---Advertisement---

இந்தியா பூட்டான் உறவு! சீனாவின் ஐந்து விரல் திட்டம்!!

இந்தியா பூட்டான் உறவு
---Advertisement---

இந்தியா பூட்டான் இடையே நிலவும் சிறந்த உறவைப் பற்றி அறிவோம். அதே நேரம் பூட்டான் மீது கண் வைத்துக் காத்திருக்கும் சீனாவின் திட்டங்கள் அதை மேலும் வலுப்படுத்துவதாக அமைகின்றன.

உலகம் இன்று ஒரு உலகப்போரின் விளிம்பில் உள்ளது என்று சொல்லலாம்.

இன்று உலகில் நடக்கும் போர்கள் ஏதோ சாதாரண விசயத்தைப் போல் மாறிவிட்டது அனைவரது மனங்களிலும்.

முன்பு நடந்துள்ள உலகப் போர்கள் எவ்வாறு தொடங்கினவோ, அதுபோன்ற நிகழ்வுகள் இப்போது நடப்பதைக் காண முடிகிறது.

ஆனால் அறியாத விதத்தில் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டுள்ளது நிலைமை.

முதலில் ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியது.

பின்னர் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியது, இப்போது இஸ்ரேல் லெபனான் இடையேயான போராக படர்ந்துள்ளது, இஸ்ரேல் இரான் போராகவும் மாறக்கூடிய வாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் ஜோர்டான் தலையிடவும், இராக் போன்ற நாடுகள் தலையிடவும் வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்தால் கடுமையான  ஒரு போர் நடக்கக் கூடிய வாய்ப்புள்ளது.

கமலா ஹாரிசே அதிபராக வந்தாலும் போருக்கான வாய்ப்பை மறுக்க முடியாது.

இதற்கிடையில் பல இடங்களிலும் ஆயுதக் குழுக்கள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன.

அதேபோல ஆஃப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும்  இடையே முறுகல் நிலை நீடித்து வருகிறது.

இந்தியா வங்கதேசம் இடையே பிரச்சினைகள் உள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையே பிரச்சினைகள் உள்ளன.

இந்தியாவின் சிக்கன் நெக் மீது கண் வைத்துக்கொண்டு இருக்கிறது சீனா.

பிரிக்ஸ் குறித்து பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. 

பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்தியா சீனா இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இரண்டு தினங்களுக்கு முன்பு அருணாச்சல் பிரதேசில் உள்ள ஒரு மலைக்கு பெயர் வைத்தது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒரு பிரச்சினை தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் பூட்டான் எல்லைப் பிரதேசத்தில் மெல்ல மெல்ல ராணுவக் கட்டமைப்பை சீனா வலுப்படுத்தி வருவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

அதாவது பூட்டான் எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவ இருப்பை அதிகரிக்கிறது, அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ளது, சாலைகள் அமைத்து வருகிறது.

அதெல்லாம் பூட்டானைக் கைப்பற்றும் நோக்கத்திலான சீனாவின் தோலை நோக்குடன் கூடிய நகர்வுகள் என்று கூறப்படுகிறது.

பூட்டான் என்னும் மிகச்சிறிய நாடு

பூட்டான்

7.8 லட்சம் மக்கள் மட்டுமே உள்ள ஒரு மிகச்சிறிய நாடாகும் பூட்டான்.

38394 சதுர கிலூமீட்டர் மட்டுமேயாகும் பூட்டான் நாட்டின் பரப்பளவு.

அளவின் அடிப்படையில் உலகில் 133 ஆம் இடத்திலுள்ளது பூட்டான்.

கிட்டத்தட்ட நமது அண்டை மாநிலமான கேரளத்தின் அளவே உள்ள ஒரு சிறிய நாடாகும் பூட்டான்.

அதே நேரம் பூட்டானில் ஏழரை லட்சம் மக்கள் தொகை மட்டுமே உள்ள நிலையில், கேரளாவில் மூன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுள்ளது.

அதனால் நீண்ட காலமாகவே பூட்டான் மீது ஒரு கண் வைத்துள்ளது சீனா.

இமாலய நாடுகளில் எல்லாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது சீனாவின் நீண்டகால நோக்கமாகும்.

சிக்கிமைக் கைப்பற்ற சீனா செய்த முயற்சி

முன்பு அதுபோல்தான் சிக்கிமை சீனாவுடன் இணைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தது சீனா.

சிக்கிமை இணைத்துக் கொண்டால், இந்தியாவின் சிலிகுரி கோரிடோரை சுலபமாக அனுகலாம் என்பதாக இருந்தது சீனாவின் நோக்கம்.

இன்று பூட்டான் இருப்பதைப் போல், 1975 வரை சிக்கிம் மன்னராட்சியின் கீழ் இருந்து வந்தது.

ஆனால் சீனா ஆக்கிரமித்துக்கொள்ளும் என்ற பயத்தில் அதன் மன்னர் சிக்கிமை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடிவெடுத்தார்.

1975ல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 97.5 சதவிகித மக்கள், சிக்கிம் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவளித்திருந்தார்கள்.

அவ்வாறு இந்தியாவின் இருபத்து இரண்டாவது மாநிலமாக மாறியது சிக்கிம்.

இந்திய மாநிலங்களிலேயே இரண்டாவது மிகச்சிறிய மாநிலமாகும் சிக்கிம்.

7096 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமேயுள்ள மிகச்சிறிய மாநிலமான சிக்கிமின் மக்கள் தொகை 610000 ஆகும்.

சிக்கிம் பூட்டான் எல்லாம் சீனா தமதாக்க வேண்டும் என்று கனவு காணக்கூடிய பகுதிகளாகும்.

அதாவது சீனாவின் ஐந்து விரல் கொள்கையின் பாகமாக உள்ளவையாகும் இந்தப் பகுதிகள் எல்லாம்.

இந்தியாவின் லடாக், நேப்பாளம், பூட்டான், இந்தியாவின் அருணாச்சல் பிரதேசம், இந்தியாவின் சிக்கிம் ஆகிய ஐந்து பகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று கனவு காண்கிறது சீனா.

இன்நிலையில் அடுத்து எளிதாக இலக்கு வைக்க முடிந்த பகுதியாக பூட்டான்தான் உள்ளது.

காரணம் பெயரளவில் ஜனநாயகம் இருந்தாலும், இப்போதும் பூட்டானில் மன்னராட்சி முறை உள்ளது.

பரப்பளவின் அடிப்படையில், மிகச்சிறிய நாடாகவும், மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நாடாகவும் இருப்பதால், பூட்டானுக்குள் ஊடுருவ முயற்சிக்கிறது சீனா.

நுழைந்து விட்டால் பின்னர் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும் வித்தை சீனாவிற்கு நன்றாகத் தெரியும்.

எவ்வாறு திபெத்தைக் கைப்பற்றியதோ, அதேபோல் மற்ற இமாலய நாடுகளையும் கைப்பற்ற முயற்சிக்கிறது சீனா.

ஆனால் திபெத் விசயத்தில் பெரியளவிலான எதிர்ப்புக்கள் இல்லாத காரணத்தால் சீனா சுலபமாக கைப்பற்றி இருக்கலாம்.

திபெத்தும் அமைதி விரும்பியாக அன்று இருந்துள்ளது. அதோடு மற்ற நாடுகளின் பெரியளவிலான எதிர்ப்புக்களும் அன்று இருந்திருக்கவில்லை.

அதனால் திபெத்தைக் கைப்பற்றியது சீனா அன்று.

பாதுகாவலனாக இந்தியா

இங்கு பூட்டான் விசயத்தில் இந்தியா அதன் பாதுகாவலனாக உள்ளது.

இந்தியாவின் லடாக், அருணாச்சல், சிக்கிம் பகுதிகளில் எல்லாம் இந்தியாவை முட்ட வந்தபோது, கொம்பொடிந்து போய்த் திரும்பியது சீனா.

எனவே தற்போதைக்கு இந்தியாவைச் சீண்டாமல் இருக்க முயற்சிக்கும் சீனா.

வர்த்தகம், இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கு போன்றவை அதற்கான காரணங்களில் முக்கியமானவையாகும்.

ஆனாலும் பூட்டான் மீது சீனாவின் பார்வை விழக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

பெரும்பாலும் உலகில் பெரிய போர்கள் நடக்கும்போதோ, அல்லது உலக நாடுகள் மற்ற போர்களில் கவனம் செலுத்தும் நேரத்திலோதான் சீனா அதுபோன்ற குள்ளநரித் தனத்தை செய்யும்.

அமெரிக்கா வேறு ஏதேனும் போரில் கவனம் செலுத்தும்போதும், பெரிய சக்திகளாக உள்ள நாடுகள் வேறு பிரச்சினைகளில் பரபரப்பாக இருக்கும்போதும், சீனா சிறிய நாடுகளை ஆக்கிரமிக்க முயற்சிக்கும்.

பூட்டானை தமது பாகமாகவே கருதுவதால் பூட்டானை கைப்பற்ற வேண்டும் என்பது சீனாவின் ஆசையாக உள்ளது.

அடுத்து, பூட்டானைக் கைப்பற்றினால் இந்தியாவின் சிலிகுரி கோரிடோரை சுலபமாக அனுக முடியும்.

அவ்வாறு பூட்டானைக் கைப்பற்றி விட்டால், மெல்ல மெல்ல சிக்கிமையும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.

இந்தியாவின் சிலிகுரி கோரிடோரை கைப்பற்றி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைத் துண்டிக்க முடியும் என்று கனவு காண்கிறது சீனா.

இப்போது வங்கதேசத்தில் இந்திய விரோத உணர்வு நிலவுகிறது. அங்கு பெருமளவில் ஆயுதக் குழுக்கள் உருவாகி வருகின்றன. தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் உருவாகி வருகிறார்கள்.

அவர்களைப் பயன்படுத்தியும், வங்கதேசம் பாகிஸ்தான் இடையேயான நட்பைப் பயன்படுத்தியும், சிலிகுரி கோரிடோரை முற்றுகையிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்றும் முயற்சியை மேற்கொள்ளக்கூடும் சீனா.

இரு நாடுகளுமே அணு சக்தி நாடுகளாக இருப்பதால், பரஸ்பரம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவாகும்.

ஆனால் அடுத்தவர் நிலத்திற்கு ஆசைப்படும் அட்டூழியக்காரர்கள் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்கலாம்.

அதே நேரம் நமது நிலப்பரப்பை கைப்பற்றும் முயற்சியைத் தடுக்க நாம் அணு ஆயுதமல்ல எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத்தான் செய்யும் இந்தியா என்பதில் சந்தேகமில்லை.

கொள்கைகளும் கோட்பாடுகளும் நாம் யாரையும் தாக்க மாட்டோம் என்பதற்காகத்தான். 

இந்தியா முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாது என்ற கொள்கை சாதாரண ஒரு போருக்கோ, அல்லது நாமாக யாரையும் சென்று தாக்கும் விசயத்திற்கோ பொருத்தமாக இருக்கும்.

ஆனால் ஏதோ கெட்டிக்காரத் தனமாக ஓநாய்கள் போல் கூட்டம் கூடி சதி செய்ய முயன்றால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை இந்தியாவிற்கு உள்ளது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

எனவே அணு ஆயுதம் பயன்படுத்தாத ஒரு போரின் மூலம் இத்தகைய ஒரு நகர்வை மேற்கொள்ள முயற்சிக்கும் சீனா.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அணு ஆயுதம் இல்லாத ஒரு போராக இருந்தாலும், அது என்னதான் கூட்டணி சேர்ந்து வந்தாலும் அவற்றை முறியடிக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது.

அவர்கள் மனதில் ஓடவிடும் படங்களை நாம் வானத்தில் ஓடவிட்டுப் பார்ப்போம்.

அதனால் அவர்கள் என்ன திட்டம் தீட்டுவார்கள், அதற்கு எத்தகைய பதிலடிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் நமது பெருமைக்குரிய தலைவர்கள், அதிகாரிகள், ராணுவம் கூடி திட்டங்களை இப்போதே வகுத்திருப்பார்கள்.

எனவே பூட்டன் மீது நடத்தப்படும் எத்தகைய தாக்குதலையும், இந்தியாவிற்கு எதிரான தாக்குதலாகவே இந்தியா பார்க்கும்.

அதை உறுதிபடுத்துவதாகவே அமைந்தது 2017 டோக்லாம் பிரச்சினை.

எனவே பூட்டானைத் தொட்டுப்பார்க்க சீனா முயற்சித்தால், நிச்சயம் அங்கு இந்தியா சீனாவை எதிர்த்து நிற்கும்.

மக்கள் அமைதியாக வாழும் நாடு, மகிழ்ச்சியாக வாழும் நாடு போன்ற அளவீடுகளில் முன்னிலையில் உள்ளது பூட்டான்தான்.

தங்களுடைய கலாச்சாரத்தை விட்டுவிடாமல், அதில் சிறிய மாற்றம் கூட ஏற்பட்டு விடாமல், பற்றிக்கொண்டு அமைதியாக வாழும் மக்களாக இருக்கிறார்கள் பூட்டான் மக்கள்.

அவ்வாறு வாழ்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் அவர்கள்.

நாம் அறியாத மிக முக்கியமான ஒரு விசயம் உள்ளது.

அதாவது சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் கூட கட்டுப்பாடுகளை வைத்துள்ளது பூட்டான்.

ஓராண்டில் இவ்வளவு சுற்றுலாப் பயணிகளை மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் கூட உள்ளன அங்கு.

நினைத்த மாத்திரத்தில் சுற்றுலாப்பயணிகள் செல்ல முடியாது.

அங்கு அனைவரையும் அனுமதிக்கவும் முடியாது.

அவ்வாறு தங்களது கலாச்சாரத்தை மிகவும் மதித்து அதற்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் ஏராளமான கட்டுப்பாடுகளை வைத்துள்ளார்கள்.

பூட்டானில் பெரியளவில் ராணுவமோ அல்லது வேறு ஆயுதப் படைகளோ எதுவும் இல்லை.

அதனால்தான் 2017ல் சீனா பூட்டானில் நுழைய முயற்சித்தபோது, இந்தியா அதைத் தடுத்து நிறுத்தியது.

அதன் பிறகு இந்த விசயத்தில் இந்தியா மிக வலுவான முன்னேற்பாடுகளைச் செய்து வருவதைக் காண முடிகிறது.

அதனால் ஏதேனும் விதத்தில் பூட்டானைத் தாக்கவோ, அல்லது கைப்பற்றவோ சீனா முயற்சித்தால், அப்போது இந்தியாவுடன் சீனா போர் புரிய வேண்டிய நிலை ஏற்படும்.

அது பூட்டானைப் பற்றி நினைக்கும்போது சீனாவின் முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும்.

இப்போது ஐ.நாவில் பூட்டான் பிரதமர் இந்தியாவைப் பற்றி கூறிய விசயங்கள் அதை தெளிவாக காட்டுவதாக அமைந்தது.

பூட்டானின் மன்னரும், பிரதமரும் எல்லாம் இந்தியாவோடு மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளார்கள், இந்தியா மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளார்கள்.

இதையும் பாருங்கள்: துருக்கி அதிபரின் திடீர் மனமாற்றம்

பல நாடுகளின் தூதரகங்களே கூட இந்தியாவில் இருந்துதான் பூட்டான் தொடர்பான விவகாரங்களைக் கையாள்கின்றன.

அதனால் பூட்டானில் தனியாக அன்நாட்டிற்கென தூதரகங்களை வைத்துக் கொள்வதில்லை.

இந்தியாவில் இருந்து அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

உலகிலிருந்து தனிமைப்பட்டு, உலக ஓட்டத்தில் இருந்து விலகி இருந்து அமைதியாக வாழும் மக்கள் உள்ள ஒரு நாடாகும் பூட்டான்.

அவர்கள் அதிகளவில் இந்தியாவைத்தான் சார்ந்துள்ளார்கள். இந்தியாவோடு உறவாடவே அதிகம் விரும்புகிறார்கள்.

பூட்டான் எல்லையில் ராணுவ பலத்தை அதிகரிக்கும் சீனா

பூட்டான் எல்லைப் பகுதியில் சீனா பெருமளவிலான கட்டமைப்புக்களை உருவாக்கி வருவது செயற்கைக் கோள் படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதனால் சீனா எந்த நேரத்திலும் பூட்டானைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தியா சீனா இடையேயான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறு இந்தியாவுடனான உறவை தற்போதைக்கு சுமுகமாகத் தொடர வேண்டும் என்று கருதுகிறது சீனா.

ஆனால் அதற்கிடையிலும் பூட்டானைக் கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியை சீனா நடத்தும் என்பதில் சந்தேகமில்லை.

காரணம் பூட்டான் மிகச்சிறிய நிலப்பரப்பாக இருப்பதுதான் முக்கியமான காரணம்.

அடுத்து பூட்டானுக்கு பெரிய ராணுவ வலிமை எதுவும் இல்லை.

எனவே அவ்வாறு சீனா முயற்சித்தால், சிக்கிம் எடுத்தது போன்ற ஒரு முடிவை பூட்டானும் எடுத்து இந்தியாவுடன் சேர வாய்ப்புள்ளது.

அல்லாத பட்சத்திலும் பூட்டானைக் காப்பதற்காக இந்தியா சீனாவுடன் போரிடும்.

அவ்வாறு ஒரு போர் ஏற்பட்டால், அந்தப் போரில் இந்தியா பூட்டானைக் காக்கும்போது, 

அதன் பிறகு இந்தியாவின் மதிப்பு உயரும் என்பதில் சந்தேகமில்லை.

அமைதி இன்று ஏற்படும், நாளை ஏற்படும் என்று என்னதான் உலக நாடுகள் பேசினாலும், 

இந்த நூற்றாண்டில் அமைதி ஏற்படுவதாகத் தெரியவில்லை.

இப்போது நடக்கும் போர்கள் மெல்ல மெல்ல பரவினால், மேலும் பல நாடுகள் இந்தப் போர்களில் தலையிடுவார்கள்.

காரணம் பின்னர் அமர்ந்து பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல நாட்டுகள் இந்தப் போரை ஒரு வாய்ப்பாகப் பார்க்கும்.

இஸ்ரேல் இவ்வளவு தீவிரமாக போரை முன்னெடுப்பதற்கு காரணம், மறுபுறம் ரஷ்யா ஒரு போரில் ஈடுபட்டுள்ளது என்பதுதான்.

எனவே வலிமையான நாடுகள், அல்லது தீவிரமான நிலைப்பாடுள்ள நாடுகள் போர்களைச் செய்து அவர்கள் விரும்பிய பகுதிகளைக் கைப்பற்றினால், 

முடிவில் அமர்ந்து பேசி ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும்.

அப்போது அதுவரை போரின் மூலம் ஏற்பட்ட இழப்புக்களை எந்த வகையிலும் சரி செய்ய முடியாது.

கைப்பற்றப்பட்ட பகுதிகளை அவர்களே வைத்துக்கொள்வார்கள் அதுதான் போரின் முடிவு, அமைதி ஒப்பந்தம் என்று சொல்லப்படும்.

உக்ரைன் இழந்த பகுதிகளை இனி ரஷ்யா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

இஸ்ரேல் முன்பு போரின் மூலம் கைப்பற்றிய பகுதிகளை ஓரிரு முறை விட்டுக் கொடுத்துள்ளது.

ஆனால் இம்முறை அதையும் சேர்த்து இஸ்ரேல் கைப்பற்றும், அதே நேரம் இம்முறை கைப்பற்றிய பகுதிகளை விட்டுக்கொடுக்காது என்றே தெரிகிறது.

எனவே சண்டையை நிறுத்துவதுதான் போரின் முடிவு என்று இருக்குமே தவிர கைப்பற்றிய பகுதிகளை விட்டுக்கொடுக்காது எந்த நாடும்.

அதனால் இப்போது நடக்கும் இந்த போர்களை பார்த்து, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல நாடுகள், பல பகுதிகளில் இத்தகைய போர்களை நடத்த வாய்ப்புள்ளது.

அது போன்ற வாய்ப்புக்களை பயன்படுத்தும் தந்திரம் சீனாவின் குருதியில் கலந்த ஒன்றாகும்.

அதனால்தான் சீனாவை சந்தேகத்துடன் பார்க்க வேண்டியுள்ளது.

அவ்வாறு பூட்டானைத் தாக்க சீனா முயன்றால், அது இந்தியா சீனா போராக மாறும் வாய்ப்புள்ளது…..

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment