---Advertisement---

பறக்கும் விமானத்தில் வை.ஃபை வசதி | How airplanes offer Wi-Fi

விமானத்தில் வை.ஃபை வசதி எவ்வ்வாறு வழங்கப்படுகிறது
---Advertisement---

வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வை.ஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா?

விமான நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு சேவைகளை வழங்குவது வழக்கம்.

அதில் மிகுந்த வரவேற்பைப் பெறக்கூடிய ஒன்று என்றே குறிப்பிடலாம் விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பறந்துகொண்டிருக்கும்போது பயணிகளுக்கு இணைய வசதி அளிப்பது. அதாவது வை.ஃபை வசதி வழங்குவது.

வான்வெளியில் பறந்து கொண்டிருக்கும் விமானத்திற்கு எந்த வித கேபிள் இணைப்பும் இல்லாமல் எவ்வாரு இணையம் பெறப்படுகிறது?

இன்றைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் இணைய பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

2021 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 750 மில்லியன் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், அதே 2026 ஆம் ஆண்டில் 1 பில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்தியாவில் இருப்பார்கள் எனவும் Deloitte ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களில் இணையம் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இணைய சேவை இல்லாத ஸ்மார்ட் ஃபோன்கள் இல்லை என்றே கூறலாம். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே சமயத்தில் இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இணையம் பயன்படுத்துவதாக statista-வின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் இணையத்தின் வளர்ச்சி என்பது அளப்பறியதாக இன்றைய காலக்கட்டத்தில் உள்ளது.

அப்படிப்பட்ட இணைய சேவையை, 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் கம்பிகள் மூலம் பெறுவது என்பது சாத்தியமற்ற ஒன்று. எனவே விமானத்தில் இணைய சேவை வழங்குவதற்கான ஒரே வழி வை.ஃபை தான். Wireless Fidelity என்ற வார்த்தையின் சுருக்கமே Wi-fi என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.

பறக்கும் விமானத்தில் வை.ஃபை வசதி எவ்வாறு சாத்தியம்?

விமான எரிபொருள்

இந்த வை.ஃபை சேவையில் கம்பிகளுக்கு பதிலாக ரேடியோ அலைகள் மூலம் இணைய சேவை வழங்கப்படுகிறது. ஆனால் பூமியில் இருந்து 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை எப்படி கிடைக்கிறது என்று சிந்தித்ததுண்டா?

அதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.

பல விமான நிறுவனங்களும் 36,000 அடி உயரத்தில் பறக்கும் தங்கள் விமானத்தில் வை.ஃபை சேவையை வழங்குவதற்கு இரண்டு வழிகளைக் கையாள்கின்றன. அதில் ஒன்று ATG – Air to Ground தொழில்நுட்பமாகும்.

விமானங்கள் தரையில் நிறுவப்பட்டிருக்கும் செல்போன் டவர்கள் மூலம் இணையத் தொடர்பை பெறுகிறது. செல்போன் டவர்கள் மூலம் சிக்னலை பெறுவதற்கு விமானத்தில் பிரத்யேக கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது.

விமானத்தின் கீழ்புற மையப் பகுதியில் ரிசீவர் ஆண்டனா என்ற கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. ரிசவர் ஆண்டனா செல்போன் டவரில் இருந்து பெறும் சிக்னலை விமானத்துக்குள் இருக்கும் ரவுட்டருக்கு அனுப்பப்படுகிறது. இந்த ரவுட்டர் மூலமாக வைஃபை சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.

வான்வழியில் விமானம் பயணிக்கும்போது அந்தந்த இடத்துக்கு அருகில் இருக்கும் செல்போன் டவர்களை தொடர்பு கொண்டு இணைய சிக்னலை பெறுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆண்டனா நமது செல்போனை போலவே செயல்பட்டு இணையத்தை வழங்குகிறது.

சரி, தரைப்பகுதிக்கு மேலே பறக்கும் போது இந்தமுறையில் இணைய சேவை வழங்கப்படுகிறது. கடற்பரப்பிற்கு மேலே விமானம் பயணிக்கும் போது எப்படி சிக்னல் கிடைக்கும் என்ற கேள்வி வருகிறதா?

விமானம் பறக்கும் போது இரண்டு முறைகளில் பயணிகளுக்கு இணைய சேவை வழங்கப்படுகிறது என்று முன்னதாகவே பார்த்தோம்,
இந்த இடத்தில் தான் இரண்டாவது முறை செயல்படுத்தப்படுகிறது.

இதற்கென விமானத்தில் மேற்புறத்தில் ஒரு ரிசிவர் ஆண்டனா பொருத்தப்பட்டிருக்கிறது. கடற்பரப்பின் மேலே விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது விமானத்தின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ரிசவர் ஆண்டனா செயற்கைக்கோளில் இருந்து சிக்னலை பெறுகிறது.

கடற்பரப்பின் மேலே விமானம் பயணிக்கும் போது சேட்டிலைட் Wi-Fi இணைப்பு செயல்படுத்தப்படுகிறது. தரையில் இருக்கும் டிரான்ஸ்மிட்டர் டவர்கள் மூலமாக ரேடியோ சிக்னல்கள் செயற்கைகோளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த சிக்னலை செயற்கைக்கோள் விமானத்தின் மேற்புறத்தில் இருக்கும் ரிசவர் ஆண்டனாவுக்கு அனுப்புகிறது. ரிசவர் ஆண்டனா செயற்கைகோள் மூலம் சிக்னலை பெற்று அதை விமானத்துக்குள் இருக்கும் ரவுட்டருக்கு அனுப்புகிறது.

இதன்மூலமாக கடற்பரப்பின் மேலே பயணிக்கும் போதும் பயணிகளுக்கு தடையின்றி வை.ஃபை சேவை வழங்கப்படுகிறது. விமானத்தில் வை.ஃபை சேவை வழங்கும் விமான நிறுவனங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

அதேபோல் பெரும்பாலான விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்கு விமானத்தில் வை.ஃபை சேவையை இலவசமாக வழங்குகின்றன. சில விமான நிறுவனங்கள் வை.ஃபை பயன்படுத்தும் நேரத்துக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்கின்றன என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இவற்றையும் பாருங்களேன்!

விமானம் ஆகாயத்தில் ஒரே இடத்தில் நிற்க முடியுமா? | 1 strong reason விமானத்தின் வெளிப்புற லைட்டுகள் என்ன சொல்கின்றன? | Strong Reasons விமான எரிபொருள் பெயர், விலை, மைலேஜ் என்ன? | Amazing Reality

October 3, 2024

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment