---Advertisement---

துருக்கி அதிபர் எர்டோகனின் மனமாற்றம் | Amazing Change: Erdogan skips Kashmir mention at UNGA

துருக்கி அதிபர் எர்டோகன்
---Advertisement---

2019ல் 370 ஆம் சட்டப்பிரிவை ரத்து செய்தது முதலே, பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்து வந்தது துருக்கி.

துருக்கி அதிபர் எர்டோகன் ஐ.நா.வில் பேசும்போதெல்லாம் ஜம்மு கஷ்மிர் விசயத்தை எடுத்துப் பேசுவதுண்டு. 

2019ல் மிகத் தீவிரமாக அது தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தார் துருக்கி அதிபர் எர்டோகன்.

தொடர்ந்து 2023 வரை தொடர்ந்து அவர் கஷ்மிர் விசயத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

2023 ஆனபோது இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி கஷ்மிர் விசயத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது அவரிடம்.

அதற்கான மிக முக்கியமான காரணம், துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட்ட போது, அங்கு முதலில் உதவிக்கு ஓடிவந்த நாடுகளில் ஒன்றாக இருந்தது இந்தியா.

இந்தியா துருக்கி இடையேயான உறவு ஒரு கட்டத்தில் மோசமடைந்திருந்தாலும், ஓரளவுக்கு அதன் தீவிரம் குறைந்து வருவதைக் காண முடிகிறது.

இந்தியாவில் ஜி-20 மாநாடு நடந்த போது, துருக்கி அதிபர் எர்டோகன் இந்தியாவிற்கு வந்திருந்தார்.

அது மட்டுமல்ல, இந்தியா ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு துருக்கியின் ஆதரவையும் வெளிப்படுத்தி இருந்தார் அவர்.

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஐந்து நாடுகள் மட்டும் அதிகாரத்தைத் தக்க வைத்துள்ளதில் இந்தியாவைப் போலவே துருக்கிக்கும் அதிருப்தி உள்ளது.

அதை வெளிப்படையாகவே பல நேரங்களில் கூறியுள்ளது துருக்கி.

அந்த ஐந்து நாடுகள் மட்டுமே உலகம் அல்ல என்றும் கூறியுள்ளார் துருக்கி அதிபர் எர்டோகன்.

அதே நேரம் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆனால் துருக்கி பெருமைப்படும் என்றும் கூறியுள்ளார் அவர்.

இன்நிலையில் 2024ல் அதாவது தற்போது நடந்த ஐ.நா கூட்டத்தில் பேசும்போது அவர் கஷ்மிர் விசயத்தைப் பற்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை என்பது மிகப்பெரிய ஒரு மாற்றமாக பார்க்கப்படுகிறது.

2019 முதல் 2023 வரை ஜம்மு கஷ்மிர் விசயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்த துருக்கி அதிபரிடம், திடீரென இந்த மாற்றம் காணப்படுகிறது.

இதையும் பாருங்கள்: ஐ.நா மாநாடு 2024: இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கை, சீன எதிர்ப்பு

துருக்கி அதிபர் செயலும் பாகிஸ்தானும்

துருக்கி அதிபர் எர்டோகன்

இந்த மாற்றம் உண்மையில் பாகிஸ்தானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 எப்போதும் போல் இம்முறையும் துருக்கி அதிபர் கஷ்மிர் விசயத்தையும் எடுத்துப் பேசுவார் என்று கருதி இருந்தது பாகிஸ்தான்.

ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசியிருக்கவில்லை துருக்கி அதிபர்.

அதே நேரம் பல விசயங்களைக் கையாள்வதில் ஐ.நா முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று கூறியுள்ளார் அவர்.

துருக்கி அதிபர் இம்முறை கஷ்மிர் விசயத்தைக் குறித்து பேசாமல் தவிர்க்கக் காரணம் என்னவாக இருக்கும்?

அதைப் பற்றி ஆராயத் தொடங்கினால், இந்தியாவின் செல்வாக்கு உலகில் எந்தளவு அதிகரித்து வருகிறது என்பதைக் காண முடியும்.

