---Advertisement---

ரஷ்யா பாகிஸ்தான் உறவு இந்தியாவிற்கு பாதகமா? | Strengthening relationship

ரஷ்யா பாகிஸ்தான் உறவு
---Advertisement---

ரஷ்யா பாகிஸ்தான் உறவு சமீப காலத்தில் மேம்பட்டு வருவதைக் காண முடிகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்பது பாகிஸ்தானின் நீண்ட கால ஆசையாக உள்ளது.

அதை ரஷ்யா இப்போது ஓரளவு வரை ஆதரிக்கிறது.

ரஷ்யாவின் துணைப் பிரதமர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வந்து, அங்கு உயர் மட்ட தலைவர்களைச் சந்தித்து பேசியிருந்தார். 

அந்த செய்தியைக் கண்டவுடன் நம்மில் பலருக்கு, அதாவது இந்திய மக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது.

அதாவது ரஷ்யா பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கிறதே, பாகிஸ்தானை பிரிக்ஸில் சேர்க்கக் கூடாது, அதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளக் கூடாது, இந்தியாவின் சிறந்த நட்பு நாடு என்றூ நாம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யா இப்படி பாகிஸ்தானுடன் உறவாடுகிறதே என்ற விதத்திலான பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

அத்தகைய கமண்டுகளைப் பார்க்க முடிகிறது.

பாகிஸ்தானுடன் ரஷ்யா உறவாடுவது, ஏதோ இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலான விசயம் எனப்து போன்ற கருத்துக்களையும் பார்க்க முடிந்தது.

ஆனால், உண்மையில் நாம் அவ்வாறுதான் அந்த விசயத்தை அனுக வேண்டுமா?

பாகிஸ்தான் ரஷ்யா இடையே நிலவும் உறவினால் இந்தியாவிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

புவிசார் அரசியலில் நாடுகளுக்கு இடையேயான உறவும் பகையும் எல்லாம் நம்மால் கனிக்க முடிந்ததற்கும் அப்பார்ப்பட்டதாக இருக்கும்.

சொல்லப்போனால், இவ்வாறு ரஷ்யா பாகிஸ்தான் உடன் உறவாடுவதற்கு முன்பாக இந்தியாவிற்கு அந்த தகவல் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்தியா ரஷ்யா இடையே அது குறித்து பேச்சுவார்த்தைகள் நட்டந்திருக்க வாய்ப்புள்ளது.

ரஷ்யா ஏதேனும் விதத்தில் பாகிஸ்தானை பிரிக்ஸில் சேர்க்கலாம் என்று சொல்லியுள்ளது என்றால், அது நிச்சயம் இந்தியாவின் கருத்தையும் கேட்ட பின்னர்தான் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு, இந்தியாவும் நேரடியாக முயற்சி செய்து உருவான ஒரு அமைப்பாகும்.

அதாவது பிரிக்ஸின் முதன்மைத் தூண்களாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

மேற்கத்திய நாடுகளின் ஜி-7 போன்று, இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடக்கத்தில் நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியதாகும்.

இந்தக் கூட்டமைப்பு உருவானபோது, இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் இருந்தன.

பின்னர் அதில் தென் ஆஃப்ரிக்கா சேர்ந்தது.

அதைத் தொடர்ந்து BRICS ஆக மாறியது.

தெரியாதவர்களுக்காகச் சொல்கிறோம், 

BRICS என்ற பெயரே அதன் அங்கங்களாக உள்ள ஐந்து நாடுகளின் பெயரின் முதல் எழுத்துக்களைக் கொண்டதாகும்.

பிரிக்ஸின் முதல் எழுத்தான பி பிரேசிலையும், ஆர் ரஷ்யாவையும், ஐ இந்தியாவையும், சி சீனாவையும், எஸ் தென் ஆஃப்ரிக்காவையும் குறிப்பதாகும்.

அந்தளவு நமக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கூட்டமைப்பாகும் பிரிக்ஸ்.

அப்படி இருக்க இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தால், பாகிஸ்தானை ஒருபோதும் சேர்க்க முடியாது.

ஆனால் பாகிஸ்தான் என்றல்ல விரும்பும் மற்ற நாடுகளையும் இந்த கூட்டணியில் சேர்த்துக்கொண்டு இந்தக் கூட்டமைப்பை விரிவு படுத்த வேண்டும் எனப்து நமது தனிப்பட்ட கருத்தாகும்.

அவ்வாறு பிரிக்ஸை ஒரு வலிமையான அமைப்பாக மாற்றினால், உலகளவில் மேற்கத்திய நாடுகளுக்குள்ள செல்வாக்கைக் குறைக்க முடியும்.

அது மட்டுமல்ல பிரிக்ஸைப் பயன்படுத்தி ஏராளமான விசயங்களை செய்ய முடியும்.

எத்தனையோ நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

காரணம் எத்தனை நாடுகள் சேர்ந்தாலும், அந்த அமைப்பை உருவாக்கிய ஐந்து நாடுகளுக்கும் எப்போதுமே அதிக செல்வாக்கும், முக்கியத்துவமும் இருக்கும்.

எனவே பாகிஸ்தான் உட்பட மற்ற நாடுகள் இந்தக் கூட்டமைப்பிற்குள் வர விரும்பினால் அது நல்ல விசயம்தான்.

இதையும் பாருங்கள்: இந்தியா பூட்டான் உறவு! சீனாவின் ஐந்து விரல் கொள்கை!!

ரஷ்யா பாகிஸ்தான் உறவு மேம்படக் காரணம்

சமீப காலத்தில் ரஷ்யாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகமும் அதிகரித்துள்ளது.

இந்தியா ரஷ்யா இடையேயான வர்த்தகம் அறுபத்து ஐந்து பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளது.

அதே நேரம் இப்போதும் ரஷ்யா பாகிஸ்தான் இடையே ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

எனவே ரஷ்யா ஒருபோதும் இந்தியாவிற்கு எதிராகச் செல்லாது, அதாவது பாகிஸ்தானுடன் உறவாடாது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

அதே நேரம் இந்தியாவின் எதிரிகளை எல்லாம் ரஷ்யாவும் எதிரியாகப் பார்க்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும்.

காரணம் நாம் அதுபோல் இல்லை, ரஷ்யாவின் எதிரிகளை எல்லாம் நமது எதிரிகளாகப் பார்க்கவில்லை.

உதாரணமாகப் பார்த்தால், ரஷ்யாவின் மிகப்பெரிய எதிரி அமெரிக்காதான், எதிரிகள் என்று பார்த்தால் அமெரிக்காவும் அமெரிக்கா தலைமை வகிக்கும் மேற்கத்திய நாடுகளும்தான்.

ஆனால் இந்தியா அந்த நாடுகள் அனைத்துடனும் ஒத்துழைக்கிறது, சிறந்த உறவைக் கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்தியப் பிரதமர் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

ரஷ்யா நமது சிறந்த நண்பன் என்பதால் ரஷ்யா உக்ரைன் போரில் நாம் ரஷ்யாவிற்கு ஆதரவாக ஒருதரப்பில் நிற்கவில்லை.

நடுநிலையான ஒரு நிலைப்பாட்டைட்த்தான் இந்தியா எடுத்துள்ளது.

இந்தியப் பிரதமர் உக்ரைன் அதிபரையும் சந்தித்துள்ளார்.

எனவே இந்தியா சுதந்திரமான ஒரு வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்க முடியும் எனும்போது, ரஷ்யாவிற்கும் அந்த உரிமை உள்ளது.

பனிப்போர் காலத்தில் அமெரிக்கா பக்கம் சார்ந்திருந்த ஒரு நாடு பாகிஸ்தான் என்பது சரிதான்.

