இந்தியா சீனா உறவு மேம்படும் வகையில், எல்லை பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வு ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு தீர்வு காணவும், 2020 க்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலைக்குத் திரும்பவும், ரோந்து செல்வதை மீண்டும் தொடரவும் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவும் சீனாவும் எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற முன்வந்துள்ளதை வரவேற்கிறோம் என்று, அது குறித்து அமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது இப்போது.
அமெரிகா நிலைமையைக் கண்காணித்து வருகிறது என்றும், அந்த விசயம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவ்வார்த்தை நடத்தியதாகவும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மாத்திவ் மில்லர் கூறியுள்ளார்.
இந்தியா சீனா எல்லைப் பகுதிகளில் நடக்கும் விசயங்களை உன்னிப்பாகக் கன்னானித்து வருகிறோம், அசல் எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து ராணுவங்களைப் பின்வாங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக அறிய முடிகிறது.
எனவே எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சியை வரவேற்கிறோம் என்றெல்லாம் கூறியுள்ளது அமெரிக்கா.
அதே நேரம், ராணுவங்களைப் பின் வாங்கும் இந்த நடவடிக்கைக்குப் பின்னில், அமெரிக்கா எந்த விதத்திலும் தலையிடவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ இல்லை என்றும் கூறியுள்ளார் மாத்தீவி மில்லர்.
அதாவது அமெரிக்காவின் தலையீடு இருந்திருக்கவில்லை, இந்த முடிவு அமெரிக்காவிற்கு தெரிந்திருக்கவில்லை என்று கூறியுள்ளது அமெரிக்கா.
இதற்கிடையில் அமெரிக்கா அதன் இந்தோ பசிஃபிக் பிராந்தியக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதோ, என்ற விதத்தில் பேசத் தொடங்கியுள்ளார்கள் அங்குள்ள சில பாதுகாப்பு வல்லுணர்கள்.
அதே நேரம் சீனாவை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா இந்தியாவுடன் உருவாக்கிய நட்பில் எங்கோ தவறு நடந்துள்ளது என்றும் சிலர் அமெரிக்க அரசை விமர்சிக்கிறார்கள்.
இந்தியாவுடன் கூட்டணி சேர்ந்து சீனாவை எதிர்கொள்ளலாம் என்பது அமெரிக்காவின் ஒரு தவறான புரிதல் என்று ஒரு விமர்சனம் உள்ளது.
அதே நேரம் இந்தியாவுடனான நட்பை தக்கவைக்கத் தவறியுள்ளது அமெரிக்கா என்ற மற்றொரு விமர்சனமும் உள்ளது.
அதனால்தான் இப்போது இந்தியா சீனா இடையேயான பிரச்சினை தீர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்தியா சீனா விசயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு

சீனாவை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான், அமெரிக்கா இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியது.
ஆனால் அதற்கிடையிலும், இந்தியா அதிகம் வலிமையடையக் கூடாது என்றே நினைத்தது அமெரிக்கா.
அதாவது, முன்பு சோவியத் யூனியனை எதிர்கொள்வதற்காக சீனாவுடன் நட்புப் பாராட்டியது அமெரிக்கா. சீனாவில் பெருமளவில் முதலீடுகளைச் செய்தது. அதன் காரணமாக சீனா பெரும் வளர்ச்சியடைந்தது.
இன்நிலையில் சீனாவை எதிர்கொள்வதற்காக இந்தியாவை துணைக்கு பிடிக்கிறது அமெரிக்கா. ஆனால் இம்முறை இந்தியா சீனாபோல் வளர்ச்சியடைந்து விடக் கூடாது என்று நினைக்கிறது.
சீனா எவ்வாறு வளர்ச்சியடைந்து, இன்று அமெரிக்காவிற்கே சவால் விடுகிறதோ, அதுபோல் இந்தியாவும் வளர்ச்சியடைந்து மற்றொரு சீனாவாக இருந்து விடக் கூடாது என்று கருதுகிறது அமெரிக்கா.
அதேநேரம் சீனாவை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் துணை வேண்டும் என்றும் கருதுகிறது, அதனால்தான் பல நாடகங்களை அரங்கேற்றுகிறது.
