---Advertisement---

தௌலத் பேக் ஓல்டி: சீனாவிற்கு இந்திய ராணுவத்தின் Big அச்சுறுத்தல்

தௌலத் பேக் ஓல்டி
---Advertisement---

DBO என்று சுருக்கப் பெயரில் அறியப்படும் தௌலத் பேக் ஓல்டி விமானத் தளம் எவ்வாறு அவ்வளவு முக்கியத்துவமான இடத்தில், பல சிரமங்களுக்கு மத்தியில் உருவானது தெரியுமா?

2008 மே 31, நேரம் காலை 11 மணி.

அந்த நேரத்தில் அக்ஷய் சின்னின் வடக்கு பகுதியில் சிப்சாப் பள்ளதாக்குப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சீன வான்பாதுகாப்பு அமைப்புக்களின் கண்கானிப்பு ரெடார்கள் ஒரு விமானம் பறப்பதை உறுதி செய்திருந்தன .

அந்தப் பகுதியில் பல வருடங்களாக எந்த விமானங்களும் பறந்திருக்கவில்லை என்பதால், 

சீன ராணுவத்தின் ரெடார் ஆபரேட்டர்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பியிருந்தது அந்த காட்சி.

ஆனாலும் அந்த விமானம் பறக்கும் பாதை மேற்குப்பகுதியில் இந்திய எல்லைக்குள் இருந்ததால், அவர்கள் அதை ஆபத்தாக கருதவில்லை.

அதனால் அவர்களின் ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவலை தெரிவித்து எச்சரித்த பிறகு அவரவர் வேலைகளைத் தொடர்ந்தார்கள்.

ஆனால் ஒரு ஏ.என்-32 டிரான்ஸ்போர்ட் விமானத்தைப் பயன்படுத்தி, அக்ஷய் சின்னின் சிப்சாப்பிற்கு அருகில் அமைந்துள்ள லடாக்கின் DBO ராணுவ தளத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் பாகமாக அந்த விமானம் பறந்தது என்பதை பின்னர்தான் சீனா தெரிந்து கொண்டது.

மேற்கு இமாலயப்பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அசல் எல்லைக் கோட்டு பகுதியில் அமைந்துள்ள, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் துருப்புச்சீட்டு என்று பாதுகாப்பு வல்லுணர்கள் சிறப்பிக்கும் தௌலத் பேக் ஓல்டி பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

அதோடு சீனாவை மிகுந்த அச்சத்திற்குள்ளாக்கும் இந்த தளத்தைப்பற்றிய மற்ற சிறப்புக்களையும் பார்க்கலாம்.

சீன ஆக்கிரமிப்பும் அத்து மீறல்களும்

1950 திபெத்தை ஆக்கிரமித்து கைப்பற்றிய சீனா, அடுத்த ஆண்டே அதன் மேற்கில் அமைந்துள்ள மற்றுமொரு ஆக்கிரமிப்பு பகுதியான சிஞ்சியாங்கின் கஷ்கர் நகரை திபெத்திய தலைநகரான லாசாவுடன் இணைக்க ஒரு பிரம்மாண்டமான நெடுன்சாலை திட்டத்தை தொடங்கி இருந்தது.

2134 கிலோமீட்டர் நீளமுள்ள அந்த கருங்கற்சாலை அமைக்கும் பணி 1957ல் முடிவடைந்தது.

அந்த சாலை இந்திய நிலப்பரப்பான அக்ஷய் சின்னின் ஊடாகவும் கடந்து செல்லும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்ததை அன்று இந்தியா அறிந்திருக்கவில்லை.

உளவுத்துறை மூலமாக பின்னர் தகவல் கிடைத்ததும், சீனாவின் அந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியது.

ஆனால் அந்த நெடுஞ்சாலை சீன நிலப்பரப்பில்தான் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியது சீனா.

1949ல் உய்குர் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்தில் அக்ஷய் சின் உய்குரின் ஒரு பகுதி என்ற விதத்தில் ஒரு போலி வரைபடத்தையும் வெளியிட்டிருந்தது.

அதை உறுதி செய்வதுபோல் அந்த பகுதியின் ஊடாக சீனா சாலையையும் அமைத்து விட்டபோது, நமது இறையான்மைக்கு சவாலாக செயல்படுகிறது சீனா என்று உணர்ந்தது இந்தியா.

அதனைத் தொடர்ந்து அக்ஷய் சின்னின் கிழக்குப்பகுதியில் அதிகப்படியான ராணுவ நிலைகளை அமைக்க தீர்மானித்தது பாதுகாப்புத்துறை அமைச்சகம்.

1865ல் அன்றைய இந்தியாவின் ஆய்வுக்குழு ஏற்படுத்திய ஜான்சன் லைன் எல்லைக்கு அருகாமை வரை பங்கர்களை அமைக்குமாறு South Block ல் இருந்து ராணுவத்திற்கு உத்தரவு கிடைத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து வடக்கு அக்ஷய் சின்னின் குஆரா தக், ஹாஜி லங்கார் போன்ற இடங்களிலும் தெற்கு அக்ஷய் சின்னின்  லனக் லாவிலும் மத்திய காவல்படையின் பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டன.

அதே நேரம் இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

திபெத் மற்றும் சிஞ்சியாங்கில் உள்ள அவர்களது நலன்களுக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் இந்தியா ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டியது சீனா.

அதனால் அந்தப் பகுதி முழுவதும் தாக்குதல் நோக்கத்துடன் சீன ராணுவத்தினர் நிலை கொண்டார்கள்.

தொடர்ந்து வந்த அத்தகைய சர்ச்சைகள் மூலம் 1959ல் இரண்டு ராணுவங்களுக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடக்கும் அளவுக்கு தீவிரமடைந்தது அந்தப்பிரச்சினை.

மாதங்களுக்கு பிறாகு கிழக்கு லடாக்கில் கோங்க்லா பாஸில் Indian Border Police வீரர்களை சீன ராணுவத்தினர் தாக்கி கொலை செய்த விசயம் இந்தியா சீனா உறவை வெகுவாக பாதித்தது.

அங்கு நிலவிய பதற்றமான சூழல்,  அக்ஷய் சின்னில் இருந்த இந்திய ராணுவ நிலைகளுக்கு கூடுதல் உதவிகளை கொண்டு சேர்க்கவும், தேவையான ஆயுதங்களையும் மற்ற பொருட்களையும் கொண்டு சேர்ப்பதற்காக வடக்கு லடாக்கில் ஒரு ராணுவ தளத்தை அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.

பெரிய போர் நடப்பதற்கான சாத்தியங்களை உணர்ந்து விமானத்தளம் உட்படவுள்ள ராணுவ தலம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது.

அக்ஷய் சீங்க்கு ராணுவ தளவாடங்களைக் கொண்டு சேர்க்கவும், அதனருகில் உயரத்தில் அமைந்துள்ள காரகோரம் கணவாய்ப்பகுதியைக் கண்காணிக்க முடிந்ததுமான ஒரு சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது ராணுவத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அதை கண்டறிவதறாக ராணுவ உளவுத்துறை மற்றும் இந்திய உளவுத்துறையிடம் பொறுப்பு ஒப்படைக்கபட்டது.

தௌலத் பேக் ஓல்டி தேர்வு

வாரக்கணக்கில் நீண்ட ஆய்வுகளுக்குப்பிறகு அந்த அமைப்புகளின் கூட்டுக்குழு, காரக்கோரம் கணவாய்க்கு அருகாமையில் தென்பகுதியிலும், டெப்சாங்க் பீடபூமியின் வடக்குப் பகுதியிலும் அமைந்துள்ள தௌலத் பே ஓல்டியை புதிய தளம் அமைப்பதற்காக தேர்ந்தெடுத்தது.

கடல் மட்டத்தில் இருந்து 5100 மீட்டர் உயரத்தில் உள்ள மைய சமதளமான டி.பி.ஓவில் ஒரு விமாப்படை தளத்தை அமைப்பதற்கு போதுமான இடம் உள்ளதென்று விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவும் அரசிடம் தெரிவித்திருந்தது.

சிஞ்சியாங்கின் டாரி பாசிம் சமதளம், மற்றும் அக்ஷய் சின்னின் அரியா ட்ரிக் மலைத்தொடரையும் இங்கிருந்து மிகத்தெளிவாக கண்காணிக்க முடியும் என்பது அந்த இடத்தின் மிக முக்கியமான அம்சமாக இருந்தது.

பின்னர் ராணுவத்தின் பொறியியல் பிரிவு மிக விரிவான ஆய்வுகளை நடத்தியது.

விமானப்படையின் ஆகாய மார்க ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 1959 டிசம்பர் 10 ல் டி.பி.ஓ ராணுவ தளத்திற்கு பாதுகாப்புத்துறை அனுமதி அளித்தது.

அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து அதி வேகத்தில் தௌலத் பேக் ஓல்டியில் ராணுவ மற்றும் விமானப்படை தளத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

அந்த பொறுப்பு ராணுவத்தின் ஜெனரல் ரிசர்வ் எஞ்ஜினியரிங்க் ஃபோர்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

1960 ஜனுவரியின் தொடக்கத்தில் பணியைத் தொடங்கிய அவர்கள் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆனபோதே அடிப்படை வசதிகளை உட்படுத்தியுள்ள ஒரு ராணுவ தளத்தையும், மீடியம் டிரான்ஸ்போர்ட் ஏர்கிராஃப்டுகளையும், ஹெலிகாப்டர்களையும் இயக்க முடிந்த ஒரு மேம்பட்ட தரையிறங்கு தளத்தையும் தயார் செய்திருந்தார்கள்.

அதைத் தொடர்ந்து 1960 அக்டோபர் 25ல் இந்திய விமானப்படையின் ரஷ்யத்தயாரிப்பு எம்.ஐ- 4 ஹெலிகாப்டரும், பின்னர் அமெரிக்க தயாரிப்பு FAIR CHILD  82 பேக்கட் விமானத்தையும் தரையிறக்கி, GREF ன் எஞ்ஜினியர்கள் அந்த தளம் முழு அளவில் தயார் எனபதை தெளிவுபடுத்தினார்கள்.

இதையும் படிக்கவும்: சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே உயரமான சிலை எதற்காக?

சீனத் தாக்குதலும் தொடர் விளைவுகளும்

1962 அக்டோபர் 20 அதிகாலையில் அக்ஷய் சின்னில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு பெரிய போருக்கான தொடக்கமாக இருந்தது.

நீண்ட கால திட்டமிடலின் காரணமாக அனைத்து முன்னேற்பாடுகளையும் மிகத் தெளிவாக செய்து வைத்துள்ளது சீன ராணுவம்.

அதனால் பலமான தயாரெடுப்புடன் ஜான்சன் லைனைத் தாண்டி மேற்குப்பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த இந்திய நிலைகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.

தொடர்ந்து நடந்த போரில் அக்ஷய் சின்னின் பெரும்பகுதியைக் கைப்பற்றியது.

பாதுகாப்பான இடத்தில் இருந்து எதிரியை எதிர்கொள்வதற்காக டெப்சங்க் பீடபூமியின் வடக்கிலும், தெற்கிலுமாக பின்வாங்கிய இந்திய ராணுவம், 

அவர்களுக்கு தளவாடங்கள் வந்து சேர்வதற்காக தௌலத் பேக் ஓல்டி தலத்தைப் பயன்படுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிறு சிறு ராணுவக் குழுக்கள், தங்களிடம் இருந்த இலகுரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, நவீன ஆயுதங்களுடனும் தெளிவான முன்னேற்பாடுகளுடனும் லட்சக்கணக்கில் வந்த சீன ராணுவத்தினரை கடுமையாக தாக்கினார்கள்.

அதற்கு பதிலடியாக , இந்தியப் பகுதியில் இருந்துள்ள வழங்கள்களை தடுக்கும் நோக்கத்தில் தௌலத் பேக்கு அருகாமையில் உள்ள மைனர் சப்போர்டிங்க் போஸ்டுகளைத் தாக்கியது.

ஆனால் இந்திய ராணுவம் வெளிப்படுத்திய மிகக்கடுமையான போராட்டத்தின் காரணமாக தௌலத் பேக் ஓல்டி தலத்தை அவர்களால் கைப்பற்ற முடிந்திருக்கவில்லை.

அதன் பின்னர் 1960ன் பீஜிங்க் Claim Line க்கு திரும்பிச்செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானது சீன ராணுவம்.

1962 போருக்குப் பிறகு இந்தியா சீனா இடையே அமைந்த அசல் எல்லைக் கோட்டிற்கு வடமேற்கில் அமைந்திருந்த தௌலத் பேக் ஓல்டியின் அமைவிடம் இந்திய ராணுவத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மேன்மையை அளித்திருந்தது.

அக்ஷய் சின்னிலும், சின்ஜியாங்கிலும் உள்ள தங்களுடைய ராணுவ நிலைகளுக்கு இது மிகப்பெறும் அச்சுறுத்தல் என்பதைப் புரிந்து கொண்ட சீனா, 

அதற்கு பதிலாக  தௌலத் பேக் ஓல்டிக்கு அருகாமையில் கிழக்குப்பகுதியில் உள்ள சிப்சாப் பள்ளத்தாக்கில் தமது துருப்புக்களை நிலை நிறுத்தியது.

அதோடு அந்த இரண்டு தலங்களையும் இணைக்கும் விதத்திலான சாலை வசதியையும் ஏற்படுத்தியது.

அதோடு காரக்கோரம் ரேஞ்ஜில் படைபலத்தை அதிகரித்த இந்தியா, அவர்களுக்காக தொடர்ந்து டி.பி.ஓ விலுள்ள விமானத்தலத்திற்கு மீடியம் டிரான்ஸ்போர்ட் விமானங்கள் மூலமாக தேவையான பொருட்களையும், தளவாடங்களையும் கொண்டு சேர்ந்தது.

ஆனால் 1966ல் அங்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் தரையிறங்க்கு தளம் பெருமளவில் சேதமடைந்திருந்ததால், 

அங்குள்ள விமானப்போக்குவரத்தை நிறுத்தி வைக்குமாறு அன்றைய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அர்ஜுன் சிங்க் உத்தரவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து லேயில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை வாகனங்கள் மூலமாகவும், அதன் பின்னர் கால்நடையாகவும் டி.பி.ஓ விற்கு துருப்புக்கள் சென்று சேர்ந்தன.

பொருட்களை கொண்டு செல்வதற்காக கழுதைகள் பயன்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் 43 ஆண்டுகளுக்குப் பிறகு 2008ல் தௌலத் பேக் ஓல்டியின் தரையிறங்கு தளத்தை விமானப்படை மீண்டும் தயார் செய்தது.

தற்போது தௌலத் பேக் ஓல்டியில் என்னேரமும் உஷார் நிலையில் காலாற் படையும், அவர்களுக்கு பின்பலமாக 2020 ஜூலை முதல் எம்-77 பீரங்கிப்படையும், டி-90  டேங்க் படையும் அணிதிரண்டு நிற்கின்றன.

இதையும் படிக்கவும்: இந்தியாவின் மிகவும் கனிவான இதயம் படைத்த சிவ நாடார்

தௌலத் பேக் ஓல்டி – முக்கியத்துவம்

அந்த ராணுவ தளங்களுக்கு தளவாடங்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டு சேர்ப்பதற்காக சரக்கு விமானங்களும், ஹெலிகாப்டர்களும், டி.பி.ஓ விமானத்தளத்திற்கு தினந்தோறும் சென்று வருகின்றன.

எந்த ஒரு கால நிலையிலும் லடாக்கின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் ஒரு சிறந்த நெடுஞ்சாலை 2019ல் Border Road Organization ஆல் அமைக்கப்பட்டது.

அது தௌலத் பேக் ஓல்டிக்கான படை நகர்வை எளிதாக்குவதாக அமைந்துள்ளது.

இதன் மூலம் மோதல் நடக்கும் சூழல்களில் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் காரக்கோரம் பாதையை, 

டி.பி.ஓ விற்கு அருகிலுள்ள காரக்கோரம் பாஸில் இருந்து இந்திய ராணுவத்தால் தாக்கி தகர்க்க முடியும்.

அது மட்டுமல்ல ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மிரில் உள்ள சேய்னிஷ் சஸ்கம் பள்ளத்தாக்கை, திபெத் லாசா சாலையுடனும், காரக்கோரம்  சாலையுடனும் இணைக்கும் ஷஷ்கம் ட்ராக்ட்டை துண்டித்து அந்த பள்ளத்தாக்கிற்கான சப்ளை லைனை உடைக்க முடியும்.

அதனால் அந்தப்பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவத்தின் தௌலத் பேக் ஓல்டி ராணுவ தளம், 

சிங்க்சியாங்க், அக்ஷய் சீன் ஆகிய பகுதிகளில் சீனாவின் நலனுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைந்துள்ளதை சீனா உணர்ந்துள்ளது.

சீனாவின் அந்த அச்சத்தை உண்மையாக்கும் விதமாகவும், 62 ற்கு பதில் கொடுக்கும் விதமாகவும்,

மிகக் கடுமையான பதிலடியை எதிர்காலத்தில் ஏதேனும் போர் நடந்தால் அப்போது டி.பி.ஓவில் இருந்து கொடுக்கும் இந்திய ராணுவம்…..

ஜெய்ஹிந்த்…..

Watch Video: சீனா அதிகம் பயப்படும் தௌலத் பேக் ஓல்டி ராணுவ தளம்

Join WhatsApp

Join Now
---Advertisement---