என்ன? கடற்கரை விமான நிலையம்?!! ஒரு விமான நிலையத்திற்கு அதன் ஓடுபாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விமானங்கள் இறங்குவதும் பறந்து உயருவதும் எல்லாம் இந்த ஓடுபாதையில் அதி வேகத்தில் ஓடிக் கொண்டுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்.
ஓடுபாதை இல்லாத கடற்கரை விமான நிலையம்
அப்படி இருக்க கடற்கரை மணலில் தரையிறங்கும் விமானங்களைப் பற்றி கற்பனை செய்து பார்க்க முடியுமா?
அப்படி இருக்கும்போது ஓடு பாதை இல்லாத ஒரு விமான நிலையம் இருந்தால் எப்படி இருக்கும்?
அப்படி ஒரு விமான நிலையம் உள்ளதா?
இல்லை என்று கூறும் முன்னர் இந்தப் பதிவை முழுவதுமாக படித்துவிடுங்கள். அப்படி ஒரு விமான நிலைய்த்தைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கவிருக்கிறோம்
பர்ரா விமான நிலையம் – BARRA AIRPORT
உலகின் அசாதாரனமான ஒரு விமான நிலையம், ஓடுபாதை இல்லாத ஒரு விமான நிலையம்.
அதன் பெயர் பர்ரா விமான நிலையம் (Barra Airport).
1200 வரையுள்ள மக்கள் தொகையைக் கொண்டுள்ள, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஸ்காட்லாண்டின் பர்ரா தீவின் கடற்கரையில் அமைந்துள்ளது இந்த ஓடுபாதை இல்லாத விமான நிலையம்.
ஓடுபாதை இல்லாததால் இந்த விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் கடற்கரை மணலில்தான் தரை இறங்குகின்றன.
முக்கோன வடிவில் அமைந்துள்ள இந்தத் தீவில் பெரிய மரத்திலான தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவைதான் தரையிறங்கும் விமானங்களுக்கான அடையாள அறிவிப்பு.
அதேபோல விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கி பயணிகள் மணலில் நடந்து சென்றுதான் சாலையை அடைய வேண்டும்.
ஓடுபாதை இல்லாத காரணத்தால் 20 இருக்கைகளுக்கும் மேல் உள்ள விமானங்கள் இங்கு வருவதில்லை. பட்டியல் படுத்தப்பட்ட சில மாடல்களைச் சேர்ந்த சிறிய ரக விமானங்கள் மட்டும்தான் இங்கு வருகின்றன.
Glasgow விமான நிலையத்தில் இருந்து ஸ்கோட்டிஸ் ஏர்வேய்சின் இரண்டு சிறிய விமானங்கள் இங்கு தினசரி சேவை நடத்துகின்ற. அதோடு மற்ற ஷெட்யூல்ட் சர்வீஸ்களும் உள்ளன.
கடற்கரையோடு சேர்ந்து அமைந்துள்ள ஒரு சிறிய கட்டிடம்தான் இந்த விமான நிலையத்தின் டெர்மினல். அந்தக் கட்டிடத்தை அடைவதற்க்கு சாலையோ அல்லது பாலமோ அமைக்கப்படவில்லை.
விமானத்தில் வந்து இறங்கும் பயணிகள் மணலில் நடந்துதான் இந்தக் கட்டிடத்தையும், சாலையையும் எல்லாம் அடைய முடியும்.
விசித்திரமான பர்ரா விமான நிலையம் 1936லேயே செயல்படத் தொடங்கியுள்ளது.
இதையும் பார்க்கவும்: விமானங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கின்றன?
விமனங்கள் இயக்கப்படும் நேரங்கள்
இந்த விமான நிலையத்தின் மற்றுமொரு தனித்தன்மை என்னவென்றால்,
கடல் நீர் மட்டம் உயர்ந்து வந்தபின்னர் அதாவது ஹை டைட் முதல் லோ டைட் ஆகும் வரை இங்கு எந்த விமானங்களும் வருவதில்லை.
தண்ணீர் மட்டம் உயர்ந்து வரும்போது க்லாஸ்கோ விற்கு தகவல் அறிவிக்கவும் அது முடியும்வரை விமான சேவையை நிறுத்தி வைக்கவும் செய்கிறார்கள்.
அதே போல இரவு நேரங்களில் இந்த விமான நிலையத்திற்கு விமான சேவைகள் நடைபெறுவதில்லை.
ஆனால் ஏதேனும் அவசர நிலைகளில் இங்கு விமானங்கள் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், வாகணங்களின் லைட்டுகளை எரியவிட்டு ஓடுபாதையை விமானிக்கு தெரியப்படுத்துவார்கள்.
ப்ரைவேட் ஃப்லை டாட்காம் என்னும் இணையதளம் 2011 ல் நடத்திய சர்வேயில்
பர்ரா விமான நிலையம் முதலிடத்தை பெற்றிருந்தது,
இவ்வளவு சிரமங்கள் இருந்தும் , சாதகமற்ற சூழ்நிலைகள் இருந்தும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நல்ல விதத்தில் சேவை வழங்கிக் கொண்டிருப்பதை பாராட்டும் விதமாக அமைந்தது அந்த ரேட்டிங்க்.
பர்ரா விமான நிலையத்தைப்பற்றி ஏற்கனவே தெரியும் என்பவர்கள் தெரியப்படுத்துங்கள்.