அதனால் சொல்லும் அளவுக்கான முதலீடுகள் அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவிற்கு வரவில்லை என்பதுதான் உண்மையாகும்.
அமெரிக்க முதலீடுகள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு அதிகளவில் முதலீடுகள் கிடைக்க வேண்டாம், அல்லது கிடைக்கக் கூடாது என்பதும் அமெரிக்காவின் விருப்பமாகும்.
அமெரிக்காவின் சைனா பிளஸ் ஒன் பாலிசி
அதனால்தான் அவர்கள் சீனாவை விட்டு வெளியேற முடிவு செய்தாலும், சைனா பிளஸ் ஒன் என்ற கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்கள். அதிலும் சைனா பிளஸ் இந்தியா என்று வைக்கவில்லை. சைனா பிளஸ் ஒன் என்று அந்தக் கொள்கைக்கு பெயர் வைத்துள்ளார்கள்.
சீனாவை மட்டுமே சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதற்காக, அங்கு உற்பத்தி நடக்கும்போதே, சீனாவோடு மற்றொரு நாட்டிலும் உற்பத்தியைத் தொடங்குவதாகும் இந்த சைனா பிளஸ் ஒன் கொள்கை.
அதாவது சைனாவிலும் வேறு ஒரு நாட்டிலும் உற்பத்தி என்பதாகும் அதன் சுருக்கம். அப்படி வரும்போது, இன்று சீனாவிற்கு மாற்றாக அனைத்து வளங்களையும், சாத்தியங்களையும், சிறந்த சூழல்களையும் கொண்டுள்ள நாடு இந்தியாதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் இந்த அமெரிக்கா, சைனா பிளஸ் இண்டியா என்ற கொள்கையை எடுக்கவில்லை, மாறாக சைனா பிளஸ் ஒன் என்று அந்தக் கொள்கைக்கு பெயர் வைத்தார்கள்.
காரணம் சைனா பிளஸ் ஒன் எனும்போது, சைனாவில் இதுவரையுள்ள முதலீட்டின் அதே அளவு மற்ற நாட்டிற்கும் கிடைக்கும். அப்படியாகும்போது அது இந்தியாவிற்கு மட்டுமாக கிடைத்து விடக் கூடாது,
இந்தியா சீனாவைப் போல் வளர்ந்து நாளை அமேரிக்காவிற்கு ஒரு சவாலாக அமைந்து விடக் கூடாது எனும் நோக்கத்தில்தான், சீனா பிளஸ் ஒன் எனும் கொள்கையின் படி, அதை ஏதேனும் ஒரு நாட்டில் முதலீடு செய்வதென்று பொருளாக்கியுள்ளார்கள்.
அவ்வாறு முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக மட்டும் இந்தியாவை வைத்துள்ளார்கள் அவர்கள். இந்தியா தவிர, வியட்னாம், தென் கொரியா, மெக்சிகோ போன்ற நாடுகளையும் சைனா பிளஸ் ஒன் பாலிசியில் முன்னுரிமை பெறும் நாடுகளாக வைத்துள்ளது அமெரிக்கா.
வியட்னாமில் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றாலும், இந்தியாவோடு ஒப்பிடும்போது மக்கள் தொகை மிகவும் குறைவாகும். அப்படியாகும்போது அங்கு தொழிலாளர்கள் கிடைப்பது இந்தியா அளவுக்கு இருக்காது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
அதேபோல், இந்தியாவை விட அங்கு மேம்பட்ட உட்கட்டமைப்பு உள்ளதாக பல அமெரிக்க நிறுவனங்கள் கருதுகின்றன.
அதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளும் உலகில் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடுகளாகும்.
அதோடு நீண்டகாலம் இந்தியாவை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உட்கட்டமைப்பை, அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கவில்லை.
அதனால் இந்த நாட்டை பல இடங்களில் அவமானப்படச் செய்துள்ளதும் அவர்களின் ஒரு சாதனையாகும்.
ஆனால் வியட்னாம் போன்ற நாடுகள் உட்கட்டமைப்பை நல்ல விதத்தில் மேம்படுத்தியுள்ளன.
முக்கியமான சீன நகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏதுவான ஒரு இலக்காகவும் வியட்னாம் அமைந்துள்ளது.
அதுவும் பல நிறுவனங்கள் வியட்னாமைத் தேர்வுசெய்யக் காரணமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவிற்கும் பல நிறுவனங்கள் வந்துள்ளன என்பதுதான் உண்மை.
இந்தியாவிற்கு மட்டுமல்ல, பல நிறுவனங்கள், ஜப்பானுக்கும், தென் கொரியவிற்கும், மெக்ஸிகோவிற்கும் சென்றுள்ளன.
அவ்வாறு பல இடங்களுக்கு முதலீடுகள் பிரிந்து சென்று விட்டதால், இந்தியா எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் வரவில்லை.
அமெரிக்கா சீனாவை எதிர்கொள்வதற்காக இந்தியாவுடன் உறவாடுகிறது. ஒரு வகையில் இந்தியா சீனா இடையேயான பகைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறது என்று சொல்லலாம்.
அதே நேரம் இந்தியா அமெரிக்காவுடன் உறவாடக் காரணம், அமெரிக்காவுடன் நல்ல நட்பைத் தொடர்ந்தால் பெருமளவில் முதலீடுகள் வரும் என்பதுதான்.
இந்தியாவிற்கு பெருமளவில் முதலீடுகள் வந்துள்ளன, இங்கு உற்பத்தி அதிகரித்துள்ளது, ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பதெல்லாம் சரிதான்.
ஆனாலும் இந்தியா எதிர்பார்த்த அளவுக்கு முத்லீடுகள் வரவில்லை என்பதுதான் உண்மையாகும்.
அதற்கிடையில் கேனடாவுடன் ஒரு பிரச்சினை உருவானபோது, அமெரிக்கா பின்னில் இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக நகர்வுகளை மேற்கொண்டது.
பன்னும் என்ற பயங்கரவாதி விசயத்தைக் கூறி இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்க முயற்சித்தது அமெரிக்கா.
அதே நேரம் வங்கதேசத்தில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருந்ததை புரிந்து கொண்டது இந்தியா.
அத்தகைய அமெரிக்காவின் தலையீடுகளில் இந்தியா மிகுந்த அதிருப்தியடைந்தது.
இதையும் பாருங்கள்: இந்தியா சீனா எல்லை வைப்ரண்ட் வில்லேஜஸ் திட்டம்!
அதனால், அடுத்து அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்தாலும், கமலா ஹாரிசே வந்தாலும் இந்தியாவிடம் இருந்து அதிக சலுகைகளை எதிர்பார்க்க வேண்டாம் என்ற நிலை உருவாகியுள்ளது இப்போது.
இந்தியாவின் மிகப்பெரிய சந்தையையும், இளைஞர் சக்தியையும் வைத்து அமெரிக்காவிடம் இருந்து எதையும் சாதிக்க முடியும்.
அப்படி இருக்க சீனாவுடனான பகைமை காரணமாக இந்தியாவிற்கு அமெரிக்காவிடம் இருந்து எந்த வித சாதகமும் ஏற்படப் போவதில்லை.
சோவியத் யூனியனை எதிர்கொள்வதறாக சீனாவிற்கு எந்தளவு அமெரிக்காவிடம் இருந்து நன்மை கிடைத்ததோ, அது இப்போது இந்தியாவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகும்.
நிறைய அமெரிக்க நிறுவனங்கள் இப்போதும் சீனாவைச் சார்ந்தே உள்ளன.
அதனால் சீனாவிற்கு எதிராக ஓரளவுக்கு மேல் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது.
அவ்வாறு செய்தால் அமெரிக்காவின் வர்த்தகம் பாதிக்கப்படும்.
அமெரிக்காவின் நிலை நிற்பும் வசதியும் வர்த்தக நோக்கங்களில்தான் உள்ளது.
பெரும்பாலான வர்த்தகம் அமெரிக்காவில் இருந்து நேரடியாக நடக்கவில்லையே தவிர, சீனாவில் உற்பத்தியாகும் பெரும்பாலான தயாரிப்புக்கள் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புக்களாகும்.
அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து, அங்கு உற்பத்தி செய்துதான் உலகம் முழுவதற்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது.
அதன் மூலம் சீனாவிற்கும் லாபம் உள்ளது, அமெரிக்காவிற்கும் லாபம் உள்ளது.
அதிலும் அதிக லாபம் அமெரிக்காவிற்குத்தான் கிடைக்கும்.
அப்படி உள்ள நிலையில், சீனாவைப் போன்ற ஒரு நாட்டை அவ்வளவு எளிதில் பகைத்து விடாது அமெரிக்கா.
ஒருவேளை சீனா தாய்வானைக் கைப்பற்றினாலும், இப்போது தய்வானை உசுப்பேற்றி விடும் அமெரிக்கா அப்போது பெரியளவில் எதையும் செய்ய வாய்ப்பில்லை.
மென்மையான போக்கையே கடைபிடிக்குமே தவிர, சீனா தாய்வானைக் கைப்பற்றியதற்காக, தாய்வானை மீட்பதற்காக என்று ஒரு மூன்றாம் உலகப்போரை அமெரிக்கா உருவாக்கி விடப்போவதில்லை.
எனவே சீனாவுடனான பகைமை காரணமாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவிறு எதுவும் கிடைக்கப் போவதில்லை.
சீனாவுடனான பகைமை இல்லாமலேயே, நமது அரசின் வலிமையும், பிராந்திய சக்தியாக இந்தியாவின் வலிமையும், உலகளவில் இந்தியாவிற்குள்ள வரவேற்பும், எல்லாம் கொண்டு அமெரிக்காவிடம் பேசி எதையும் சாதிக்க முடியும்.
அப்படி இருக்க இப்போது சீனா தாமாக முன்வந்து பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கேட்கும்போது, அதற்கு ஒத்துழைப்பதால் இந்தியாவிற்கு பல நன்மைகள் உள்ளன.
ரஷ்யாவும், சீனாவும் இந்தியா சீனா இடையேயான முறுகல் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பின.
காரணம் சீனாவும் இந்தியாவில் அதிகளவில் முதலீடுகளைச் செய்ய விரும்புகிறது.
நாம் அமெரிக்கா விசயத்தில் கூறியதுபோல் உலகின் மிகப்பெரிய சந்தையாக உள்ள இந்தியாவில், அமெரிக்கா லாபம் கொய்வதை சீனாவால் சகித்துக்கொள்ள முடியாது.
காரணம் இப்போதே பல தடைகள் உள்ளதால், எதிர்காலத்தில் இந்தியச் சந்தையில் சீனாவின் நிலை நிற்பே கேள்விக்குறியாக்கும் என்று அஞ்சுகிறது சீனா.
அதனால் இந்தியாவுடன் சுமுகமான உறவே மேமப்டுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறது அன்நாடு.
அதனால் சுமுகமான உறவின் மூலம், சீனா அதிகளவில் இந்தியாவில் முதலீடு செய்தால்,
இன்று அமெரிக்கா சீனாவிடம் எவ்வாறு அடக்கி வாசிக்கிறதோ, அல்லது சீனா எவ்வாறு அமெரிக்காவை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறதோ,
அதுபோல் எதிர் காலத்தில் இந்தியாவால் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
காரணம் சீன நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவில் முதலீடுகளைச் செய்தால், பின்னர் சீனா இந்தியாவிற்கு எதிராக செயல்பட முடியாத நிலை எதிர்காலத்தில் உருவாகும்.
எனவே பாதுகாப்புத்துறை தொடர்பான துறைகளைத் தவிர மற்ற துறைகளில் சீனாவுடன் ஒத்துழைத்து, முதலீடுகளை வரவேற்று, முன்னேற்றம் காண்பதற்கான ஒரு புதிய மூலோபாய தந்திரத்தை கையாள்கிறது இந்தியா இப்போது.
அதற்கான மிக முக்கியமாக காரணம் அமெரிக்காதான்.
அமெரிக்காவை ஒருபோதும் நம்ப முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபனமாகிறது,.
அதனால் அமெரிக்காவையும் பகைத்துக் கொள்ளாமல், அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்று அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைத்து,
பிரச்சினைகளைக் குறைத்து, நமது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து முன்னேறுகிறது இந்தியா.
சீனா 90 களிலும், 2000லும் எல்லாம் சீனா என்ன செய்ததோ, அதுபோல் அமைதியாக இருந்து கொண்டு, எந்த வழிகளில் எல்லாம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டுவர முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் முதலீடுகளைக் கொண்டுவருவதுதான் இந்தியாவின் இப்போதைய தந்திரமாகும்.
அது அமெரிக்காவில் இருந்து வந்தாலும் சரி, சீனாவிலிருந்து வந்தாலும் சரி, ரஷ்யாவில் இருந்து வந்தாலும் சரிதான்.
ஆனால் இந்தியா இவ்வாறு செய்யும் என்று அமெரிக்கா எதிர்பார்த்திருக்கவில்லை.
இந்தியா கண்மூடித்தனமாக சீனாவுடனான பகைமையைத் தொடரும் என்றும், அதை வைத்து இந்தியாவைப் பயன்படுத்தி சீனாவிறு எதிராக விளையாடலாம் என்று கருதியது அமெரிக்கா.
ஆனால் அமெரிக்காவின் அந்த மோகத்திற்கு, இந்தியாவின் இப்போதையை நகர்வின் மூலம் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா சீனா உறவு சிறியளவில் மேம்பட்டாலும், அது அமெரிக்காவின் இந்தோ பசிஃபிக் நோக்கத்தை பாதிக்கும்.
குவாட் கூட்டமைப்பு கூட வலிமையிழக்கும் நிலை ஏற்படும்.
குவாடை ஒரு ராணுவக் கூட்டமைப்பாக மாற்றுவது, அல்லது, ஒரு ஏசியன் நேட்டோ கூட்டமைப்பை உருவாக்குதல், போன்ற அமெரிக்காவின் கனவுகளை உடைத்தெறிந்துள்ளார் மோடி இப்போது.
அதை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டுதான், இப்போது, இந்தியா சீனா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதை வரவேற்கிறோம், அதில் அமெரிக்கா பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை, தலையிடவும் இல்லை என்று கூறியுள்ளது.
இந்தியாவின் திறப் அடிப்படையில் இந்தியா சீனாவை விட வலிமையான நாடாக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.
ஆனால் அவ்வாறு ஒரு சூப்பர் பவர் நாடாக இந்தியா வளர்ச்சியடைவதை அமெரிக்கா விரும்பவில்லை.
சீனாவில் இருந்து வெளியேறினாலும், அதன் வர்த்தகத்தை வேறு பலவீனமான நாடுகளுக்கும் கொண்டு செல்கிறது.
ஒருபோதும் சீனாவோடு நேரடியாக அமெரிக்கா மோதப்போவதில்லை, இந்தியாவை வைத்து சீனாவிற்கு எதிராக விளையாட நினைக்கிறது அமெரிக்கா என்பதைப் புரிந்து கொண்டு,
நமது நாடும் புத்திசாலித்தனமாக் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்கா அதன் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியபோது, இந்தியாவும் சீனா மிகத்தீவிரமான எதிரி என்ற நிலையில் இருந்து சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியது.
அது அமெரிக்காவின் விருப்பங்கள், அல்லது திட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத அனைத்து துறைகளிலும் இனி இந்தியா சீனாவின் முதலீட்டை வரவேற்கக் கூடிய வாய்ப்புள்ளது.
அதிகபட்சமாக இங்கு முதலீடுகளைக் கொண்டுவந்து, உற்பத்தியை அதிகரித்து, இங்கிருந்து ஏற்றுமதியைச் செய்ய வேண்டும்.
அந்த திட்டத்தைக் கையாண்டால் எதிர்காலத்தில் சீனாவை நமது சொல்படி நிற்க வைக்க முடியும்.
என்னவானாலும் இந்தியாவின் இப்போதைய கொள்கை மாற்றம் ஒரு நல்ல விசயம்தான்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ் என்று எங்கிருந்து நமக்கு சாதகமான என்ன விசயம் கிடைத்தாலும் அதைப் பெற்று முன்னேற்றமடைவது சிறந்த வழியாகும்.
எனவே எந்த நாட்டுடனும் பகைமையும் வேண்டாம், அதே நேரம் நமது நலன் சார்ந்த விசயங்களில் சமரசம் செய்து கொண்டு எவருடைய உறவும் வேண்டாம்…..
இந்தியாவின் தேவை இன்று உலகம் முழுவதற்கும் உள்ளது…..
ஜெய்ஹிந்த்