2019ல் இருந்து 24 ஐ அடையும்போது இந்தியா உலகளவில் மிகுந்த செல்வாக்க்குள்ள நாடாக மாறியுள்ளது.

அதனால் தேவையில்லாமல் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கருதியிருக்கலாம் துருக்கி நிர்வாகம்.

பிரிக்ஸ் என்பது மிக முக்கியமான ஒரு கூட்டமைப்பாக வளர்ந்து வருகிறது.

ஐ.நா.வில் பேசிய துருக்கி அதிபர், ஷாங்காய் கோ ஆபரேஷன், ஆசியான், பிரிக்ஸ் ஆகிய கூட்டமைப்புகளுடன் ஒத்துழைப்பது குறித்து பேசியுள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பை மிக முக்கியமான ஒரு கூட்டமைப்பாகப் பார்ப்பதாகவும் கூறியுள்ளார் அவர்.

பிரிக்ஸ் என்பது இந்தியாவும் அங்கம் வகிக்கும் ஒரு கூட்டமைப்பாகும்.

பிரேசில், ரஷ்யா,   இந்தியா, சீனா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஒரு கூட்டமைப்பாகும் பிரிக்ஸ்.

G7 போன்ற கூட்டமைப்புகளுக்கு ஒரு மாற்றாக உருவான ஒரு கூட்டமைப்பாகும் பிரிக்ஸ்.

அதோடு வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளின் கூட்டமைப்பு என்ற ஒரு தனித்தன்மையும் இந்தக் கூட்டமைப்பிற்கு உள்ளது.

எனவே பிரிக்ஸின் விரிவாக்கம் குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. அது செய்யப்பட்டும் வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, எகிப்து, இரான் போன்ற நாடுகள் பிரிக்ஸில் இணைந்துள்ளன.

மேலும் பல நாடுகள் பிரிக்ஸில் இணைய விருப்பம் கொண்டுள்ளன.

காரணம் ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்க முடிந்த, சாத்தியமான சக்திகளின் ஒரு கூட்டமைப்பாகும் இது.

அப்படிப்பட்ட ஒரு முக்கியமான கூட்டமைப்பான பிரிக்ஸில் இணைய வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாகவே துருக்கிக்கும் உள்ளது.

ஆனால் பிரிக்ஸில் இணைய வேண்டுமானால், பிரேசில், ரஷ்க்யா, இந்தியா, சீனா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் ஆதரவு அவசியமாகும்.

அதாவது இந்தியா மறுத்தால் எந்த ஒரு நாட்டையும் இந்தக் கூட்டமைப்பில் சேர்க்க முடியாது.

எனவே பிரிக்ஸில் புதிய ஒரு நாடு உருவாக வேண்டுமானால் அதன் உறுப்பு நாடுகளின் ஆதரவு அவசியமாகும்.

பிரிக்ஸை நிறுவிய உறுப்பு நாடுகள் ஐந்திற்கும் எப்போதும் சிறிது சிறப்பு அந்தஸ்து இருக்கத்தான் செய்யும்.

துருக்கி போன்ற நாடுகள் எமர்ஜிங்க் பவர்ஸாக உள்ள இந்த நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்புகின்றன. 

அத்தகைய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸில் இணைய விரும்புகின்றன.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் இரட்டை வேடம், இரட்டை நிலைப்பாடு குறித்து உலகம் முழுவதற்கும் தெரியும்.

இந்தியா விசயத்தை எடுத்துக் கொண்டாலே, பல விசயங்களில் இந்தியாவிற்கு ஒத்துழைப்பு நல்குகிறது அமெரிக்கா,  உதவிகளைச் செய்கிறது. 

அதே நேரம் நமக்கு எதிரான நகர்வுகளையும் மேற்கொள்கிறது அமெரிக்கா.

அதாவது ஒரு கையால் தழுவும், மறு கையால் தள்ளும் என்பதுதான் அமெரிக்காவின் இயல்பு.

அதனால் நாம் நமதான ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

அமெரிக்காவை மட்டுமே நட்பு நாடாகக் கொண்டிராமல் மற்ற நாடுகளுடனும் உறவை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

பொதுவாகவே இந்தியா அனைத்து நாடுகளுடனும் மிக நல்ல உறவைத் தொடரவே செய்கிறது.

வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையை ஜி-20 யின் முழக்கமாகவே உலகிற்கு அறிமுகம் செய்தது இந்தியா.

உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்கிறது இந்தியா.

அதனால் அனைவருடனும் ஒத்துழைப்பது, அனைவருடனும் நல்ல உறவைத் தொடர்வது இந்தியாவின் கொள்கையாக உள்ளது.

முன்பு இந்தியா அணி சேராக் கொள்கையைப் பின்பற்றியது.

அவ்வாறு அணி சேராக் கொள்கையைப் பின்பற்றியபோது,  இந்தியா எந்த ஒரு அணியிலும் சேராமல் இருந்தது.

ஆனால் இப்போது அணி சேராக் கொள்கை என்பதை ஏதேனும் ஒரு அணியில் சேர்வதில்லை என்று வைத்துக்கொண்டு, 

எல்லா அணிகளுடனும் உறவாடும் ஒரு கொள்கையைப் பின்பற்றுகிறது பாரதம்.

இந்த வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாகும் இது.

அதனால்தான் இந்தியா அமெரிக்காவுடன் உறவாடும் அதே நேரத்தில், ரஷ்யாவுடனும் உறவாடி வருகிறது.

ரஷ்யா, இரான் சீனா என்று அனைத்து நாடுகளுடனும் உறவாடும் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது பாரதம்.

இதை நிச்சயம் உலகில் ஒரு புதிய சக்தி உதயமாவதையே உணர்த்துகிறது.

உலகளாவிய இந்தியாவின் செல்வாக்கும், பொருளாதார வளர்ச்சியும், ரணுவ வலிமையும், தொழில் நுட்ப வளர்ச்சியும் எல்லாம் உலகம் காண்கிறது.

நமது சந்திரயான் மூன்று திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது கூட இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் விசயமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால் மட்டும்தான் துருக்கியைப் போன்ற ஒரு நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கிறது.

பாகிஸ்தானுடனான உறவின் மூலம் துருக்கிக்கு எந்த பயனும் இல்லை என்பது ஒரு உண்மையாகும்.

இதையும் பாருங்கள்: இந்திய அமெரிக்க உறவு | Is India a Super power?

உலகம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விசயம் உள்ளது இங்கு.

இந்தியா இந்துத்துவா நாடு, அல்லது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு என்று சொல்லப்பட்டாலும் இந்தியா விசாலமான ஒரு நாடாகும்.

இந்தியா மிகப்பெரிய நாடாக இருப்பதால் இங்கு மக்கள் தொகையும் அதிகமாக உள்ளது.

மக்கள் தொகை அதிகமாக இருப்பதால்,  இங்கு சிறுபான்மையினர் என்று சொல்லப்படும் மக்கள் தொகை மட்டுமே இருபது கோடியாக உள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகையின் அடிப்படையில், என்பது சதவிகிதம் இந்துக்களாக இருக்கும் நிலையில், 

மீதமுள்ளதில் 15 அல்லது பதினாறு சதவிகிதம் மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும், அது பதினெட்டு கோடி என்ற அளவில் இருக்கும்.

சவுதி அரேபியா, துருக்கி உட்படவுள்ள மிக முக்கியமான இஸ்லாமிய நாடுகளில் உள்ளதை விட அதிகமாக இஸ்லாமிய மக்கள் தொகை இந்தியாவில் உள்ளது.

அப்படிப்பட்ட ஒரு மகா தேசத்துடன் பகைமை பாராட்டுவதால் துருக்கி போன்ற நாடுகளுக்கு எந்த பயனும் இல்லை.

அதோடு இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கு அதிகரித்து வருவதை துருக்கியும் காண்கிறது.

அதாவது இந்தியாவைப் பகைத்துக் கொள்வது அறிவான செயல் அல்ல என்று உலகம் புரிந்து கொண்டுள்ளது இன்று.

இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளதால், அது இந்தியா மீது மற்ற நாடுகளுக்கு மிகுந்த மரியாதை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.

உலக நாடுகள் பல்வேறு நிலைப்பாடுகள் எடுப்பதைக் காண முடியும்.

இரான், வட கொரியா போன்ற நாடுகள் எல்லாம் அமெரிக்காவோடு மோதல் போக்கைக் கொண்டுள்ளன.

அடுத்து ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி, அமெரிக்காவோடு மோதும் நாடுகள் உள்ளன.

அந்த அணியில் இயல்பாகவே அமெரிக்காவோடு மோதல் போக்கைக் கொண்டுள்ள வடகொரியா, இரான் எல்லாம் உட்படும்.

அந்த நாடுகள் மீதெல்லாம் பெருமளவிலான தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா.

உக்ரைனைத் தாக்கியதாக காரணம் சொல்லி ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா.

ஆனால் சீனா மீது அவ்வளவு சுலபமாக தடைகளை ஏற்படுத்த முடியாது.

காரணம் அமெரிக்காவும் சீனாவும் ஒன்றையொன்று சார்ந்துள்ள பொருளாதார சக்திகளாகும்.

இங்கு சீனாவை ஆதரிக்கும் சில நாடுகள் உள்ளன. ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகள் உள்ளன. அமெரிக்காவை ஆதரிக்கும் நாடுகள் உள்ளன.

ஆனால் இங்கு இந்தியா முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையைக் கொண்டுள்ள ஒரு நாடாகும்.

இந்தியா சுயம் ஒரு பெரிய சக்தி என்று உலகிற்கு உணர்த்திக் கொண்டுள்ளது.

காரணம் நமது நாடு ஒரு வலிமையான நாடு என்று மற்றவர்கள் சொல்ல மாட்டார்கள்.

இன்றைய உலகில் ஒருபோதும், மற்ற நாடுகளின் வலிமையை எந்த ஒரு நாடும் ஒப்புக்கொள்ளாது.

நாம்தான், நாம் யார் என்றும், நமது வலிமை என்ன என்றும், நம்மால் என்ன செய்ய முடியும் என்றும் வெளிப்படுத்த வேண்டும்.

அதை மிகச்சிறப்பாக பாரதப்பிரதமர் மோடியும், அவரது தளபதிகளும் செய்து கொண்டுள்ளார்கள்.

அதனால் இன்று இந்தியாவிடம் பகை வேண்டாம் என்று துருக்கி உட்படவுள்ள நாடுகள் கருதுகின்றன.

இப்போது துருக்கி அதிபர் ஐ.நாவில் கஷ்மிர் விசயத்தைப் பற்றி எதுவும் பேசாமல், பாகிஸ்தானை ஒதுக்கியது அதன் ஒரு அறிகுறியாகத்தான் பார்க்கப்படுகிறது.

கடந்த சில காலமாக இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார் துருக்கி அதிபர் எர்டோகன்.

அதற்கிடையில் சில கருத்து வேறுபாடுகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளன.

அது எப்போதும் இருக்கத்தான் செய்யும்.

சமீபத்தில் இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது துருக்கி என்ற ஒரு செய்தி கடந்த ஜூலை மாதம் வெளியாகி இருந்தது.

அதனால் இந்தியாவிற்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

அப்போது இந்தியாவே துருக்கியுடனான ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

அவ்வாறு உலக அரசியலில் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

ஆனால் இந்தியாவை அதிகம் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற அளவில் மனமாற்றமடைந்துள்ளார் எர்டோகன் என்பதில் சந்தேகமில்லை.

துருக்கி கஷ்மிர் விசயத்தில் இருந்து விலகியிருப்பது, துருக்கி அதிபர் தன் மனமாற்றம், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அதைத்தான் உணர்த்துகிறது…..

இதையும் பாருங்கள்: தௌலத் பேக் ஓல்டி: சீனாவிற்கு இந்திய ராணுவத்தின் Big அச்சுறுத்தல்

Join WhatsApp

Join Now
---Advertisement---