சோவியத் யூனியனும் இந்தியாவும்தான் அன்று நெருக்கமாக இருந்தன.

அதனால் இந்தியாவின் எதிரி நாடு என்ற நிலையில், சோவியத் யூனியன் பாகிஸ்தானை எப்போதும் தள்ளி வைத்திருந்தது.

ஆனால் இன்று சோவியத் யூனியனும் இல்லை, பழைய பனிப்போரும் இல்லை.

1991 ற்குப் பிறகு ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் ரஷ்யா இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவமளித்துதான் பாகிஸ்தானை எப்போதும் சற்று தள்ளியே வைத்திருந்தது.

இன்றைய சூழலில் பிரிக்ஸை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று ரஷ்யா விரும்புகிறது, இந்தியாவும் விரும்புகிறது, சீனாவும் அதே எண்ணத்தைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவும் அமெரிக்க அணியும் அவர்கள் கட்டமைத்தபடி உலகம் நகர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.

அப்படியாகும்போது அதை எதிர்த்து மாற்று வழிகளைத் தேடுவது இயல்பான விசயம்தான்.

முன்பு பாகிஸ்தானில் அமெரிக்கா மிகுந்த செல்வாக்கைக் கொண்டிருந்தது.

ஆனால் சீனா ஒரு வலிமையான நாடாக வளர்ச்சியடைந்தபோது, பாகிஸ்தான் சீனாவை அதிகம் சார்ந்திருக்கத் தொடங்கியது.

பாகிஸ்தானில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தபோது, அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து போயுள்ளது.

எனவே பாகிஸ்தான் முழுவதுமாக சீனாவின் காலடியில் கிடப்பதற்கு பதிலாக, அங்கு கூடுதலான நாடுகள் செல்வாக்கு செலுத்துவது இந்தியாவிற்கு நல்ல விசயம்தான்.

பாகிஸ்தானில் ரஷ்யாவின் செல்வாக்கு உருவக வேண்டுமானால், ரஷ்யா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட வேண்டும்.

அப்படியானால் நமது பல நோக்கங்களை அங்கு நிறைவேற்ற முடியும்.

இந்தியா பாகிஸ்தான் இடையே மிக மோசமான உறவு நிலவுகிறது என்பது தெரிந்த விசயம்தான்.

இந்தியா சீனா பிரச்சினை மிகவும் மோசமான நிலைக்குச் செல்லாமல் இருப்பதில் ரஷ்யாவிற்கு மிக முக்கியமான பங்களிப்புள்ளது.

காரணம் இந்தியா சீனா இடையே ஒரு போர் நடப்பதை விரும்பவில்லை ரஷ்யா.

அமெரிக்கா தலைமியிலான நாடுகள் எதிர்காலத்தில் இந்தியா வலிமையான நாடாக வளர்ச்சியடையும்போது, ஒருவேளை இந்தியாவை தகர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும்.

அதற்காக இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு போரை உருவாக்கவும் முயற்சிக்கலாம்.

அவ்வாறு போர்கள் நடந்தால் அது நாம் நீண்டகாலம் கடினமாக முயற்சி செய்து கட்டமைத்துள்ள பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

பாகிஸ்தானை தோற்கடித்து விடுவோம், ஒருவேளை பாகிஸ்தான் என்ற நாடு இல்லாமல் கூட போகலாம்.

அதே நேரம் நமது நாட்டிற்கும் பின்னடைவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

அத்தகைய சூழல்களில் ரஷ்யாவைப் போன்ற ஒரு நாட்டிற்கு பாகிஸ்தானில் செல்வாக்கு இருப்பது நல்லதாகும்.

அது மட்டுமல்ல பாகிஸ்தான் உட்படவுள்ள நாடுகள் பிரிக்ஸில் சேர்ந்து, அந்தக் கூட்டமைப்பு வலுப்பெற்றால், மேற்கத்திய நாடுகளின் நகர்வுகளுக்கு அதன் மூலம் தீர்வு காண முடியும்.

பாகிஸ்தான் மட்டுமல்ல, துருக்கி உட்படவுள்ள பல நாடுகள் பிரிக்ஸில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

நாமும் சேர்ந்து உருவாக்கிய ஒரு அமைப்பு இந்த பிரிக்ஸ் என்பதால், அதில் சேர பல நாடுகள் விரும்புகின்றன என்பது பெருமைக்குரிய விசயம்தான். அதை நாம் ஆதரிப்பது நல்லதுதான்.

ஐ.நாவில் இப்போதும் அந்த ஐந்து நாடுகள்தான் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

அதுபோல் பிரிக்ஸ் என்ற கூட்டமைப்பை உருவாக்கிய ஐந்து நாடுகள்தான் அதில் முக்கியமான நாடுகளாக உள்ளன.

எனவே இதில் சேர்வதற்கு அதிகமான நாடுகள் விருப்பம் தெரிவித்து முன்வரும்போது, அதை வரவேற்று கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

அவ்வாறு ஒரு பல்துருவ உலக ஒழுங்கை உருவாக்குவதில் பிரிக்ஸ் மிகப்பெரிய பங்காற்ற முடியும்.

சமீப காலத்தில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரிடம் அதிகளவில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் ஒன்று பிரிக்ஸின் விரிவாக்கம் குறித்ததாகும்.

மேற்கத்திய நாடுகள் பிரிக்ஸைக் கண்டு பயப்படத் தொடங்கியுள்ளன என்பதன் அறிகுறியாகும் அது.

இந்தக் கூட்டமைப்பை விரிவாக்க வேண்டுமானால், அதிலுள்ள தற்போதைய உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது அனைத்து நாடுகளின் ஒப்புதலும் இருக்க வேண்டும்.

அதாவது உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு மறுப்புத் தெரிவித்தால், வேறு நாடுகளை இதில் சேர்க்க முடியாது என்பது தற்போதைய வழக்கமாக இருந்து வருகிறது.

எனவே இந்தியா எதிர்த்தால் பாகிஸ்தானால் பிரிக்ஸில் சேர முடியாது.

இதுவரை பிரிக்ஸில் இணைந்துள்ள நாடுகளும் இந்தியாவின் ஒப்புதலோடுதான் இணைந்துள்ளன. 

இனி இணையும் நாடுகளும் இந்தியாவின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இணைய முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியா தொடங்கிய ஒரு கூட்டமைப்பில் இணைவது ஒரு நல்ல விசயம் என்றுதான் கருதுகிறோம்.

நாம் எதிர்த்து விட்டு, காலப்போக்கில் வேறு அழுத்தங்களின் மூலம் ஒப்புக்கொண்டால் அது அவமானமாக்கும்.

எனவே கூடுதலான நாடுகள் வரட்டும் என்ற நிலைப்பாடுதான் நல்லதாக இருக்குமென்று தோன்றுகிறது.

பாகிஸ்தான் பிரிக்ஸில் சேர்ந்தால், அதனால் இந்தியாவிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அதன் மூலம் இந்தியாவின் வலிமை அதிகரிக்கவே செய்யும்.

காரணம் பத்து நாடுகள் உள்ள அமைப்பில் ஒரு முக்கிய சக்தியாக இந்தியா இருக்கிறது என்ற நிலையில் இருந்து, இருபது நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக உள்ளதென்பது வலிமையை அதிகரிக்கவே செய்யும்.

இனி எத்தனை நாடுகள் பிரிக்ஸில் சேர்ந்தாலும், அதை தொடங்கிய ஐந்து நாடுகளும்தான் அதன் தூண்களாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை கூடுதலாக சேர்ந்துள்ள அர்ஜெண்டினா, ஈஜிப்ட், எத்தியோப்பியா, இரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் எல்லாம் இந்தியாவுடன் நல்ல நட்பைக் கொண்டுள்ள நாடுகளாகும்.

 எனவே இதுவரை இதில் இணைந்துள்ள எந்த நாடும் இந்தியாவிற்கு பிரச்சினை இல்லாத நாடுகள்தான்.

இனி வேறு நாடுகள் வந்தாலும், அதில் நமது எதிரியாக உள்ள பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருந்தாலும்,

அந்தக் கூட்டமைப்பை உருவாக்கிய, மற்றும் தாங்கி நிற்கும் ஐந்து தூண்களில் ஒன்று என்ற வகையில், இந்தியாவிற்கு முக்கியத்துவம் இருக்கும்.

அந்த ஐந்து நாடுகளிலுமே, தொடக்கத்தில் நான்கு நாடுகள்தான் இருந்தன, பின்னர்தான் தென் ஆஃப்ரிகா சேர்ந்தது.

அந்த நான்கு நாடுகளில் ஒன்று என்ற வகையில் இந்தியாவிற்கு பிரிக்ஸில் எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் இருக்கும்.

ஐ.நாவில் நிரந்தர உறுப்பு நாடுகளுக்குள்ள செல்வாக்கைப் போல் பிரிக்ஸில் இந்த ஐந்து நாடுகளுக்கும் எப்போதும் முக்கியத்துவமும், செல்வாக்கும் இருக்கும்.

தற்போதைய வழக்கத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு பிரிக்ஸிற்கு தலைமை வகிக்கிறது.

இந்த ஐந்து நாடுகள்தான் சுழற்சி முறையில் அந்த பொறுப்பை வகிக்கின்றன.

எனவே ரஷ்யா பாகிஸ்தான் இடையே உறவு மேம்படுவதை சந்தேகத்துடன் பார்ப்பதற்கு பதிலாக, அது இந்தியாவிற்கும் நன்மையளிக்கும் ஒன்றாக அமையும் என்று பார்க்கலாம்.

யாருக்குத் தெரியும் நாங்கள் உக்ரைனுக்கு சென்று வருகிறோம், நீங்கள் பாகிஸ்தானுக்குச் சென்று வாருங்கள் என்ற ஏதேனும் பேச்சுக்கள் உள்ளனவா என்று.

ரஷ்யா சீனா இடையே மிக நெருக்கமான உறவு நிலவுவதை நாமறிவோம்.

இந்தியாவிற்கு வழங்கியுள்ளதை விட, அதிகமாக சீனாவிற்கு வழங்கியுள்ளது ரஷ்யா.

ஆனால் அது இந்தியா ரஷ்யா உறவைப் பாதிக்கவில்லை.

இந்தியாவை விட்டுக்கொடுக்கவில்லை ரஷ்யா, எக்காலமும் இந்தியாவிற்கு தேவையான விசயங்களில் கூடவே நின்றுள்ளது.

ரஷ்யா ஏற்கனவே பல தடைகளை எதிர்கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் பல நகர்வுகள் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் என்று கருதுகிறது.

அதனால் பாகிஸ்தானுடன் ஒத்துழைக்க வேண்டியது ரஷ்யாவின் தேவை என்ற விதத்தில்தான் நாம் பார்க்க வேண்டும்.

அந்த உறவினால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவை நம்புவதுபோல் ஒருக்காலமும் பாகிஸ்தானை ரஷ்யா நம்பப்போவதுமில்லை.

புவிசார் அரசியலில் இதுபோன்ற உறவுகள் சில நேரங்களில் அவசியமாக மாறும்.

அதை சரியாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது ரஷ்யா என்பதுதான் உண்மையே தவிர…

இந்த விசயத்தை இந்தியாவிற்கான அச்சுறுத்தலாகவோ, அல்லது இந்தியா ரஷ்யா உறவில் விரிசலாகவோ பார்க்க வேண்டிய அவசியமில்லை.

இந்தியா ரஷ்யா உறவு எப்போதும் மிக வலுவாகவே தொடர்கிறது…..

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment