---Advertisement---

ஷிங்குலா சுரங்கப்பாதை: World’s Highest Tunnel

ஷிங்குலா சுரங்கப்பாதை
---Advertisement---

26 ஜூலை 2024, கார்கில் வெற்றியின்  25 ஆம் ஆண்டு தினம், கார்கில் போரின் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய போது மற்றுமொரு முக்கியமான நிகழ்ச்சியும் நடந்தது.

திராசில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லடாக்கின் ஷிங்குலா சுரங்கப்பாதை நிர்மானப் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

பிரதமர் தொடங்கி வைத்த அந்த திட்டத்தைப் பற்றி மிகுந்த முக்கியத்துவத்தோடு தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்படுவதில் அப்படி என்ன அதிசயம் உள்ளதென்று கேட்பவர்களும் இருக்கக் கூடும்.

ஆனால் ஷிங்குலா சுரங்கப்பாதை ஒரு சாதாரண சுரங்கப்பாதை அல்ல என்பதை உறுதியாகச் சொல்ல முடிந்ததாகும்.

தனிச்சிறப்புக்களையும், சிக்கல்களையும், கொண்டுள்ள அந்த சுரங்கப்பாதையின் முக்கியத்துவம் மிகப்பெரியதாகும்.

இந்த பாலத்தின் தனித்தன்மைகள், இந்தியாவின் வடக்குப் பகுதியில் இந்த சுரங்கப்பாதை கொண்டுவரவுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் உட்பட, 

கட்டுமானப் பணிகள் முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, உலக வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள இந்த சுரங்கப்பாதையைப் பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

வடக்கில் இந்தியா சீனா எல்லைப் பகுதியில் அடிப்படை வசதிகளே மேம்படுத்துவதன் பாகமாக, இந்தியா கட்டமைக்கும் மிகவும் பெரிய சுரங்கப்பாதையாகும் ஷிங்குலா சுரங்கப்பாதை.

ஹிமாச்சல் பிரேதேஷின் லஹுல் பள்ளத்தாக்கை, லடாக்கின் Zanskar பள்ளத்தாக்குடன் இணைக்கும் இந்த ஷிங்குலா சுரங்கப்பாதை கட்டமைப்பு முழுமையடையும்போது, உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதை என்ற பெருமையைப் பெறும் அது.

ஹிமாச்சல் பிரதேசின் மனாலியை லடாக்கின் லே உடன் இணைக்கும் Nimmu Padam Darcha சாலையில் அமைக்கப்படும் ஷிங்குலா சுரங்கம்,  கடல் மட்டத்தில் இருந்து 15800 அடி உயரத்தில் அமையவுள்ளது.

ஷிங்குலா சுரங்கப்பாதை

4.1 கிலோமீட்டர் நீளமுள்ள ஷிங்குலா டனல் ஒரு இரட்டை சுரங்கப்பாதையாக கட்டமைக்கப்படுகிறது.

ஷிங்குலா சுரங்கப்பாதை வரலாற்றில் இடம்பெறும்

இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்காக திறக்கப்படும்போது, தற்போது உலகில் மிகவும் உயரத்தில் அமைந்துள்ள சீனாவின் மிலா சுரங்கப்பாதையை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடிக்கும்.

சீனா திபெத் பகுதியில் அமைத்துள்ள மிலா சுரங்கம், கடல் மட்டத்தில் இருந்து 15590 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அதாவது இந்தியா கட்டமைக்கும் ஷிங்குலா சுரங்கப்பாதையை விட 210 அடி குறைவான உயரத்தில் அமைந்துள்ளது சீனாவின் இந்த மிலா சுரங்கப்பாதை.

பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்காக இந்த மிகவும் சிக்கலான, அதே நேரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஷிங்குலா சுரங்கப்பாதையின் கட்டுமானத்தின் பொறுப்பேற்று,  பார்டர் ரோட் ஆர்கனைசேஷன் (BRO) நடத்தி வருகிறது.

2023 ஃபிப்ருவரி 15ல் கட்டுமான அனுமதி கிடைத்த ஷிங்குலா சுரங்கத்தின் பணிகள் 2024 ஜூலை மாதத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

16081 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையை, இரண்டு ஆண்டுகளில் கட்டமைத்து முடிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா சீனா எல்லைப் பகுதியில் இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், 

பார்டர் ரோட் ஆர்கனைசேஷன் 2022ல் தொடங்கிய ப்ரொஜெக்ட் யோஜக் திட்டத்தின் பாகமாகத்தான் இந்த ஷிங்குலா சுரங்கமும் கட்டமைக்கபடுகிறது.

இதே திட்டத்தின் பாகமாக உருவாக்கப்பட்ட அடல் டனல் உலகிலேயே மிகவும் நீளமான சுரங்கப்பாதையாகும்.

ஏராளமான பாதுகாப்பு அமைப்புக்களை உட்படுத்தி கட்டமைக்கபடுகிறது இந்த ஷிங்குலா சுரங்கப்பாதை.

ஹிமாச்சல் பிரதேஷ் லடாக் இடையே 16703 அடி உயரத்தில் அமைந்துள்ள ஷிங்குலா பாதையில்  உருவாக்கப்படும் இந்த சுரங்கப்பாதை, 

எந்த விதமான இயற்கை சீற்றங்களையும், மனித காரண ஆபத்துக்களையும் கையாள முடிந்த, பாதுகாப்பு அமைப்புக்களைக் கொண்டிருக்கும்.

அவற்றில் ஒன்றாகும் அங்குள்ள க்ரோஸ் பாசேஜ் அதாவது குறுக்கு வழி அமைப்பு. 

இணையாகச் செல்லும் இரண்டு சுரங்கங்களைக் கொண்ட இரட்டை சுரங்கப்பாதை இது என்பதை ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

அவ்வாறு இணையாகச் செல்லும் இரண்டு சுரங்கப்பாதைகளையும் சரியான இடைவெளிகளில் பரஸ்பரம் இணைக்கும் வழித்தடங்கள் குறுக்கு வழிகள் என்று குறிப்பிடப்படுகின்றன.

இந்த ஷிங்குலா இரட்டை சுரங்கப்பாதையில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவிலும் க்ரோஸ் பாசேஜ் அமைப்பு இருக்கும்.

சுரங்கங்களில் ஏற்பட வாய்ப்புள்ள விபத்துக்களின் தீவிரத்தைக் குறைப்பதற்காக இத்தகைய ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு சுரங்கத்தின் அன்றாட நடைமுறைகள் சிறப்புக் குழுவின் மேற்பார்வையில் கட்டுப்படுத்தப்படும்.

சுரங்கட்த்தின் தற்சமய தகவல் சேகரிப்பிற்கான அமைப்பு, காற்று பயணிப்பதற்கான மெக்கானிக்கல் வெண்டிலேசன்கள், அதை நவீன தீயணைப்பு அமைப்புக்கள்,  தகவல் தொடர்பு அமைப்புக்கள் போன்றவையும் சுரங்கத்தில் அமைக்கப்படும்.

இந்த சுரங்கப்பாதையின் முக்கியமான நோக்கம் லடாக் பகுதியுடனான இணைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதுதான்.

இந்தியா சீனா இடையே சர்ச்சிக்குரிய பகுதிகள் எல்லாம் லடாக் பகுதியில்தான் அமைந்துள்ளன.

பதிற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் முட்டிக்கொண்ட பாங்காங்க் சோ, டோக்லாம்  போன்ற பிரச்சினைக்குரிய பகுதிகள் எலலாம் லடாக்கில்தான் உள்ளன.

சீனாவுடனான ஒரு போர் உருவானால் அதன் களமாக இருக்க வாய்ப்புள்ள இரண்டு முக்கியமான ஹாட்ஸ்பாட்டுகளில் ஒன்று லடாக்காகும்.

அதனால் முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதியில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது இந்தியாவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

லடாக்கின் லேயை அடைவதற்க்கு தற்போது மூன்று வழிகள் உள்ளன.

சோசிலா பாஸ் வழியாகச் செல்லும் , சோசிலா, கார்கில், லே NH 1B தேசிய நெடுஞ்சாலை,

ஹிமாச்சல் பிரதேசத்தின் மனாலியை லேயுடன் இணைக்கும் நிம்மு பாதம் டார்சா ரோட், மனாலியை லேயுடன் இணைத்து ரோத்தாங்க் பாசைக் கடந்து செல்லும் என்.ஹெச் 3 ஆகியவையாகும்.

இவற்றுள் அடல் சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் என்.ஹெச் 3 மட்டுமே 365 நாட்களும் பயணம் செய்ய முடிந்ததாகும்.

ஆனால் தொலைவு கூடியதும், நிறைய சுரங்கங்கள் அமைந்துள்ளதுமாகும் அந்தப் பாதை.

ஸ்ரீ நகர் என்.ஹெச் 1 பி தேசிய நெடுஞ்சாலை கடுமையான பனிப்பொழிவு காரணமாக் ஆண்டின் பாதிக்கும் மேற்பட்ட நாட்கள் அடைக்கப்பட்டுவிடும்.

அதில் மிகவும் தூரம் குறைவான நிம்மு பாதம் தார்ச்சா சாலையின் நிலையும் அதுதான்.

கடுமையன பனிப்பொழிவும், கடும் குளிர் நிலவும் கால நிலையும் பெரும்பாலும் அந்தப் பகுதியை தனிமைப்படுத்தி விடுவதுண்டு.

அதனால் ஷிங்குலா பாதை வழியான நிம்மு பாதம் தார்சா சாலையின் போக்குவரத்து பல மாதங்கள் தடைபட்டுப் போவதுண்டு.

புவியியல் ரீதியான இந்த சிரமங்களை தவிர்ப்பதற்காக உருவாகும் மிக முக்கியமான வளர்ச்சித் திட்டமாகும் ஷிங்குலா சுரங்கப்பாதை திட்டம்.

ஷிங்குலா சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வரும்போது அந்தப்பாதை 365 நாட்களும் பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாறும்.

அதோடு லடாக்கின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த லேயை அடைவதற்கான மிகவும் பாதுகாப்பான மற்றும் தொலைவு குறைவான பாதையாக மாறும்.

தற்போது அடல் சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் மனாலி லே என்.ஹெச் 3 தேசிய நெடுஞ்சாலையோடு ஒப்பிடும்போது, நிம்மு பாதம் தார்ச்சா சாலையில் ஷிங்குலா சுரங்கப்பாதை அமையும்போது, நூறு கிலோமீட்டர் பயண தூரமும், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பயண நேரமும் குறையும்.

அது பொதுப்போக்குவரத்திற்கு மட்டுமல்ல, பிராந்தியத்திற்கான ராணுவ நகர்வை வேகப்படுத்தவும், ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை விரைந்து கொண்டு சேர்க்கவும் வழிவகுக்கும்.

உலகில் விரல் விட்டு எண்ண முடிந்த குளிர் பாலைவனங்களில் ஒன்றாகும் இந்தியாவின் லடாக்.

தெற்கில்  zanskar மலைகளாலும், வடக்கில் காரக்கோரம் மலைச் சிகரங்களாலும் சூழப்பட்டுள்ளது இந்தப்பகுதி.

இமாலயத்தின் மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள இந்த குளிர் பாலைவனம் உயிரியல் பன்முகத்தன்மையாலும் மக்களின் வேறுபட்ட வாழ்க்கை முறையாலும் , கலாச்சாரத்தாலும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து வேறுபட்டுள்ளது.

அதனால் இந்தப் பகுதி வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

லடாக் அனுபவம் மிகவும் உற்சாகமானது என்றாலும் தற்போதைய நிலையில் அங்கு சென்று சேர்வது அவ்வளவு சுலபமானதல்ல.

போக்குவரத்தை தடை செய்யக்கூடிய பனிப்பொழியும், நிறைய சுரங்கங்களும் அதற்கான காரணமாகும்.

ஆனால் ஷிங்குலா சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வருவதோடு அந்த நிலைமை மாறும்.

அது அங்கு சுற்றுலாத்துறைக்கும், தொழிற்துறைக்கும், உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆண்டு முழுவதும் ட்ரெக்கிங்க், மலையேற்றம் போன்ற சாகச பயணங்களுக்கான வாய்ப்பயும் உருவாக்கும் ஷிங்குலா சுரங்கப்பாதை.

எல்லாக் கால நிலையிலும் பயன்படுத்த முடிந்ததும், கூடுதல் பாதுகாப்பானதும் ஆன இந்தப் பாதை, அங்குள்ள மக்களின் ஆரோக்கியம், கல்வி, உட்பட பல வசதிகளை மேம்படுத்தி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்.

இவ்வாறு ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கும் ஷிங்குலா சுரங்கப்பாதையைக் கட்டமைக்கும் பணியில் நிறைய சிக்கல்களும் உள்ளன.

கடுமையான பனிப்பொழிவு, மைனஸ் 40 டிகிரி வரையிலான கடும் குளிர், கடுமையான பனிப்போழிவு போன்ற விசயங்கள் ஆண்டின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் சுரங்கக் கட்டுமானப் பணியை பாதிப்பதாக அமையும்.

சாதாரணப் போக்குவரத்தே சிரமம் எனும் நிலையில் சுரங்க கட்டுமானப் பணிக்கு எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும்.

ஏற்றங்களும், சென்று சேரவே சிரமும் ஆன மலைப்பகுதிக்கு நவீன சுரங்க கட்டுமான எந்திரங்களையும், தேவையான மற்ற வசதிகளையும் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான விசயமாகும்.

மற்றொரு முக்கியமான சவால் சுரங்கம் அமையும் இடத்தின் உயரமாகும்.

அதிக உயரத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் என்பதால், சுரங்கப்பாதை கட்டுமானத்தில் ஈடுபடுத்தப்படும் எந்திரங்கள் மற்றும் தொழிலாளர்களின் செயல் திறனைக் குறைக்கும்.

காரணம் அதை கட்டமைக்கும் பொறுப்பை எதுவும் எங்கும் சாத்தியம் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டுள்ள பார்டர் ரோட் ஆர்கனைஷேசன் ஏற்று நடத்துகிறது என்பதால், அது சிரமமான ஒரு திட்டம்தான் என்றாலும் அது அசாத்தியமற்ற ஒன்றல்ல.

ஷிங்குலா சுரங்கப்பாதையின் கட்டுமானம், இந்தியாவின் அடிப்படை வசதியில், குறிப்பாக லடாக் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ஒரு முதன்மையான முன்னேற்றமாக அடையாளப்படுத்தப்படும்.

இந்த சுரங்கம் பொதுமக்கள், மற்றும் ராணுவ போக்குவரத்திற்கு சக்தியளித்து, பிராந்தியத்தின் இணைப்பில் புரட்சிகரமான மாற்றம் ஏற்படக் காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பயன்பாட்டிற்கு வரும்போது இந்தியாவின் பொறியியல் பன்முகத் தன்மைக்கும், எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான பொறுப்பை நிறைவேற்றியதற்கும் ஆதாரமாக அமையும் இந்த சுரங்கப்பாதை.

இது வெறும் ஒரு அடிப்படை வசதியை மேம்படுத்துவதற்கான திட்டம் மட்டுமல்ல.

மாறாக புவியியல் ரீதியான தடைகளைத் தாண்டி, வலிமையான கூடுதல் பந்தமுள்ள ஒரு நாட்டை கட்டமைப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டிற்கான ஒரு அடையாளமும் கூடவாகும் இந்த சுரங்கப்பாதை…..

ஜெய்ஹிந்த்

Join WhatsApp

Join Now
---Advertisement---

Leave a Comment