், வர்த்தகத்தில் ஈடுபட்டதும் காரணமாகத்தான் சீனா வளர்ச்சியடைந்ததே தவிர, சீனாவில் தாமாக எதுவும் முளைத்து வளரவில்லை.
இன்று பிரதமர் மோடி செய்வது போல், முதலீட்டிற்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்தார்கள்.
இந்தியா சீனா இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு, சீனாவில் ஒற்றைக்கட்சி ஆட்சி முறை உள்ளது என்பதாகும்.
சீனாவில் ஒற்றைக் கட்சி ஆட்சி இருப்பதாலும், கிட்டத்தட்ட சர்வாதிகார நாடாக இருப்பதாலும் அதை மிக வேகமாக செய்ய முடிந்தது சீனாவில்.
அவ்வாறு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன சீனாவில்.
அதுபோன்ற ஒரு சீர் திருத்த நடவடிக்கையை இந்தியாவில் 1990 களுக்குப் பிறகு நரசிம்ம ராவ்தான் மேற்கொண்டார்.
நரசிம்ம ராவ் காலத்தில்தான் இந்திய பொருளாதாரக் கொள்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியான மாற்றங்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங்க், இப்போது மோடி காலத்தில் ஏற்பட்டு வருகின்றன.
சீனாவில் ஏற்பட்டதைப் போன்ற பெருமளவிலான மாற்றங்களுக்கு இப்போது மோடி ஆட்சியில்தான் தொடக்கம் குறிக்கப்பட்டுள்ளது.
அதாவது டெங்க் சியாஓ எழுபதுகளில் செய்த முதற்கட்ட பொருளாதார நடவடிக்கைகள் போன்று 90 களில் செய்திருந்தார் நரசிம்மராவ்.
அதன் பின்னர் இந்திய அரசியல் மிக மோசமான நெருக்கடியை சந்தித்தது. நிலையான ஆட்சி அமையவில்லை.
தொடர்ந்து 99க்குப் பிறகு அடல் பிஹாரி வாஜ்பேயின் ஆட்சிதான் ஐந்தாண்டுகள் நீடித்தது.
வாஜ்பேய் காலத்தில் அடுத்த கட்டத்திறு அந்த நடவடிக்கைகள் கொண்டு செல்லப்பட்டன.
அதன் பின்னர் டாக்டர் மன்மோகன் சிங்க் தலைமையிலான ஆட்சி அமைந்தது.
அவர்கள் அவர்களின் பார்வைக்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
பத்தாண்டுகள் நீண்டிருந்த ஆட்சியிலும் கூட சீனா செய்த அளவிற்கு மிக வலுவான நடவடிக்கைகளை எடுக்க முடிந்திருக்கவில்லை.
நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான அத்தகைய சிறந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1976ல் டெங்க் சியாஓ அங்கு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு, இந்தியா மற்றும் சீனாவின் ஜி.டி.பி ஏறக்குறைய ஓரே அளவில்தான் இருந்தது.
இந்தியாவின் ஜி.டி.பி 189 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், சீனாவின் ஜிடிபி 191 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்துள்ளது.
எனவே சீனாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அன்நாடின் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியது அதி வேகத்தில்.
அவ்வாறு இரண்டாயிரத்தில் 1.2 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக சீனாவின் ஜிடிபி இருந்த நிலையில்,
இந்தியாவின் ஜிடிபி ஏறத்தாழ 500 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்துள்ளது.
அதாவது சீனா பொருளாதாரக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முன்பு இரு நாடுகளின் ஜிடிபியும் கிட்டத்தட்ட ஒரே அளவாக இருந்தது.
ஆனால் இரண்டாயிரமாம் ஆண்டில் இந்திய ஜிடிபியை விட இரண்டு மடங்கிற்கும் மேல் சீனாவின் ஜிடிபி அதிகமாக இருந்தது.
அப்படி இருந்தும் சீனாவின் ஜிடிபி பெர் கேப்பிட்டா 953 அமெரிக்க டாலராக இருந்தது.
அதாவது இன்றைய நமது பிஹார் மாநிலத்தின் அதே பொருளாதார நிலையில் இருந்துள்ளது சீனா இரண்டாயிரமாம் ஆண்டில்.
