விமானங்கள் குறித்த ஒவ்வொரு தகவல்களும் நமக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கும். விமானம் பறக்கும் விதம், விமான என்ஜின், விமான எரிபொருள் என்று பல விசயங்களை அறிய நம்மில் பலர் ஆவல் கொண்டிருப்போம்.
அவற்றுள் விமான எரிபொருள் என்ன என்ற விசயத்தை எடுத்துக் கொண்டால், அதற்குள்ளும் நமக்கு பல சந்தேகங்கள் எழும். விமான எரிபொருள் என்ன (Which Fuel is used in airplane?), பெயர் என்ன, விலை என்ன, விமானத்தின் மைலேஜ் எவ்வளவாக இருக்கும் என்று பல சந்தேகங்கள் ஏற்படும். இவற்றிற்கான பதிலாக அமையவிருக்கிறது இந்தப் பதிவு, முழுவதும் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.
பொதுவாக விமான எரிபொருள் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூல் (aviation turbine fuel) என்று அழைக்கப்படும்.
ATF என்று சுருக்கத்தில் கூறப்படும் இது ஒரு வித எரிபொருள் மட்டுமல்ல, விமானங்களுக்கு பயண்படுத்தப்படும் வேறுபட்ட எரிபொருட்களை மொத்தத்தில் குறிப்பிடும் பெயர்தான் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூல் (aviation turbine fuel) என்பது.
விமானங்களுக்கு ஒவ்வொரு விதத்திலான எஞ்ஜின்களைப் பொறுத்து அந்தந்த விமானத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பல தனிக் குறியீடுகளில் பல வித எரிபொருட்கள் பயண்படுத்தப்படுகின்றன.
ஆனால் அந்த எல்லா வித எரிபொருளுக்கும் உள்ள ஒரு தனித்தன்மை என்னவென்றால், அவை அனைத்துமே மண் எண்ணை என்பதுதான்.
உயர்ந்த தர மண் எண்ணைதான் விமானங்களுக்குப் பயண்படுத்தப்படும் எரிபொருள் எல்லாமே.
இப்போது விமான எரிபொருள் என்பது மண் எண்ணையின் வகைபேதங்கள்தான் என்பது புரிந்திருக்க்கும் என்று நம்புகிறோம்.
எதனால் விமானத்திற்கு மண் எண்ணை பயன்படுத்தப்படுகிறது? –why kerosene is used in airplane?
விமான எரிபொருள் என்றவுடனே நாம் இதுவரை, விமானத்திற்கு பயன்படுத்துவது முதல் தர பெட்ரோல்தான் என்று கருதியிருப்போம். ஆனால் இப்போது அது மண் எண்ணையின் வகை பேதங்கள் என்று அறிந்தவுடன், சாலையில் ஓடக்கூடிய வாகனங்களுக்கெல்லாம் பெட்ரோலும் டீசலும் பயன்படுத்திக்கொண்டு எதனால் விமானத்திற்கு மண் எண்ணை பயண்படுத்தப் படுகிறது என்ற சந்தேகம் பலருக்கும் எழக்கூடும்.
அதற்கான முக்கியக் காரணம் விமானம் அதிக உயரத்தில் பறக்கும்போது அங்கு அதிக குளிர் நிலவும் என்பது அறிந்த விசயம்தான். அதேபோல எப்போதுமே அதிக குளிர் நிலவக்கூடிய பிரதேசங்களிலும் விமானம் பறக்க வேண்டியதிருக்கும்.
இங்கு பெட்ரோல் அதிக குளிர் நிலவும் நேரங்களில் மிக விரைவாக உறைந்து போகும் வாய்ப்புள்ள ஒரு எரிபொருளாகும்.
ஆனால் மண் எண்ணை மைனஸ் ஐம்பது டிகிரி செல்சியஸ் வரை உறைந்து போகாமல் இருக்கும்.
அதனால்தான் பெட்ரோலுக்கு பதிலாக, விமானங்களுக்கு பயன்படுத்த உகந்த, அதற்கென வகைப்படுத்தப்பட்ட சிறப்பு மண் எண்ணை எரிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல ஏவியேஷனில் மிக அதிகம் பயப்படக்கூடிய விபத்திற்கான வாய்ப்பு என்பது தீப்பற்றுதல் ஆகும்.
சாதாரண மக்கள் கூட, மண் எண்ணை எளிதில் பற்றாது, பெட்ரோல் என்றால் எளிதாக பற்றிக்கொள்ளும் என்று வழக்கத்தில் கூறுவதைப் பலரும் கேட்டிருக்கலாம். அந்த காரணத்திற்காகவும்தான் இங்கு மண் எண்னை பயண்படுத்தப் படுகிறது.
மிக அதிக அளவு வெப்பநிலைக்கு உள்ளாகும்போது மட்டும்தான் மண் எண்னை தீப்பற்றும். எனவே பாதுகாப்பு விசயத்திலும் மண் எண்ணைதான் விமானங்களுக்கு நல்லது என்பதால் அது விமானத்தின் எரிபொருளாக பயண்படுத்தப்படுகிறது.
இதையும் பாருங்கள்: ஓடுபாதை இல்லாத உலகின் ஒரே கடற்கரை விமான நிலையம்
பெரும்பாலும் பயன்படுத்தப்படும் விமான எரிபொருள் வகை – Mostly Used Fuel Type
இந்தியாவிலும் உலகளவிலுமே மிக அதிக அளவில் பயண்படுத்தப்படுவது ஜெட் -ஏ 1-JET A-1 என்னும் வகை எரிபொருள்தான் என்று கூறப்படுகிறது,
இன்னும் பல வகை எரிபொருள் இந்த ஏ.டி.எஃப் க்ரூப்பிலேயே இருந்தாலும் அவை ஒவ்வொரு வித எஞ்சிங்களைப் பொறுத்து பயண்படுத்தப்படுகின்றன, ஆனால் அதிக அளவில்ஜெட் -ஏ 1(JET A-1) வகைதான் பயண்படுத்தப்படுகிறது.
இவையெல்லாம் கேட்கும்போது நமக்கு அடுத்ததாக தோன்றக்கூடிய சந்தேகம் இந்த வகை எரிபொருளின் விலை என்ன என்பதாகத்தான் இருக்கும்.
யாரும் சொல்லாமலே நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் விசயம் விமான எரிபொருள் விலை மிக அதிகமாக இருக்கும் என்பதுதான்.
தகவல்களின் அடிப்படையில் பெற்றோல் விலை 71 ரூபாயாக இருந்த நாளில் ஏ.டி.எஃப் விலை பொதுவாக அதனை ஜெட் ஆயில் என்று குறிப்பிடுவதுண்டு, அந்த ஜெட் ஆயிலின் விலை வெறும் 22 ரூபாய்தான் என்பதும், அதிலும் சர்வதேச அளவில் சேவை நடத்தும் விமானங்களுக்கு சற்று குறைந்த விலையிலும்,
உள்நாட்டு சேவை விமானங்களுக்கு சற்று கூடுதல் விலையிலும் வழங்கப்படுவதாகவும், அதே நேரம் இந்தியாவில் 22 ரூபாய்க்கு வாங்கும் இந்த ஜெட் ஆயில் ஒரு லிட்டர் வெளி நாடுகளில் 10 ரூபாய்தான் என்றும், தெரிந்துகொள்ள முடிகிறது.
விமான எரிபொருள் டேங்கு எங்கு உள்ளது? – Where Is Fuel Stored Onboard an Aircraft?
அடுத்தது விமானங்களின் இறக்கைகளில் எரிபொருள் டேங்குகள் உள்ளனவா என்னும் சந்தேகம் பலருக்கும் உள்ளது. அதற்கான பதில் ஆம் என்பதுதான்.
விமானத்தின் இறக்கைகளுக்குள்ளும் விமானத்தின் மையப்பகுதியிலுமாக எரிபொருள் டேங்குகள் உள்ளன. உண்மையில் விமான இறக்கைகளின் உட்புறம் அதிக வெற்றிடத்தைக் கொண்டுள்ள ஒரு அமைப்புதான்.
மனிதர்கள் உள்ளே செல்லும் அளவுக்கு இடவசதி பெரிய விமானங்களின் இறக்கைகளில் இருக்கும்.
அதேபோல விமானத்தின் மையப்பகுதியில் தாழ் தளத்திலும் எரிபொருள் டேங்க் இருக்கும். இவ்வளவு எரிபொருள் நிரப்பும் அளவிலான டேங்குகளை விமானத்திற்குள் அமைத்தால் விமானத்தின் இடவசதி பெருமளவில் குறையும் என்பது கவணத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
அப்படி விமானத்தின் இறக்கைகளுக்குள் உள்ள வெற்றிடத்தை பயண்படுத்தும் விதமாக எரிபொருள் டேங்குகள் அங்கு அமைக்கப்படுவதாக கூறப்பட்டாலும், மற்றொரு அறிவியல் பூர்வமான காரணமும் இதற்குப்பின்னால் உள்ளது.
அதாவது விமானத்தில் பயணிகளும் பொருட்களும் எல்லாம் ஏற்றியுள்ள எடை, விமானத்தின் எடை என்று மொத்த எடையும் கீழ்நோக்கிய ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அந்த மொத்த எடையையும் மேல்நோக்கி தாங்கும் விதத்தில் மேல்நோக்கிய அழுத்தத்தைக் கொண்டிருக்கும் விமானத்தின் இறக்கை.
அப்படி அதிகளவில் மேல் நோக்கிய அழுத்தத்திற்கு உள்ளாவதால் இறக்கைகள் விரிசலடையவோ அல்லது சேதமடையவோ செய்யாமல் இருக்கும் விதத்தில் அங்கு எரிபொருளின் எடை உள்ளதால் சமன் செய்யப்படுகிறது.
மற்றொரு விசயம் காரிலும் பைக்கிலும் எல்லாம் உள்ளது போல விமானத்தில் எரிபொருள் ஒரே பெட்டிபோல் இருப்பதில்லை. விமான எரிபொருள் டேங்க் என்பது சிறு சிறு அறைகளாக அமைந்திருக்கும்.
அதற்கான காரனம் ஒரே பெரிய டேங்காக அது இருக்குமானால், விமானம் வேகத்தில் பறக்கும்போது உள்ள அசைவுகள், விமானம் திரும்பும்போது எல்லாம் உள்ளே உள்ள எரிபொருள் அங்கும் இங்கும் அலைவதால் விமானத்தின் பேலன்ஸில் பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது, அதைத் தவிர்ப்பதற்காகத்தான் சிறு சிறு அறைகளாக அமைக்கப்பட்டுள்ளது விமானத்தின் எரிபொருள் டேங்க்.
இதையும் பாருங்கள்: விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் ஏன் கொடுக்கப்படுகிறது?
விமானத்தின் மைலேஜ் எவ்வளவு? – What is the mileage of Airplane?
இப்போது அனைவருக்கும் எழக்கூடிய மிக முக்கியமான கேள்வி, விமானத்தின் மைலேஜ் எவ்வளவு என்பதாகும்.
விமானத்தில் நிரப்பிய பின்னர் எரிபொருளை எடை கொண்டுதான் கணக்கிடுகிறார்கள். லிட்டருக்குப்பதிலாக கிலோக்கணக்கில் எரிபொருள் கணக்கிடப்படுகிறது. அதேபோல மைலேஜ் என்பதும் கிலோ மீட்டரில் அல்ல பறக்கும் நேரத்தில்தான் கணக்கிடப்படுகிறது.
விமானத்தின் மைலேஜ் எத்தனை கிலோ மீட்டர் ஓடியுள்ளது என்பதற்குப் பதிலாக எத்தனை மணிநேரம் ஓடியுள்ளது என்று கணக்கிடுகிறார்கள்.
இன்று உலகில் மிக அதிகம் பயண்பாட்டில் உள்ள விமானங்கள் ஏர்பஸ் ஏ-380, மற்றும் போயிங் -737 போன்றவைதான்.
அந்த ரக விமானங்களின் உத்தேச மைலேஜ் கணக்கின்படி ஒருமணிநேரத்திற்கு 2400 கிலோகிராம் எரிபொருள் தேவைப்படுகிறது. அது கிட்டத்தட்ட 3100 லிட்டர்களாக இருக்கும்.
மேற்கூறிய ரக விமானங்களின் மைலேஜ் 3100 லிட்டர் பெர் ஹவர் என்று கூறப்படுகிறது. விமானத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு இறக்கைகளின் கீழ்பகுதியிலும், உடல்பாகத்தின் பக்கங்களிலும் எல்லாம் ரீஃப்யூலிங்க் போர்ட்டுகள் காணப்படும்.
இந்த பதிவில் நாம்
விமான எரிபொருள் என்ன, விமானத்தின் மைலேஜ், பெரும்பாலும் பயன்படுத்தப்படும் விமான எரிபொருள், எரிபொருள் டேங்குகள் விமானத்தின் இறக்கை பகுதியில் ஏன் உள்ளன? என்பன பற்றியெல்லாம் ஓரளவுக்கு புரியும் வகையில் பார்த்துள்ளோம் என்று நம்புகிறோம்.
இங்கு நாம் கூறியுள்ளவை அனைத்தும் அடிப்படையான விசயங்கள்தான், மற்றபடி தொழில்நுட்ப ரீதியிலான ஏராளம் விசயங்கள் உள்ளன.
விமானத்தின் எரிபொருள் பற்றி சுருக்கமாக அமைந்த இந்தப் பதிவு பற்றிய உங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள்.