---Advertisement---

விமானத்தின் வெளிப்புற லைட்டுகள் என்ன சொல்கின்றன? | Strong Reasons

விமானத்தின் வெளிப்புற லைட்டுகள்
---Advertisement---

ஒரு விமானம் விமான நிலையத்தில் நிற்கும்போதும், அது விமான நிலையத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்போதும், பறந்து கொண்டிருக்கும்போதும் பல விதமான வெளிப்புற லைட்டுகள்  பல நிறங்களில் எரிந்துகொண்டிருப்பதை காண முடியும்.

அந்த விளக்குகளின் பயண் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். பதிவை முழுவதும் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

விமானத்தின் வெளிப்புற லைட்டுகள் அனைத்துமே விமானிகள் அறையில் இருந்துதான் இயக்கப்படுகின்ற. இந்த விளக்குகள் அனைத்துமே விமானத்தை எளிதாக கண்டுகொள்வதற்காக உள்ளவையாகும்.

விமானத்தின் வெளிப்புற லைட்டுகளின் நோக்கம் – The Purpose of External Lights

பொதுவாக விமானத்தின் லைட்டுகள் அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் மூன்று வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

  • விமானிகள் கவனிக்க வேண்டிய பகுதிகளை ஒளிரச்செய்வதற்காக.
  • விமானம் மிக எளிதாக தெளிவாக தெரியவேண்டும் என்பதற்காக.
  • பல்வேறு நோக்கங்களுக்காக வெளிச்சமளிப்பதற்காக.

இவற்றோடு விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள பல விளக்குகள்  இங்கு குறிப்பிட்டுள்ள நோக்கங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகின்றான.

எடுத்துக்காட்டாக தரையிறங்கும் விமான விளக்குகள் விமானிகளுக்கு முன்புறத்தில் தேவையான வெளிச்சத்தை வழங்குகின்றன. அதே நேரம் மற்றவர்கள் விமானத்தை எளிதாக பார்க்கவும் வழி செய்கின்றன.

அவற்றின் எந்தெந்த லைட்டுகள் என்னென்ன உணர்த்துகின்றன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.விமானத்தை எளிதாக கண்டுகொள்ள உதவும் லைட்டுகள் – Lights That Make the Aircraft More Visible

இதையும் பார்க்கவும்: விமானத்தின் எரிபொருள், விலை, மைலேஜ்

நேவிகேஷன் அல்லது பொசிஷன் லைட்டுகள் – Navigation (Position) Lights

விமானத்தின் வெளிப்புற லைட்டுகள்
Image credit: life.in.aviation

பொசிஷன் லைட்டுகள் அல்லது நேவிகேஷன் லைட்டுகள் என்று கூறப்படும் இவை, மற்ற விமானங்கள் விமானத்தின் நிலையை தெரிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளவையாகும்.

விமானத்தின் இரண்டு இறக்கைகளின் முனைகளில் மற்றும் வால் பகுதியில்  இந்த பொசிஷன் லைட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும்.

எப்போதும் விமானத்தின் இடது பக்க இறக்கையில் சிவப்பு லைட்டும் வலது புறத்தில் பச்சை லைட்டும் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல விமானத்தின் வால் பகுதியில் வெள்ளை நிற லைட் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த மூன்று லைட்டுகளும் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் லைட்டுகள் ஆகும்.

உதாரணத்திற்கு ஒரு ஹெலிகாப்டர் பறக்கும்போது அந்த ஹெலிகாப்டருக்கு முன்னால் தொலைவில் மற்றொரு விமானம் பறக்கிறது என்றால் அந்த விமானத்தின் நிலையை  பார்வையில் படக்கூடிய அந்த விமானத்தின் லைட் மூலம்  தெரிந்து கொள்ள முடியும்.

முன்னில் பறக்கும் விமானத்தின் பச்சை விளக்கும், வெள்ளை விளக்கும் தெரிகிறது என்றால் அந்த விமானம் ஹெலிகாப்டரின் இடமிருந்து வலப்புறம் நகர்கிறது என்று பொருளாகும். 

அதுவே சிவப்பு விளக்கும் வெள்ளை விளக்கும் தெரிந்தால் அந்த விமானம் வலமிருந்து இடப்பக்கம் செல்கிறது என்றும் இந்த ஹெலிகாப்டரின் விமானி புரிந்துகொள்வார்.

சிவப்பு மற்றும் பச்சை விளக்கு தெரிந்தால் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வார் அந்த விமானி. காரணம் சிவப்பும் பச்சையும் ஒரே நேரத்தில் தெரிந்தால் விமானம் தன்னை நோக்கி வருவதை இந்த ஹெலிகாப்டரின் விமானி புரிந்து கொள்வார்.

அதுவே சிவப்பு பச்சை மற்றும் வெள்ளை ஆகிய மூன்று லைட்டுகளும் தெரிந்தால் முன்னே உள்ள விமானம் இந்த ஹெலிகாப்டர் செல்லும் அதே திசையில் சென்று கொண்டிருக்கிறது என்று பொருள்.

இப்படியாக இந்த லைட்டுகளைக் கொண்டு விமானங்களுக்கு இடையேயான மோதல்களைத் தடுக்க முடியும்.

பீகான் லைட் அல்லது ஆண்டி கொல்லிஷன் லைட் – Beacon (Red Anti-Collision) Lights

அடுத்தது விமானத்தின் மேல் பகுதியிலும் மற்றும் கீழ் பகுதியிலும் காணப்படும் சிவப்பு நிற ஃப்ளாஷ் அதாவது மின் வெட்டொளி விளக்காகும்.

ஆன்டி கொல்லுஷன் லைட் என்று கூறப்படும் இந்த விளக்கானது மிக அதிக வெளிச்சம் வெளிப்படுத்தக் கூடியதாகும். இந்த விளக்கை விமானிகள் விமானத்தின் எஞ்ஜினை முடுக்குவதற்கு முன்பாகவே எரிய விடுவார்கள்.

அதாவது இந்த விளக்கு எரிகிறது என்றால்  விமானத்தின் அருகில் ஆட்களோ அல்லது வாகனங்களோ இருக்கக் கூடாது என்றும், அருகில் வருவது ஆபத்தானது என்றும் எச்சரிப்பதுதான், முதலில் இந்த விளக்கினை எரிய விடுவதற்கான காரணம்.

அதேபோல விமானம் பறந்து உயர்ந்த பின்னரும் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்போது இந்த விளக்குகள் தொடர்ந்து எரியவிடப்படும். 

அதிக வெளிச்சம் உள்ள விளக்குகள் என்பதால் விமானத்தை கண்டுகொள்வதற்கான சாத்தியம் அதிகரிக்கும். அதனால்தான் விமான பயணம் முழுவதும் இந்த லைட் எரியவிடப்படும்.

இந்த விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது அருகில் யாரும் எதுவும் நெருங்கக் கூடாது என்பதுதான் அடிப்படை.

எனவேதான் விமானத்தின் எஞ்ஜின் ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு எரியவிடப்படும் இந்த விளக்கு விமானம் தறையிறங்கி எஞ்ஜின் எல்லாம் நிறுத்தப்பட்டு பார்க்கிங்க் பிரேக் அப்ளை செய்த பின்னர் மட்டுமே நிறுத்தப்படும்.

அடுத்தது ஆண்டி கொல்யூஷன் ஸ்ற்றோப் லைட் – Strobe (White Anti-Collision) Lights

இவை இரண்டு இறக்கைகளின் முனைகளில் பொருத்தப்பட்டிருக்கும் வெள்Lai நிற மின் வெட்டொளி விளக்குகள் அதாவது ஃப்ளாஷ் லைட்டுகள் (Flashlights) ஆகும்.

இவற்றின் பயணாக இரவு நேரங்களில் பறக்கும் விமானங்களைக் கண்டு கொள்ள முடியும். அதோடு ஃப்ளாஷிங்க் லைட்டுகள்- (Flashing Lights) என்பதாலும் இவை விமானத்தின் இறக்கை முனையில் பொருத்தப்பட்டிருப்பதாலும் இரவு நேரங்களில் இந்த விமானத்தின் அளவை மற்ற விமானங்களின் விமானிகள் எளிதாக கண்டுகொள்ள முடியும்.

இந்த விளக்குகள் மிக அதிக வெளிச்சத்தை ஏற்படுத்தும் மென்வெட்டொளி விளக்குகள் என்பதால் ஓடுபாதையில் இருந்து விமானம் பறந்து உயரப்போகும் நேரத்தில்தான் இவை ஆன் செய்யப்படும்.

அதேபோல லேண்டிங்க் நேரத்திலும் லேண்டிங்க செய்தவுடனேயே இந்த விளக்கினை விமானிகள் நிறுத்தி விடுவார்கள்.

காரணம் டாக்ஸி வேயில் விமானம் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விளக்குகளின் அதிக ஒளி மற்ற விமானங்களுக்கும் வாகனங்களுக்கும் எல்லாம் ஒரு தொந்தரவாக அமையலாம் என்பதுதான்.

விமானிகளின் பார்க்க வேண்டிய பகுதிக்கு வெளிச்சமூட்டும் லைட்டுகள் – Lights that illuminate areas the Pilots need to see.

அடுத்தது கார்களில் உள்ளது போலவே விமானங்களிலும் ஹெட் லைட்டுகள் உள்ளன, 

அவை இரண்டு வித லைட்டுகளாக  அமைக்கப்பட்டுள்ளன,

டாக்ஸி லைட் – Taxi Light

இது விமானத்தின் நோஸ் பகுதி அதாவது விமானத்தின் முன்பகுதிக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும்.

இது விமானம் டாக்ஸி வேயில் செல்லும்போதும் ஓடுபாதையில் செல்லும்போதும் ஓடுபாதையின் காட்சி தெளிவாக தெரிவதற்காக பயண்படுத்தப்படுகிறது.

லேண்டிங்க லைட்டுகள் – Landing Lights

லேண்டிங்க் லைட்டுகள்தான் விமானங்களில் மிகவும் பெரியவையும் அதே போல மிக அதிக ஒளிரும் தன்மையும் கொண்டுள்ளவை ஆகும்.

இந்த விளக்குகள் விமானத்தின் இறக்கைகளிலும், நோஸ் லேண்டிங்க கியரிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

இவையும் மேற்கூறிய டாக்ஸி வே லைட்டினைபோலதான் பயண்படுத்தப்படும் என்றாலும், இந்த விளக்குகள் அதிக பரப்பில் அதாவது ஓடுபாதையின் இருபுறங்களும் தெளிவாக தெரியும்படி வெளிச்சம் தரக்கூடியவை ஆகும்.

விமானம் பறந்து உயரும் நேரத்தில் விமானம் 3000 மீட்டர் அதாவது 10000 அடி உயரத்தை அடைந்த பின்னர் மட்டுமே லேண்டிங்க் லைட்டுகள் நிறுத்தப்படும்.

அதேபோல விமானம் தரை இறங்கும் நேரத்தில் அதே 10000 அடி உயரத்தில் விமானம் வரும்போதே லேண்டிங்க விளக்குகள் ஆன் செய்யப்படும்.

லோகோ லைட் – Logo Light

இந்த விளக்கானது ஹாரிசண்டல் ஸ்டெபிலைஜரில் (horizontal stabilize) பொருத்தப்பட்டுள்ளதாகும்.

வால் பகுதியில் வெளிச்சம் பரப்பும் இது பெயருக்கேற்ப விமானத்தின் சின்னத்தில் பிரகாசம் அளிக்கும் ஒன்றாகும்.

இந்த லோகோ லைட்டின் (Logo Light) மூலம் டாக்ஸி வேயில் பயணிக்கும் நேரத்தில் க்ரௌண்ட் கண்ரோலர்கள் விமானத்தை அடையாளம் காணவும் உதவிகரமாக இருக்கும்,

வீல் வெல் லைட்டுகள் 

இது நோஸ் லேண்டிங்க் கியர் உள்ள பகுதிகளில் வெளிச்சம் படர்த்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

Join WhatsApp

Join Now
---Advertisement---