விமானங்களை ஆகாயத்தில் அசையாமல் நிறுத்தி வைக்க முடியுமா? அப்படி அசைவில்லாமல் விமானம் ஆகாயத்தில் நிற்பதைப் பார்த்துள்ளோமே?
இது பலராலும் கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வியாகும். அதுபற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். பதிவை முழுவதும் பார்த்து விட்டு உங்களது கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.
விமானம் ஆகாயத்தில் ஒரே இடத்தில் நிற்க முடியுமா?
விமானங்களால் ஆகாயத்தில் அசைவில்லாமல் அதாவது நகராமல் ஒரே இடத்தில் நிற்க முடியாது.
ஒரு பயணிகள் விமானத்தை பொறுத்தவரை ஆகாயத்தில் உள்ள நேரத்தில் முன்னோக்கிச் செல்லவோ உயரம் கூட்டவோ அல்லது கீழே இறங்கவோ மட்டுமே முடியும்.
பின்நோக்கி அதாவது (reverse) ரிவர்ஸில் செல்லவோ அல்லது அதன் குறிப்பிட்ட அச்சில் சுற்றவோ முடியாது. முன்னோக்கி செல்லவோ அல்லது கீழ்நோக்கி இறங்கவோதான் செய்ய முடியும்.
எனவே ஒருபோதும் ஆகாயத்தில் விமானங்கள் நிலையாக நிற்பதில்லை. சில நேரங்களில் விமானத்தை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதுபோல நமக்குத் தோன்றினாலும், விமானம் ஒரே இடத்தில் நிற்கவில்லை என்பதுதான் உண்மை.
நமது பார்வைக்கு அப்படித் தோன்றும் விமானமும் பறந்து கொண்டுதான் அதாவது முன்னோக்கிச் சென்று கொண்டுதான் உள்ளது நேரத்தில்.
உதாரணத்திற்கு நாம் சாலை வாகணங்களிலோ அல்லது ரயிலிலோ செல்லும்போது, நாம் அந்த வாகணத்தில் இருக்கும்போது அது நகர்கிறது என்பதை எப்படி அறிகிறோம்?
நமது வாகணம் முன்னோக்கி நகரும்போது அதனைச் சுற்றியுள்ள காட்சி அல்லது பின்புலம் பின்னோக்கி நகர்வதாக தெரியும்.
அப்படி நமது வாகணத்தின் பின்புலத்தில் காட்சி வேறுபாடுகள் அதாவது மாறுபட்ட வண்ணமோ அளவோ தொலைவோ என்று இப்படி ஒன்றுக்கொன்று வேறுபடுத்திப் பார்க்க முடிந்த காட்சி உள்ளதால் அந்த நகர்வை நாம் காண முடிகிறது.
ஆனால் அதுவே விமானத்தின் விசயத்தில் அதன் பின்புலமாக வானம் அமைந்துள்ளது. வானம் தெளிவாக உள்ளபோது அதாவது மேகங்கள் இல்லாமல் இருந்தால் அகாயம் ஒரே நிறமாக வேறுபாடுகள் தெரியாமல் இருக்கும்.
எனவே விமானத்தின் நகர்வை காணும் விதத்திலான காட்சி வேறுபாடுகள் அதன் பின்புலத்தில் இல்லாததால் நாம் இங்கிருந்து பார்க்கும்போது விமானம் முன்னோக்கிப் பறந்து கொண்டிருப்பது தெரிவதில்லை, அல்லது விமானம் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பது போல தோன்றும்.
அதுவே பின்புலத்தில் மேகங்கள் இருந்து காட்சியில் வேறுபாடுகள் இருந்தால் விமானத்தின் நகர்வைக் காண முடியும். எனவே விமானங்கள் ஆகாயத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கவில்லை, நகர்ந்து கொண்டுதான் உள்ளன.
அதேபோல நாம் தரையில் இருந்து பார்க்கும்போது, நாம் நகர்ந்துகொண்டு இருந்தால் அப்போது விமானத்தைப் பார்க்க அது நிலையாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது போல தோன்றும்.
பெரும்பாலான நேரங்களில் அது நகராமல் நிலையாக நிற்பதுபோல தோன்றக் காரணம் இப்படி நாம் நகர்ந்து கொண்டு பார்ப்பதும் ஆகும்.
விமானத்தின் பின்புலத்தில் மேகங்கள் உள்ள நேரத்தில் பார்த்தால் விமானம் நகர்வது தெரியும் காரணம் மேகங்களில் உள்ள காட்சி வேறுபாடு காரணமாக விமானத்தின் அசைவை அது பறந்து போய்க் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
இனி பார்க்கும்போது வானம் தெளிவாக உள்ளபோதும் விமானத்தின் பின்புலத்தில் மேகங்கள் உள்ள நேரத்திலும் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.
ஹெலிகாப்டர்களால் ஒரே இடத்தில் நிற்க முடியும், காரணம் அவை பறந்து உயர்வேதே செங்குத்தாகத்தான். ஹெலிகாப்டர்கள் மட்டுமல்ல செங்குத்தாக பறந்து உயரும் சில போர் விமானங்களும் அப்படி ஓரிடத்தில் நிற்கும் திறன் கொண்டுள்ளன.
மற்றபடி பயணிகள் விமானங்கள் ஒருபோதும் ஆகாயத்தில் ஒரே இடத்தில் நிற்பதில்லை.
இதையும் பாருங்கள்: விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் ஏன் வழங்கப்படுகிறது?
வானில் வட்டமிடுதல்
இங்கு மற்றுமொரு எடுத்துக் கூறவேண்டிய விசயம் என்னவென்றால், பெரும்பாலானவர்கள் ஹோல்டிங்க் பொசிஷன் என்று கேட்டுள்ளோமே விமானம் ஓரிடத்தில் நிற்க முடியாதென்றால் ஹோல்டிங்க் பொசிஷன் என்பதற்கு என்ன அர்த்தம் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள்.
ஹோல்டிங்க் பொசிஷன் என்று கூறும்போது அதன் பொருள் விமானத்தை அதே நிலையில் அசையாமல் நிறுத்துவதல்ல. மாற்றாக சில சூழல்களில் விமானம் தரையிறங்க முடியாத நிலையில், அது விமான நிலையம் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நேரம், ஓடுபாதைகள் அதிகப் பயண்பாட்டில் இருப்பது போன்ற நேரங்களில்,
- ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் அதிக பனிப்பொழிவு காரணமாக ஓடுபாதை பனியால் மூடப்படும்போது அதை அகற்றும் பணிகள் நடக்கும் அதுபோன்ற நேரம்.
- குறிப்பிட்ட விமானம் தரையிறங்க வேண்டிய நேரத்தில் எதிர்பாராமல் வேரொறு விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டி வருவது.
- காலநிலை சாதகமற்ற நிலை.
இதுபோல இன்னும் பல சூழ்நிலைகளில் விமானங்களுக்கு ஹோல்ட் பொசிஷன் கட்டளை ஏ.டி.சியில் இருந்து கொடுக்கப்படும். அப்போது விமானத்தின் கேப்டன் பயணிகளுக்கு அதை அறிவிக்கவும் செய்வார்.
அதன் பொருள் ஒரே புள்ளியில் விமானத்தை நிறுத்துவதல்ல, மாறாக ஏ.டி.சி.யின் வழிகாட்டுதல்படி வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
அதுதான் ஹோல்டிங்க் பொசிஷன் என்று கூறப்படுகிறது.
அப்படிப் பறப்பதும் வட்டமிட்டுப் பறக்கிறது என்றாலும் பெரும்பாலும் அது ஒரு நீள் வட்டப் பாதையாக பறக்கும், என்பதுதான் உண்மை.
அப்படி வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கும் நேரத்திலும் விமானத்தின் கேப்டன் மற்றும் ஏ.டி.சி இடையேயான தொடர்பு இருந்துகொண்டே இருக்கும்.
நிலைமை சீரானதும் ஏ.டி.சி விமானம் தரை இறங்க அனுமதி யளிக்கும்.
எனவே அடுத்த முறை விமானம் உயரத்தில் அசையாமல் நிற்பதுபோல் காணும்போது, அதன் பின்னிலுள்ள காரணத்தை நினைவுபடுத்திப் பாருங்கள்.
விமானத்தைப் பார்க்கும்போது மட்டுமல்ல வாகனங்களில் பயணிக்கும்போது, அங்கு பின்புலக் காட்சிகள் பின்நோக்கி நகரும்போது, இந்த காட்சி வேறுபாடு இல்லாத காரணத்தால்தான் விமானம் ஓரே இடத்தில் நிற்பதுபோல் தோன்றுகிறது என்பதையும் நினைப்பீர்கள் அல்லவா!
இவற்றையும் பாருங்கள் :