2005 ஆனபோது சீனாவின் ஜிடிபி அளவு 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடைந்திருந்தது.
அன்று சீனாவின் தனி நபர் வருமானம் 1753 அமெரிக்க டாலராக வளர்ச்சியடைந்தது.
இந்தியாவின் ஜிடிபி 2013 ல் 1.86 டிரில்லியனாக இருந்தது.
சீனா 2005ல் எட்டிய அளவை இந்தியா 2013 க்குப் பிறகுதான் எட்டியது.
2007ல் சீனாவின் ஜிடிபி 3.55 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாறியது.
அதாவது இன்று இந்தியாவின் மொத்த ஜிடிபியை விட சற்று குறைவாக இருந்துள்ளது சீனாவின் ஜிடிபி 2007ல்.
2007ல் சீனாவின் தனிநபர் வருமானம் 2693 அமெரிக்க டாலராக இருந்துள்ளது.
இன்று இந்தியாவின் தனி நபர் வருமானம் ஏறத்தாழ 2750 அமெரிக்க டாலராக உள்ளது.
மொத்த ஜிடிபி ஏறத்தாழ 4 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
மொத்தத்தில் 2007ல் சீனாவின் பொருளாதாரம் எந்த அளவில் இருந்ததோ, ஏறக்குறைய அந்த அளவில் உள்ளது இன்று இந்தியாவின் பொருளாதார நிலை.
அதாவது 2007ல் சீனாவின் பொருளாதார வலிமை என்னவாக இருந்ததோ அந்த பொருளாதார வலிமை இன்று இந்தியாவிற்கு உள்ளது.
ஆனால் அன்று சீனா எதிர்கொண்டதை விட பெரிய சவால்கள் இந்தியாவிற்கு இன்று உள்ளன.
2007ல் சீனாவிற்கு கடுமையான போட்டியாளராக எந்த நாடும் இருந்திருக்கவில்லை.
அதோடு சீனாவில் ஒற்றைக்கட்சி ஆட்சி முறை நிலவுவதால் அதிவேகத்தில் அதன்பிறகு வளர்ச்சியடைந்தது சீனா.
அதுபோன்ற வளர்ச்சி இந்தியாவில் சாத்தியமா என்று சொல்ல முடியாது.
ஆனால் அதிவிட கூடுதலான நடவடிக்கைகளின் மூலம் அதுபோன்ற வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.
2024 இப்போது இந்தியாவின் ஜிடிபி 4 டிரில்லியனாக உள்ளது.
அதாவது 2007ல் இருந்த சீனாவின் ஜிடிபி அளவாகும் இது.
அந்த வகையில் நாம் இன்றைய நிலையில் சீனாவை விட பொருளாதார ரீதியாக 16 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம்.
அதனடிப்படையில் பார்த்தால் 2040 ஆகும்போது இந்தியா இன்றைய சீனாவின் அளவு வசதியடையும்.
அதற்கும் முன்போ அல்லது சற்று தாமதமோ ஆக வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
சீனாவிற்கு இருந்த பல சாதகமான சூழல்களும் இன்று இந்தியாவிற்கு இல்லை என்பது ஒரு உண்மையாகும்.
ஆனால் சீனாவிற்கும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் மோசமாக மாறிக்கொண்டுள்ளது.
அதனால் வரும் காலத்தில் இந்தியா சீனா இடையேயான போட்டியில், இந்தியாவிற்கு பெரிய வாய்ப்புக்கள் உள்ளன.
ஐ.நா மாநாடு 2024: இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கை, சீன எதிர்ப்பு
அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மற்றொரு சீனா உருவாகக் கூடாது என்றும் கருதுகின்றன.
அதனால் இந்தியா பொருளாதார ரீதியாக சீனாவைப் போன்ற ஒரு பெரும் சக்தியாக வளர்ச்சியடைய வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை.
ஆனாலும் வாய்ப்புக்களை தந்திரபரமாக இந்தியா பயன்படுத்தினால், பிரதமர் மோடி கூறுவதுபோல் 2047 ஆகும்போது இந்தியா மிகவும் வலிமையான ஒரு நாடாக மாறும்.
சீனப் பொருளாதார வளர்ச்சி மிகவும் வேகம் குறைய வாய்ப்புள்ளது.
இந்தியப் பொருளாதாரம் அதி வேகத்தில் வளர்ச்சியடையும்போது, அதன் தாக்கத்தை அல்லது பாதிப்பை சீனா அனுபவிக்க வேண்டியிருக்கும்.
நிச்சயம் சீனப் பொருளாதார வளர்ச்சி தாமதப்படும்.
அப்படியாகும்போது இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாற வாய்ப்புள்ளது.
பொருளாதாரத்தில்தான் இந்தியா சற்று பின்தங்கியுள்ளதே தவிர, உலகளாவிய செல்வாக்கிலும், ராணுவ வலிமையிலும் எல்லாம் இந்தியா முன்னில்தான் உள்ளது.
அதோடு இந்தியாவின் மக்கள் தொகை, இளைஞர்கள் நிறைய உள்ளதெல்லாம் இந்தியாவிற்கு சாதகமான விசயங்களாகும்.
எனவே இந்தியா பொருளாதார நிலையைத் தவிர எல்லா விசயங்களிலும் நிச்சயம் ஒரு சூப்பர் பவர்தான்.
அப்படியாகும்போது சீனாவுமே ஒரு எக்கனாமி சூப்பர் பவர் அல்ல என்பதுதான் உண்மை.
பொருளாதாரத்தின் விசயத்தில் சீனாவும் கூட அமெரிக்காவை விட மிகவும் பின் தங்கிய நிலையில்தான் உள்ளது.
மொத்த ஜிடிபி 18 டிரில்லியன் உள்ளதென்றாலும், தனி நபர் வருமானம் 13000 அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே உள்ளது.
ஆனால் அமெரிக்காவின் தனி நபர் வருமானம் என்பதாயிரம் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.
எனவே அமெரிக்காவோடு ஒப்பிடும்போது சீனா எவ்வளவோ பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.
இந்தியா சீனாவை விடவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
என்னவானாலும் நமது நாட்டை ஒரு சூப்பர் பவர் நாடு என்று சொல்லலாம், காரணம் இன்று ஒரு மல்டி போலார் வேர்ல்ட் உருவாகியுள்ளது.
அது மட்டுமல்ல இன்று பல பிராந்தியங்களிலும் அமெரிக்காவை விட இந்தியாவிற்கு செல்வாக்குள்ளது.
அதனால்தான் இந்திய அமெரிக்க உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
எனவே எதிர்காலத்தில் இந்தியா ஒரு பெரும் சக்தியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மற்ற எல்லாத் துறைகளிலும் இந்தியாவால் இவ்வளவு முன்னேற முடியும் என்றால், நிச்சயம் பொருளாதாரத்துறையிலும் உலகமே வியக்கும் விதத்திலான வளர்ச்சியை அடைய முடியும்.
அதனால் இன்று இந்தியாவின் நிலை எப்படி உள்ளது? இந்தியாவில் வறுமை உள்ளது, சேரிகள் உள்ளன என்று பேச வேண்டிய அவசியம் இல்லை.
சீனா ஒருக்காலத்தில் இதை விட மோசமான நிலையில்தான் இருந்தது.
அங்கு ஒற்றைக் கட்சி ஆட்சி முறை உள்ளதால் அவர்களால் அதி வேகத்தில் முன்னேற முடிந்துள்ளது.
இந்தியா விசயத்தில் சிறிது கால அவகாசம் எடுக்கக்கூடும். ஆனால் நமது வளர்சியைத் தடுக்க யாராலும் முடியாது.
இந்தியா வளர்ச்சியடைய ஏன் இவ்வளவு கால தாமதம் என்றால், அதற்கான காரணம் இந்தியாவின் அரசியல் சூழல்தான்.
76க்குப் பிறகு சீனாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், இந்தியாவில் 91 ற்குப் பிறகுதான் மேற்கொள்ளப்பட்டன.
அந்த கால அளவுதான் இப்போதும் இந்தியா சீனா இடையே உள்ளது.
எனவே அடுத்த ஐந்தோ பத்தோ ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும்…..